Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

இயேசு ஒரு தச்சராக என்னென்ன வேலைகளைச் செய்திருப்பார்?

இயேசுவின் வளர்ப்புத் தகப்பன் ஒரு தச்சராக இருந்தார். இயேசுவும் அதே தொழிலைக் கற்றுக்கொண்டார். ‘ஏறக்குறைய முப்பது வயதில்’ அவர் ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது, மக்கள் அவரை ‘தச்சருடைய மகனாக’ மட்டும் கருதவில்லை, ஒரு தச்சராகவே கருதினார்கள்.​—லூக்கா 3:23; மத்தேயு 13:55; மாற்கு 6:⁠3.

இயேசுவின் சொந்த ஊரில், கலப்பை, நுகம் போன்ற விவசாயக் கருவிகளுக்கு அதிக மவுசு இருந்திருக்கும். இப்படிப்பட்ட கருவிகள் பெரும்பாலும் மரத்தினாலேயே செய்யப்பட்டன. ஒரு தச்சர் இவை தவிர மேஜைகள், நாற்காலிகள், முக்காலிகள், அலமாரிகள் போன்ற மரச்சாமான்களையும் கதவுகள், ஜன்னல்கள், மரத்தாழ்ப்பாள்கள், உத்திரங்கள் போன்றவற்றையும் செய்து வந்தார். சொல்லப்போனால், ஒரு தச்சருக்குக் கட்டுமானப் பணியில் முக்கியப் பங்கிருந்தது.

யோவான் ஸ்நானகர் என்பவர் ஓர் உவமையில் கோடரியைப் பற்றிக் குறிப்பிட்டார்; மரங்களை வெட்டிச் சாய்ப்பதற்கு இயேசுவும் மற்ற தச்சர்களும் இந்தக் கருவியைப் பயன்படுத்தியிருக்கலாம். அவர்கள் மரங்களை வெட்டிச் சாய்த்த பிறகு அந்த இடத்திலேயே அவற்றைப் பெரிய பெரிய கட்டைகளாக வெட்டியிருக்கலாம், அல்லது அவற்றை அப்படியே தங்களுடைய பட்டறைகளுக்கு எடுத்துச் சென்றிருக்கலாம். இவற்றையெல்லாம் செய்வதற்கு அதிக உடல்பலம் தேவைப்பட்டது. (மத்தேயு 3:10) ஏசாயா என்பவர், தன் காலத்தில் வாழ்ந்த தச்சர்கள் பயன்படுத்திய மற்ற கருவிகளைக் குறித்து இவ்வாறு சொன்னார்: ‘தச்சன் மரத்தை எடுத்து, நூல் பிடித்து கூராணியால் குறியிட்டு, உளியால் செதுக்குகிறான்; அளவுகருவியால் சரிபார்க்கிறான்.’ (ஏசாயா 44:​13, பொது மொழிபெயர்ப்பு) பண்டைய காலங்களில் உலோக ரம்பங்களும், கல் சுத்திகளும், வெண்கல ஆணிகளும் பயன்படுத்தப்பட்டு வந்ததைத் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் உறுதிசெய்கின்றன. (யாத்திராகமம் 21:6; ஏசாயா 10:15; எரேமியா 10:4) ஆகவே, இயேசுவும் அந்தக் கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார் என்று நாம் நம்பலாம்.(w08 12/1)