மதம் இல்லா உலகம் மேம்பட்ட உலகமா?
மதம் இல்லா உலகம் மேம்பட்ட உலகமா?
மதமே இல்லாத ஓர் உலகைப் பற்றி இந்த நாத்திகர்கள் கனவுகாண்கிறார்கள். தற்கொலைப் படையினர் இல்லாத... மதப் போர்கள் இல்லாத... மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் டிவி பிரசங்கிமார்கள் இல்லாத... ஓர் உலகைப் பற்றி இவர்கள் கனவுகாண்கிறார்கள்! இந்தக் கனவு நனவானால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறீர்களா?
இதற்குப் பதிலளிப்பதற்குமுன்... உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மதத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு, எல்லாருமே நாத்திகர்களாக மாறிவிட்டால் இந்த உலகம் மேம்பட்டுவிடும் என்பதற்கு ஏதாவது அத்தாட்சி இருக்கிறதா?’ வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்: கம்போடியா நாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிச நாடாக மாற்ற வேண்டி கமெர் ரூஷ் இயக்கத்தினர் நடத்திய போராட்டத்தில் கிட்டத்தட்ட 15 லட்சம் கம்போடியர்கள் மடிந்துபோனார்கள். நாத்திகம் கொடிகட்டிப் பறந்த சோவியத் ரஷ்யாவை ஜோசப் ஸ்டாலின் ஆட்சிசெய்தபோது கோடிக்கணக்கானோர் மண்ணோடு மண்ணானார்கள். நாத்திகமே இந்த அட்டூழியங்களுக்கெல்லாம் காரணம் என்று முத்திரை குத்திவிட முடியாதுதான். என்றாலும், நாத்திக ஆட்சியால் அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட முடியாது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
இவ்வுலகிலுள்ள ஏராளமான துன்பங்களுக்கு மதமே காரணம் என்பதைப் பலரும் ஒத்துக்கொள்வார்கள். இதற்குக் கடவுளைக் குற்றம்சொல்ல முடியுமா? முடியாது. ஒரு கார் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியதால் விபத்து நேரிட்டதென வைத்துக்கொள்ளுங்கள்; அதற்காக அந்த காரின் தயாரிப்பாளரைக் குற்றஞ்சொல்ல முடியுமா? அதைப் போலவே மதத்தின் பெயரில் இழைக்கப்படுகிற துன்பங்களுக்குக் கடவுளையும் குற்றஞ்சொல்ல முடியாது! மனிதர் படுகிற துன்பங்களுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன; ரோமர் 3:23) இந்தக் குறைபாடே... சுயநலம், அகம்பாவம், வன்முறை, ஒழுக்க விஷயங்களில் தன்னிச்சையாகச் செயல்படுவதற்கான ஆசை ஆகியவற்றை ஊட்டி வளர்க்கிறது. (ஆதியாகமம் 8:21) தவறுகளைப் பூசிமெழுகத் துணைபோகிற கொள்கைகளை மக்கள் நியாயப்படுத்தவும்... அவற்றினிடம் ஈர்க்கப்படவும்... காரணமாயிருப்பது இதுவே! (ரோமர் 1:24-27) அதனால்தான் இயேசுவும் இப்படிச் சொன்னார்: “இருதயத்திலிருந்தே கெட்ட எண்ணம், கொலை, மணத்துணைக்குத் துரோகம், பாலியல் முறைகேடு, திருட்டு, பொய்சாட்சி, நிந்தனை ஆகிய எல்லாத் தீமைகளும் வெளிவருகின்றன.”—மத்தேயு 15:19.
ஆனால், ஓர் அடிப்படைக் காரணம் இருக்கிறது; அது, மதக் கொள்கைகளைவிட முக்கியமானது. பிறப்பிலேயே மனிதரோடு ஒட்டிக்கொண்டு வந்திருக்கிற அபூரணம், அதாவது குறைபாடு, என அதை பைபிள் சுட்டிக்காட்டுகிறது. “எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைப் பிரதிபலிக்கத் தவறியிருக்கிறார்கள்” என்று அது சொல்கிறது. (உண்மை மதம் Vs பொய் மதம்
இந்தக் கட்டத்தில்... உண்மை மதத்திற்கும் பொய் மதத்திற்கும், அதாவது கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுகிற வழிபாட்டிற்கும் அவரால் ஏற்றுக்கொள்ளப்படாத வழிபாட்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துக்காட்டுவது முக்கியம். தவறு செய்கிற மனோபாவத்தை மேற்கொள்ள உண்மை மதம் மக்களுக்கு உதவுகிறது. சுயதியாக அன்பு, சமாதானம், கருணை, நல்மனம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு, மணத்துணைக்குத் துரோகம் செய்யாமல் உண்மையாய் இருத்தல், மற்றவர்களுக்கு மரியாதை காட்டுதல் ஆகிய குணங்களை வளர்த்துக்கொள்ள அது உதவுகிறது. (கலாத்தியர் 5:22, 23) மறுபட்சத்தில்... பொய் மதம், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிற போக்குகளுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறது; பைபிள் சொல்கிறபடி, ‘காதுகளுக்கு இனிமையாகத் தொனிக்கும் விஷயங்களை’ போதிப்பதன் மூலம் இயேசு கண்டனம் செய்திருக்கிற காரியங்களைச் செய்கிறவர்களைப் பொறுத்துக்கொள்கிறது.—2 தீமோத்தேயு 4:3.
