Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

உலகம்

பெண்களுக்கு எதிரான வன்முறை இன்று “உலகளவில் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 35% பெண்களை, ஆண்கள் துன்புறுத்துகிறார்கள். அவர்களில் 30% பெண்களைக் கணவர்கள் துன்புறுத்துகிறார்கள்” என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்கிறது.

பிரிட்டன்

64,303 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 79% பேர், “இன்று உலகில் நடக்கும் சண்டைகளுக்கு மதமே காரணம்” என்று சொல்கிறார்கள். மேலும் 2001-ல் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 72% பேர் தங்களைக் கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டார்கள். ஆனால், 2011-ல் இது 59%-ஆக குறைந்திருக்கிறது. அதே பத்து வருடத்தில், மதத்தோடு எந்த ஒட்டுறவும் இல்லை என்று சொல்பவர்களின் சதவீதம் 15-ல் இருந்து 25-ஆக உயர்ந்திருக்கிறது.

சீனா

சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தின்படி, பிள்ளைகள் தங்களுடைய வயதான பெற்றோரை வெறுமென பார்த்துவிட்டு வருவதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது; அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குப் பக்கபலமாகவும் இருக்க வேண்டும். ஆனால், இதை மீறினால் தண்டனை எதுவும் கிடையாது. (g14-E 09)

ஐரோப்பா

அழகு சாதனப் பொருட்கள், சலவை பொருட்கள் (டிடெர்ஜென்டுகள்), உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படை பொருட்களைக்கூட சிலர் போலியாகத் தயாரித்து விற்கிறார்கள். “நியாயமான விலையில் விற்கப்படும் எந்தவொரு பொருளையும் போலியாகத் தயாரிக்கப் பார்க்கிறார்கள்” என்று ஓர் உணவு பாதுகாப்பு நிறுவனத்தின் உயர் அதிகாரி சொல்கிறார். வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களில் 10% பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு நிபுணர் சொல்கிறார். (g14-E 09)