உலகச் செய்திகள்
அமெரிக்கா
சில போலீஸ் கார்ல, கம்பிரஸ்ட் ஏர் லான்ச்சர்ஸ்-னு ஒரு மெஷின் இருக்கும். குற்றவாளியை துரத்திட்டு போகும்போது, இந்த மெஷின்ல இருந்து புல்லட் மாதிரி ஒரு கருவி வேகமா போயி குற்றவாளியோட கார்ல ஒட்டிக்கும். இதை வெச்சி, அந்த குற்றவாளியோட கார் எங்கெல்லாம் போகுதுனு ஜிபிஎஸ் மூலமா கண்டுப்பிடிச்சிடலாம். வேகமா துரத்திட்டு போறதுனால வர ஆபத்துகளை இதனால தவிர்க்க முடியிது.
இந்தியா
வரதட்சனை வாங்குறதும் கொடுக்கிறதும் சட்டப்படி தப்பு. ஆனாலும், வரதட்சனை கொடுமையால, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். 2012-ல மட்டும் 8,200-க்கும் அதிகமான பெண்களை, வரதட்சனை பத்தலனு கொலை செஞ்சிருக்காங்க.
சுவிட்சர்லாந்து
ஆல்பைன் ஸ்விப்ட் பறவைகள் எவ்ளோ நாள் தொடர்ந்து பறக்குதுனு தெரிஞ்சிக்க, 3 பறவைகள்ல சென்சார் கருவி பொருத்துனாங்க. அந்தப் பறவைகள் 200 நாட்கள் எங்கையுமே நிக்காம ஆப்பிரிக்காவுக்கு பறந்து போனத கண்டுபடிச்சிருக்காங்க. பொதுவா, கடல்ல வாழ்ற மிருகங்கள் மட்டும்தான் இந்த மாதிரி ரொம்ப நாள் தொடர்ந்து பயணம் செய்யும்.
ஆப்பிரிக்காவின் கொம்பு
வடகிழக்கு ஆப்பிரிக்காவை ஆப்பிரிக்காவின் கொம்பு-னும் சொல்வாங்க. அந்தப் பகுதில இருக்கிற கடல் கொள்ளையர்கள், ஏப்ரல் 2005-லிருந்து டிசம்பர் 2012 வரைக்கும் 179 கப்பல்களை கடத்தியிருக்காங்க. அந்தக் கப்பல்களை மீட்பதற்காக 413 மில்லியன் டாலர்கள் (சுமார் 2560 கோடியே 60 லட்சம் ரூபாய்) கொடுக்க வேண்டியிருந்ததுனு உலக வங்கியின் கணக்கெடுப்பு காட்டுது. (g14-E 10)