ஒழுக்கத்தைக் குறித்ததில் பொய் மதம் ஏற்படுத்தியிருக்கிற குழப்பத்திற்கு நாத்திகத்திற்கும் பங்கு இருக்கக்கூடுமோ? ‘கடவுள் இல்லை’ என்று சொல்லும்போது... கடவுள் என்ற ஒருவருக்குக் கணக்குக் கொடுக்கவே தேவையில்லை; அதோடு, “எதார்த்தமான நியதிகளை மதிக்கவும் அவசியமில்லை என்று அர்த்தமாகிவிடுகிறது” என்கிறார் சட்டத் துறைப் பேராசிரியர் ஃபிலிப் ஜான்சன். இதனால்... ஒழுக்கம் என்பது தனிமனிதனைப் பொறுத்ததாகிவிடுகிறது; ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்தமான விதத்தில் ஒழுக்க நெறிகளை வகுத்துக்கொள்வார்கள்; அதுவும் அப்படி ஒன்று வேண்டுமென்று அவர்கள் நினைத்தால்! இதனாலேயே நாத்திகக் கொள்கையின் பக்கம் சிலர் சுண்டியிழுக்கப்பட்டிருக்கிறார்கள்.—சங்கீதம் 14:1.
ஆனால்... நாத்திகமாக இருக்கட்டும், மத நம்பிக்கையாக இருக்கட்டும், அவற்றின் பொய்க் கோட்பாடுகளையும் அவற்றைப் பரப்புகிறவர்களையும் கடவுள் காலமெல்லாம் சகித்துக்கொள்ள மாட்டார்! இந்த உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது!! * “[ஒழுக்க மற்றும் ஆன்மீக ரீதியில்] செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்” என்று அவரே சொல்லியிருக்கிறார். (நீதிமொழிகள் 2:21, 22) அந்த வாக்கு நிறைவேறும்போது... மனிதனோ, மனித தத்துவங்களோ, மனித நிறுவனங்களோ உருவாக்க முடியாத ஓர் உலகத்தை நாம் காண்போம்! அதாவது, அமைதியும் ஆனந்தமும் அசைந்தாடுகிற ஓர் உலகத்தை நாம் காண்போம்!—ஏசாயா 11:9. (g10-E 11)
[அடிக்குறிப்பு]
^ அக்கிரம அநியாயங்களையும், துன்பத்தையும் கடவுள் தற்போது ஏன் சகித்துக்கொண்டு இருக்கிறார் என்பதற்கு நியாயமான காரணத்தை பைபிளிலிருந்து தெரிந்துகொள்ள... பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 11-ஆம் அதிகாரத்தைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 6-ன் பெட்டி]
மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—கடவுளுக்கு அருவருப்பு!
பூர்வ இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த தேசத்தில் அவர்கள் குடியேறுவதற்கு முன்பு அங்கே கானானியர்கள் குடியிருந்தார்கள். அவர்கள் படுமட்டமானவர்கள். ஓரினச்சேர்க்கை, முறைதகாப் புணர்ச்சி, மிருகப் புணர்ச்சி உள்ளிட்ட பாலியல் ஒழுக்கக்கேட்டில் சகஜமாக ஈடுபட்டுவந்தார்கள். போதாக்குறைக்கு... தங்கள் பிள்ளைகளைத் தெய்வங்களுக்குப் பலியிடுவதையும் ஓர் ஆசாரமாகக் கடைப்பிடித்துவந்தார்கள். (லேவியராகமம் 18:2-27) அகழ்வாராய்ச்சியின்போது... “புறமதத்தாரின் பலிபீடங்களைச் சுற்றியிருந்த சமாதிகளில் பச்சிளங் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் சாம்பல் குவியல்களும் காணப்பட்டன; இவை, [குழந்தைகளைப் பலியிடுகிற] பழக்கம் எங்கும் பரவலாக இருந்ததையே சுட்டிக்காட்டுகின்றன” என தொல்பொருளியலும் பழைய ஏற்பாடும் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. கானானியர்கள் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டுத் தங்கள் தெய்வங்களை வணங்கினார்கள்; அதோடு, அதே தெய்வங்களுக்குத் தங்கள் தலைப்பிள்ளைகளையும் நரபலியிட்டார்கள் என்பதாக ஒரு பைபிள் கையேடு சொல்கிறது. அது மேலும் சொல்வதாவது: “கானானிய நகரங்களின் இடிபாடுகளைத் தோண்டிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்... ‘இந்த மக்களைக் கடவுள் எப்படித்தான் இவ்வளவு காலத்திற்கு விட்டுவைத்திருந்தாரோ..?’ என ஆச்சரியப்படுகிறார்கள்.”
கானானியர்களைக் கடவுள் அடியோடு அழித்ததிலிருந்து நமக்கு என்ன பாடம்? தம்முடைய பெயரில் செய்யப்படுகிற அட்டூழியங்களைக் கடவுள் காலம் காலமாய்ப் பொறுத்துக்கொண்டே இருக்க மாட்டார். “இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்” என்று அப்போஸ்தலர் 17:31 கூறுகிறது.
[பக்கம் 7-ன் படங்கள்]
மதப்பற்று உள்ளவர்களும் சரி மதப்பற்று இல்லாதவர்களும் சரி, அட்டூழியம் செய்திருக்கிறார்கள்
ஹிட்லருக்கு சர்ச் ஆதரவளித்தது
கமெர் ரூஷ் இயக்கத்தினர் நடத்திய போராட்டத்தில் மடிந்துபோனவர்களின் மண்டையோடுகள், கம்போடியா
[படத்திற்கான நன்றி]
AP Photo