Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 1 2024 | மரியாதை என்ன விலை?

‘மரியாதை என்ன விலை?’ என்று கேட்கும் நிலைமைக்கு உலகம் வந்துவிட்டது. அதனால் மரியாதை காட்டுகிறவர்களை மக்கள் அதிசயப் பிறவியைப் போல் பார்க்கிறார்கள்.

இன்று நிறைய பேர் அப்பா-அம்மா, வயதானவர்கள், போலீஸ்காரர்கள், முதலாளி, டீச்சர் என யாருக்குமே துளிக்கூட மரியாதை காட்டுவதில்லை. கொஞ்சம்கூட மரியாதையே இல்லாமல் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வது சோஷியல் மீடியாவில் சர்வசாதாரணம் ஆகிவிட்டது. “மரியாதை குறைவாக மற்றவர்களை நடத்துவது இன்று அதிகமாகிக்கொண்டே வருகிறது. அது மக்களுக்கு அப்பட்டமாகவும் தெரிகிறது, அது அவர்களுக்குக் கஷ்டமாகவும் இருக்கிறது” என்று ஹாவெர்டு பிஸ்னஸ் ரிவ்யூ என்ற பத்திரிகை சொல்கிறது.

 

மற்றவர்களுக்கு ஏன் மரியாதை இல்லை?

மற்றவர்களுக்கு மரியாதை காட்டுவது ஏன் முக்கியம் என்றும் அதை நீங்கள் எப்படிக் காட்டலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

உயிருக்கு ஏன் மரியாதை இல்லை?

நம்முடைய உயிருக்கும் மற்றவர்களுடைய உயிருக்கும் மரியாதை காட்ட, பைபிள் சொல்லித்தரும் ஆலோசனையைப் பாருங்கள்.

குடும்பத்தில் ஏன் மரியாதை இல்லை?

குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவர்மேல் ஒருவர் மரியாதை காட்டினால் எல்லா குடும்பத்திலும் சந்தோஷம் இருக்கும்.

உங்கள் மேல் உங்களுக்கே ஏன் மரியாதை இல்லை?

மதிப்பு மரியாதையோடு நல்லபடியாக வாழ பைபிள் மக்களுக்கு உதவுகிறது.

மரியாதை என்ன விலை?

மரியாதையைப் பற்றியும், மரியாதை காட்ட உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் எப்படி உதவுகிறார்கள் என்பதைப் பற்றியும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.