இயேசுதான் சர்வவல்லமையுள்ள கடவுளா?
பைபிள் தரும் பதில்
இயேசு தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொண்டதாக அவருடைய எதிரிகள் அவர்மேல் குற்றம்சாட்டினார்கள். (யோவான் 5:18; 10:30-33) ஆனால், சர்வவல்லமையுள்ள கடவுளும் தானும் சமம் என்று இயேசு ஒருபோதும் சொன்னதே இல்லை. “என் தகப்பன் என்னைவிட பெரியவர்” என்றுதான் அவர் சொன்னார்.—யோவான் 14:28.
இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் அவரைச் சர்வவல்லமையுள்ள கடவுளுக்குச் சமமானவராகப் பார்க்கவில்லை. உதாரணத்திற்கு, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, “கடவுள் அவரை [இயேசுவை] மேலான நிலைக்கு உயர்த்தினார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். இயேசுதான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று பவுல் நம்பவில்லை என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. இயேசுதான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்றால், அவரை எப்படிக் கடவுள் மேலான நிலைக்கு உயர்த்தியிருக்க முடியும்?—பிலிப்பியர் 2:9.