Skip to content

பெத்தேலைச் சுற்றிப் பார்க்க

எங்களது கிளை அலுவலகங்களை சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம், அவற்றை நாங்கள் பெத்தேல் என்று அழைக்கிறோம். எங்களுடைய சில கிளை அலுவலகங்களில் எந்த வழிகாட்டியும் இல்லாமல் சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் கண்காட்சியும் இருக்கிறது.

பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு மறுபடியும் தொடக்கம்: நிறைய நாடுகளில் பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு ஜுன் 1, 2023 முதல் மறுபடியும் தொடங்கியது. இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள நீங்கள் சுற்றிப் பார்க்க விரும்பும் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு கோவிட்-19 தொற்று இருந்தாலோ சளி, காய்ச்சல் இருந்தாலோ அல்லது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரை சமீபத்தில் நீங்கள் சந்தித்திருந்தாலோ தயவுசெய்து சுற்றிப் பார்க்க வர வேண்டாம்.

உக்ரைன்

கண்காட்சி

டூர் கைடோடு சுற்றி பார்ப்பதோடு, இன்னும் இரண்டு கண்காட்சிகளையும் நீங்கள் பார்க்கலாம். ஒரு கண்காட்சி, உக்ரைனில் நடக்கும் ஊழிய வேலையின் சரித்திர சுவடுகளை விவரிக்கும். கிட்டத்தட்ட 100 வருஷங்களுக்கு முன்பு, இந்த நாட்டில் ஊழிய வேலை ஆரம்பித்தது. சோவியத் யூனியனின் பாகமாக உக்ரைன் இருந்தபோது, யெகோவாவின் சாட்சிகள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதையும் ஆயிரக்கணக்கானவர்கள் எப்படி சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள் என்பதையும் நீங்கள் இந்த கண்காட்சியில் பார்க்கலாம். அடுத்த கண்காட்சியில் மிக அரிய பைபிள்கள் இருக்கின்றன. அதோடு, ரஷ்ய மற்றும் உக்ரைன் பைபிள் மொழிபெயர்ப்புகளில் யெகோவாவின் பெயர் எப்படி பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நீங்கள் பார்க்கலாம். பார்வையாளர்கள், கட்டிடங்களுக்கு வெளியே தாங்களாகவே போய் சுற்றிப்பார்க்கலாம். விருந்தினர் மையத்தில் நேரத்தை செலவு செய்யலாம்.

முகவரி மற்றும் தொலைப்பேசி எண்

வழி தெரிந்துகொள்ள