காவற்கோபுரம் எண் 1 2017 | பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வது எப்படி?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பைபிள் நம் காலத்துக்கு ஒத்துவராது என்று நினைக்கிறீர்களா? அல்லது அது இன்றும் பிரயோஜனமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? பைபிள் இப்படிச் சொல்கிறது: “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.” —2 தீமோத்தேயு 3:16, 17.
இன்று பைபிள் நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது, அதை நன்றாக புரிந்துகொள்ள என்ன செய்யலாம் என்பதை இந்த காவற்கோபுர பத்திரிகையில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.
அட்டைப்படக் கட்டுரை
பைபிளை ஏன் படிக்க வேண்டும்?
லட்சக்கணக்கான மக்களுக்கு பைபிளை படித்ததால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?
அட்டைப்படக் கட்டுரை
பைபிளை படிப்பதற்குமுன் என்ன செய்ய வேண்டும்?
பைபிளை சுவாரஸ்யமாகவும் சுலபமாகவும் படிக்க ஐந்து விஷயங்கள் உதவும்
அட்டைப்படக் கட்டுரை
பைபிளை சுவாரஸ்யமாக படிக்க என்ன செய்யலாம்?
வித்தியாசமான மொழிபெயர்ப்புகள், தொழில்நுட்பம், பைபிள் படிக்க உதவும் கருவிகள், இன்னும் சில முறைகள் பைபிளை சுவாரஸ்யமாக படிக்க உதவும்.
அட்டைப்படக் கட்டுரை
சந்தோஷமாக வாழ பைபிள் நமக்கு எப்படி உதவும்?
இந்தப் பழமையான புத்தகத்தில் ரொம்ப அருமையான ஆலோசனைகள் இருக்கின்றன.
பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
நான் என்றென்றும் வாழ ஆசைப்பட்டேன்
‘நான் உயிரோட இருக்கிறதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்’ என்று ஈவான் க்வாரீ யோசித்தார். அதற்கான பதிலைத் தெரிந்துகொண்டது அவர் வாழ்க்கையையே மாற்றியது.
இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
‘கடவுளுக்கு பிரியமாக நடந்துகொண்டார்’
குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக்கொள்ள... சரியானதை செய்ய... நீங்கள் போராடிக்கொண்டிருந்தால் ஏனோக்கின் விசுவாசத்திலிருந்து நீங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
பைபிளை சரியாக புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
பைபிளில் இருக்கும் விஷயங்களைத் தவறாக புரிந்துகொள்வது சாதாரண விஷயம் கிடையாது. சரியாக புரிந்துகொள்ள என்ன செய்யலாம்?
பைபிள் என்ன சொல்கிறது?
கஷ்டங்களுக்கான காரணத்தைச் சொல்வதோடு, கஷ்டங்களுக்கு எப்படி முடிவு வரும் என்றும் பைபிள் சொல்கிறது.
ஆன்லைனில் கிடைப்பவை
பைபிளில் முரண்பாடுகள் இருக்கின்றனவா?
முரண்படுவதுபோல் தெரிகிற சில பைபிள் வசனங்களையும், அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவுகிற நியமங்களையும் ஆராய்ந்து பாருங்கள்.