சின்னஞ்சிறுசுகளுக்குக்கூட புரியும்
சின்னஞ்சிறுசுகளுக்குக்கூட புரியும்
● பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தில் விவரிக்கப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வசிக்கிற ஒரு தாய் இப்படித்தான் எழுதினாள். அவள் விளக்குகிறாள்: “என் மகன் ஜேவனுக்கு 3 வயது. போன வாரம் நான் அவனை குழந்தைநல மருத்துவரிடம் கொண்டுபோய் காட்டினேன். அப்போது, ‘பிறப்புறுப்புகள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க நீங்களும் உங்கள் கணவரும் ஜேவனுக்குச் சொல்லிக் கொடுத்தீர்களா?’ என அவர் எங்களிடம் கேட்டார். போதகர் புத்தகத்தைப் பற்றி நான் அவருக்கு ஆர்வமாக விளக்கினேன்; ஒருவருடைய பிறப்புறுப்புகளைத் தொட்டு விளையாடுவது தவறு என்று அது விளக்குவதாகச் சொன்னேன். இந்த விஷயத்தைப் பற்றி நாங்கள் அவனிடம் பேசியதற்காக அவர் ஆச்சரியப்பட்டார்.”
“இந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி பிள்ளைகள் புரிந்துகொள்ளுகிற விதத்தில் மிகத் தெளிவாக அந்தப் புத்தகம் விளக்குகிறது” என்றும் அந்தத் தாய் சொன்னாள். அவள் குறிப்பிட்ட அந்த அதிகாரத்தின் தலைப்பு, “இயேசு எப்படி பாதுகாக்கப்பட்டார்.” தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியாமல் பிஞ்சுக் குழந்தையாக இருந்த இயேசுவைக் கெட்ட ராஜாவாகிய ஏரோது கொல்ல முயற்சி செய்தபோது, பரலோகத்தில் இருந்த இயேசுவின் தகப்பன் அவரை எப்படிக் காப்பாற்றினார் என அது விளக்குகிறது. (மத்தேயு 2:7-23) அதன்பின், தவறான நோக்கத்துடன் பழகுகிறவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருக்க சின்னஞ்சிறுசுகளுக்கும்கூட எப்படிக் கற்றுக்கொடுக்கலாம் என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது.
இந்தப் பத்திரிகையின் அளவில், ஆனால் 256 பக்கங்களுள்ள, அழகிய படங்கள் நிறைந்த இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து, பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g11-E 02)
❑ பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
❑ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொள்ள ஆசை. தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.