பூஞ்சோலை
அழகான பூங்கா அல்லது பூந்தோட்டம். ஏதேன் தோட்டம்தான் முதல் பூஞ்சோலை. முதல் மனித தம்பதிக்காக யெகோவா அதை உண்டாக்கினார். தன் பக்கத்திலிருந்த சித்திரவதைக் கம்பத்தில் ஏற்றப்பட்ட குற்றவாளியிடம் இயேசு பேசும்போது, இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும் என்பதைத் தெரியப்படுத்தினார். 2 கொரிந்தியர் 12:4-ல் உள்ள இந்த வார்த்தை, எதிர்காலத்தில் வரப்போகும் பூஞ்சோலையைக் குறிப்பதாகத் தெரிகிறது. வெளிப்படுத்துதல் 2:7-ல், இந்த வார்த்தை பரலோகப் பூஞ்சோலையைக் குறிக்கிறது.—உன் 4:13; லூ 23:43.