Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Ismail Sen/Anadolu Agency via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்—பைபிள் என்ன சொல்கிறது?

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்—பைபிள் என்ன சொல்கிறது?

 பிப்ரவரி 6, 2023, திங்கள்கிழமை அன்று, பயங்கரமான நிலநடுக்கம் துருக்கியையும் சிரியாவையும் புரட்டிப் போட்டது.

  •    “திங்கள்கிழமை அன்று, துருக்கியின் பெரும் பகுதியையும் வடமேற்கு சிரியாவையும் உலுக்கிய பயங்கரமான நிலநடுக்கத்தால் 3700-க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கிறார்கள். உறைய வைக்கும் குளிர்காலம் என்பதால், படுகாயமடைந்த ஆயிரக்கணக்கானவர்களும் வீடுகளை இழந்தவர்களும் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.”—ராய்ட்டர்ஸ், பிப்ரவரி 6, 2023.

 இப்படிப்பட்ட பயங்கர சம்பவங்கள் நம் நெஞ்சை பிளக்கிறது. இந்த மாதிரியான சமயங்களில், ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளான’ யெகோவாவிடமே ஆறுதலுக்காக நாம் போகலாம். (2 கொரிந்தியர் 1:3) “வேதவசனங்கள்” மூலம் அவர் நமக்கு ‘ஆறுதலையும் நம்பிக்கையையும்’ தருகிறார்.—ரோமர் 15:4.

 பைபிளில் இருந்து இவற்றை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்:

  •    நிலநடுக்கங்களை பற்றி முன்கூட்டியே சொல்லப்பட்ட விஷயங்கள்...

  •    உண்மையான ஆறுதலையும் நம்பிக்கையையும் கண்டுபிடிப்பது எப்படி...

  •    கடவுள் எப்படி வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்...

 இவற்றை பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள, இந்த கட்டுரைகளை பாருங்கள்:

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.