பள்ளியில் பேச்சுக்கொடுக்க கைகொடுத்தது
பள்ளியில் பேச்சுக்கொடுக்க கைகொடுத்தது
ஜெர்மனியிலுள்ள ஒரு தொழில் பயிற்சிப் பள்ளியில் அயல்நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். இவர்கள் இந்தியா, உக்ரைன், தென் ஆப்பிரிக்கா, பிரான்சு, போலந்து, முன்னாள் யுகோஸ்லாவியா, ரஷ்யா, லெபனான், வியட்நாம், ஜார்ஜியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
அங்கு படிக்கும் ஒரு மாணவி இவ்வாறு எழுதுகிறார்: “பள்ளியில் பேச்சு கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தபோது நான் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன். ‘இளைஞர் கேட்கும் கேள்விகளுக்கு நடைமுறை பதில்கள்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்; இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்திலிருந்து பேச்சைத் தயாரித்தேன். இந்தப் புத்தகத்திலிருந்து நான் எடுத்துரைத்த விஷயங்களும் அதிலுள்ள பயன்தரும் அறிவுரைகளும் மாணவர்களின் மனதைக் கவர்ந்தன.
“நான் பேசி முடித்தவுடன், மாணவ மாணவியர் பலத்த கரகோஷத்தோடு நன்றி தெரிவித்தார்கள். மாணவ மாணவிகள் அனைவருமே மொழிகளைக் கற்றுவருவதோடு ஆங்கிலத்தையும் நன்கு புரிந்துகொள்வதால், அவர்களுக்கு இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தின் 30 ஆங்கில பிரதிகளைக் கொடுத்தேன்; அதோடு அதன் ஜெர்மன் பிரதியை ஆசிரியைக்கும் கொடுத்தேன்.”
தொடர்ந்து வந்த நாட்களில் அந்த மாணவி தன்னுடன் படிக்கும் சில மாணவ மாணவியர்களுடன் பைபிள் விஷயங்களை கலந்து பேசினாள். அவர்கள் அதிக ஆர்வமாகக் கேட்டார்கள். அரபிக், போலிஷ், ரஷ்யன், வங்காளி, வியட்னாமீஸ், ஸ்பானிஷ், ஜார்ஜியன் ஆகிய மொழிகளில் இன்னும் பல பைபிள் பிரசுரங்களையும் அவர்களுக்கு அவள் கொடுத்தாள்.
உங்களுக்குத் தெரிந்த இளைஞர் ஒருவருக்கும்கூட இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் பயனுள்ளதாக இருக்கலாம். அதிலுள்ள 39 அதிகாரங்களில் சில: “நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?,” “விவாகத்துக்கு முன்னான பாலுறவு பற்றி என்ன?,” “அது உண்மையான அன்பு என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?” இந்தப் புத்தகத்தைப்பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.
□ இங்கே காட்டப்பட்டுள்ள புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.