Skip to content

காமவெறியர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருக்கலாம் என்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொடுக்கிறார்கள்

காமவெறியர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருக்கலாம் என்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொடுக்கிறார்கள்

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை நேசிக்க வேண்டும், வழிநடத்த வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று பைபிள் அறிவுரை சொல்கிறது. பிள்ளைகளை கடவுள் தந்த பரிசாக பார்க்கவும் பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (சங்கீதம் 127:3; நீதிமொழிகள் 1:8; எபேசியர் 6:1-4) இன்று இருக்கும் நிறைய ஆபத்துகளிலிருந்து பிள்ளைகளை பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. பாலியல் கொடுமைகளும் அதில் ஒன்று.

குடும்ப உறவுகள் செழித்தோங்குவதற்கு தேவையான தகவல்களையும் பிரசுரங்களையும் யெகோவாவின் சாட்சிகள் பல பத்தாண்டுகளாக, வெளியிட்டு விநியோகித்திருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பாலியல் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பதற்கும், அவற்றைப் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதற்கும் அந்தத் தகவல்கள் உதவியிருக்கின்றன. இந்த விஷயத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட சில கட்டுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எத்தனை பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன என்பதையும், அவை எத்தனை மொழிகளில் கிடைக்கின்றன என்பதையும் கவனியுங்கள். *

  • தலைப்பு: இரத்த சொந்தங்களோடு உடலுறவு-மறைந்திருக்கும் குற்றம்

    • பிரசுரம்: பிப்ரவரி 8, 1981, விழித்தெழு! (ஆங்கிலம்)

    • எண்ணிக்கை: 78,00,000

    • மொழிகள்: 34

  • தலைப்பு: இரத்த சொந்தங்களோடு உடலுறவு—பாதிக்கப்பட்டவருக்கு உதவி

    • பிரசுரம்: அக்டோபர் 1, 1983, காவற்கோபுரம் (ஆங்கிலம்)

    • எண்ணிக்கை: 1,00,50,000

    • மொழிகள்: 102

  • தலைப்பு: குழந்தை பாலியல் வன்கொடுமை—ஒவ்வொரு தாயின் பெரும் கவலை; குழந்தை பாலியல் வன்கொடுமை—‘இவ்வளவு மோசமான ஒரு விஷயத்தை யார் செய்வார்கள்?’; குழந்தை பாலியல் வன்கொடுமை—உங்கள் பிள்ளைகளை உங்களால் பாதுகாக்க முடியும்

    • பிரசுரம்: ஜனவரி 22, 1985, விழித்தெழு! (ஆங்கிலம்)

    • எண்ணிக்கை: 98,00,000

    • மொழிகள்: 54

  • தலைப்பு: குழந்தை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பிஞ்சுகள்; குழந்தை பாலியல் வன்கொடுமையால் ஏற்படும் பாதிப்புகள்

    • பிரசுரம்: அக்டோபர் 8, 1991, விழித்தெழு! (ஆங்கிலம்)

    • எண்ணிக்கை: 1,29,80,000

    • மொழிகள்: 64

  • தலைப்பு: உங்கள் குழந்தை ஆபத்தில் இருக்கிறது!; நாம் எப்படி நம் பிள்ளைகளைப் பாதுகாக்கலாம்?; வீட்டில் நடக்கும் ஆபத்திலிருந்து பிள்ளைகளை எப்படிப் பாதுகாப்பது?

    • பிரசுரம்: அக்டோபர் 8, 1993, விழித்தெழு! (ஆங்கிலம்)

    • எண்ணிக்கை: 1,32,40,000

    • மொழிகள்: 67

  • தலைப்பு: உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்திடுங்கள் (ஆங்கிலம்)

    • பிரசுரம்: பொது சேவை அறிவிப்பு வீடியோ எண் 4, 2002-ல் வெளியிடப்பட்டது

    • மொழிகள்: 2

  • தலைப்பு: இயேசு எப்படி பாதுகாக்கப்பட்டார்

  • தலைப்பு: பெற்றோரை பயமுறுத்தும் பயங்கரம்!; உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பது எப்படி?; பாசமான குடும்பம் பாதுகாப்பின் உறைவிடம்

    • பிரசுரம்: அக்டோபர் 2007 விழித்தெழு!

    • எண்ணிக்கை: 3,42,67,000

    • மொழிகள்: 81

  • தலைப்பு: காமவெறியர்களிடமிருந்து என்னை எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம்? பெற்றோர் கேட்கும் கேள்விகள்: செக்ஸைப் பற்றி என் பிள்ளையிடம் நான் பேச வேண்டுமா?

    • பிரசுரம்: அதிகாரம் 32 மற்றும் பிற்சேர்க்கை, இளைஞர் கேட்கும் கேள்விகள் – பலன்தரும் பதில்கள், பகுதி 1, 2011 (ஆங்கிலம்)

    • எண்ணிக்கை: 1,83,81,635

    • மொழிகள்: 65

  • தலைப்பு: செக்ஸைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்?

    • பிரசுரம்: jw.org வெப்சைட்; இந்த கட்டுரை செப்டம்பர் 5, 2013 அன்று வெளியிடப்பட்டது

    • மொழிகள்: 64

காமவெறியர்களிடமிருந்து வரும் ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து சொல்லிக்கொடுக்கிறார்கள்.

^ பாரா. 3 வெளியிடப்பட்ட தேதிகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தேதிகளைக் குறிக்கிறது.