பைபிளை வாசிப்பதற்கான திட்டம்
நம் வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த அறிவுரைகள் பைபிளில் இருக்கின்றன. நீங்கள் தினமும் பைபிளைப் படித்து, அதைப் பற்றி ஆழமாக யோசித்து அதன்படி நடந்தால், ‘வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.’ (யோசுவா 1:8; சங்கீதம் 1:1-3) அதோடு, கடவுளைப் பற்றியும் அவருடைய மகன் இயேசுவைப் பற்றியும் கற்றுக்கொள்வீர்கள், அது உங்களுக்கு மீட்பைக் கொடுக்கும்.—யோவான் 17:3.
நீங்கள் பைபிள் புத்தகங்களை எந்த வரிசையில் படிக்க ஆரம்பிக்கலாம்? அதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. இந்தப் புத்தகங்களை பைபிளில் இருக்கும் அதே வரிசையில் படிப்பதற்கு அல்லது ஒரு தலைப்பின் அடிப்படையில் படிப்பதற்கு பைபிள் வாசிப்புக்கான அட்டவணை உங்களுக்கு உதவும். உதாரணத்துக்கு, அந்தக் காலத்து இஸ்ரவேல் மக்களோடு கடவுள் நடந்துகொண்ட விதத்தைப் பற்றிய சரித்திர பதிவை நீங்கள் படிக்கலாம். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை எப்படி உருவானது, அது எப்படி வளர்ச்சியடைந்தது என்ற பதிவையும் நீங்கள் படிக்கலாம். இப்படி ஒருசில அதிகாரங்களை நீங்கள் தினமும் படித்து வந்தால், ஒரு வருஷத்தில் முழு பைபிளையும் படித்து முடித்துவிடலாம்.
நீங்கள் தினமும் பைபிளைப் படிக்க திட்டமிட்டாலோ... ஒரு வருஷத்துக்குள் பைபிளைப் படித்துமுடிக்க திட்டமிட்டாலோ... புதிதாக பைபிளைப் படிக்க ஆசைப்பட்டு அதற்காக திட்டமிட்டாலோ... இந்த அட்டவணை உங்களுக்கு உதவும். பிரிண்ட் செய்ய முடிந்த இந்த பைபிள் வாசிப்புக்கான அட்டவணையை டவுன்லோட் செய்து, இன்றே தொடங்குங்கள்.