சமோவா
சமோவா
பசிபிக் பெருங்கடலின் கதகதப்பான நீலத் தண்ணீரில் மிளிர்கின்றன வசீகர அழகுள்ள சமோவன் தீவுகள். எரிமலை பிரசவித்த கற்குழந்தைகளே இந்தத் தீவுகள். மேகக்கூட்டங்கள் தவழும் சிகரங்கள், பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் வனப்பிரதேசங்கள், பனைமரங்கள் ஒய்யாரமாய் நிற்கும் கடற்கரைகள் எனக் கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கும் ரத்தினங்களாய் அவை ஜொலிக்கின்றன. இவை ஹவாய்க்கும் நியுஜிலாந்துக்கும் இடையே அமைந்துள்ளன. தகதகக்கும் உப்புநீர் ஏரிகள் கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாகத் திகழ்கின்றன. இங்கே சுமார் 200 வகையான பவழத்திட்டுகளும் கிட்டத்தட்ட 900 மீன் இனங்களும் இருக்கின்றன. சிவப்பு மல்லிகையின் நறுமணம் தவழ்ந்து வரும் இந்தத் தீவுகளை தென் பசிபிக்கிலேயே மிகமிக அழகான தீவுகள் என ஆரம்பகால ஐரோப்பிய மிஷனரிகள் வர்ணித்ததில் ஆச்சரியமொன்றும் இல்லை!
கிறிஸ்து பிறப்பதற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சமோவன் தீவுகளில் முதன்முதலாகக் குடியேறியவர்கள் லபிட்டா மக்கள் என்பதாகத் தெரிகிறது. a இந்த ஆரம்பகால பாலினேசியர்கள் துணிச்சல்மிக்க ஆய்வுப்பயணிகளாகவும் திறம்பட்ட மாலுமிகளாகவும் இருந்தார்கள். இவர்கள் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து பசிபிக் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தார்கள். பரந்துவிரிந்த கடலில் மிகப் பெரிய இரட்டைக் கட்டுமானத் தோணிகளில் பயணித்தார்கள், காற்றடித்த திசையிலும், நீரோட்டத்தின் போக்கிலும் போனார்கள். அதற்கு முன்னர் யாருமே அங்கு பயணம் செய்ததில்லை. நெடுந்தொலைவில், தென் பசிபிக்கின் மையப்பகுதியில் சிறுசிறு தீவுக்கூட்டங்களை இவர்கள் கண்டுபிடித்தார்கள். அவற்றுக்கு சமோவா என்று பெயரிட்டார்கள்.
காலப்போக்கில் இவர்களுடைய சந்ததியினர் பசிபிக் வழியாக கிழக்கே டஹிடிக்கும், பிற்பாடு வடக்கே ஹவாய்க்கும், தென்மேற்கே நியுஜிலாந்துக்கும், தென்கிழக்கே ஈஸ்டர் தீவுகளுக்கும் குடிபெயர்ந்தார்கள். பரந்து விரிந்திருக்கும் இந்தப் பகுதி இன்று பாலினேசியா என்றழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் “நிறைய தீவுகள்” என்பதே. இதன் குடிமக்கள் பாலினேசியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அதனால்தான் சமோவா, “பாலினேசியாவின் தொட்டில்” என அழைக்கப்படுகிறது.
நவீன காலங்களில், அஞ்சா நெஞ்சமுள்ள சமோவா மக்கள் யோவா. 4:23.
ஆன்மீகப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய முன்னோர்கள் நல்ல வாழ்க்கையைத் தேடி கடல் பயணம் செய்தது போலவே, இவர்களும் மேம்பட்ட வாழ்க்கையை நாடி ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு புதிய இடத்தைத் தேடி அல்ல, ஆன்மீக இருளிலிருந்து ஆன்மீக ஒளியை நோக்கியே “பயணம்” செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மைக் கடவுளான யெகோவாவால் ஏற்றுக்கொள்ளப்படுகிற வணக்க முறையை ஆர்வமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.—இந்தப் பதிவு சமோவாவிலும், b அமெரிக்கன் சமோவாவிலும் டோகிலாவ் தீவுகளிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சரிதையைச் சொல்கிறது. 1962-ல் மேற்கு சமோவா சுதந்திர நாடானது. அமெரிக்கன் சமோவா, ஐக்கிய மாகாணத்தின் ஆட்சி எல்லைக்குட்பட்டிருக்கிறது. இவ்வாறு, சமோவா மற்றும் அமெரிக்கன் சமோவா என சமோவன் தீவுகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சத்திய ஒளி பிரகாசிக்கத் தொடங்குகிறது
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி 1931-ஆம் வருடத்தில் முதன்முதலாக சமோவாவை வந்தடைந்தது. அத்தீவுக்கூட்டம் முழுவதையும் விஜயம் செய்த ஒருவர், ஆர்வம் காட்டிய மக்களுக்கு 470-க்கும் அதிகமான புத்தகங்களையும் சிறு புத்தகங்களையும் கொடுத்தார். அவர் ஒருவேளை சிட்னி ஷெப்பர்ட் ஆக இருக்கலாம். நற்செய்தியை அறிவிப்பதற்காக பாலினேசியாவின் பகுதிகளுக்குப் பயணம் செய்த பக்திவைராக்கியமிக்க யெகோவாவின் சாட்சி அவர்.
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி ஏழு வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கன் சமோவாவை எட்டியது. நியு யார்க், புருக்லினில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த ஜே. எஃப். ரதர்ஃபர்ட், ஐக்கிய மாகாணங்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் கப்பலில் பயணம் செய்தார்; வழியில் டூடுயீலா தீவில் அந்தக் கப்பல் நின்றபோது, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ரதர்ஃபர்டும் அவருடைய நண்பர்களும் துறைமுகப் பட்டணமாகிய பாகோ பாகோ முழுவதிலும் பிரசுரங்களை விநியோகித்தார்கள்.
இரண்டு வருடங்கள் கழித்து, 1940-ல் ஆசிய-பசிபிக் பகுதி முழுவதும் பயனியர் சேவை செய்துவந்த ஹெரல்ட் கில் அமெரிக்கன் சமோவாவுக்கு வந்தார். “மரித்தோர் எங்கே இருக்கின்றனர்?” என்ற சிறு புத்தகத்தின் 3,500 பிரதிகளைக் கொண்டுவந்தார். யெகோவாவின் சாட்சிகளால் c
சமோவன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பிரசுரம் இதுவே.ஹெரல்ட் பின்பு, படகில் கிட்டத்தட்ட எட்டு முதல் பத்து மணிநேரம் பயணம் செய்து சமோவாவில் உள்ள யூப்போலூ தீவுக்குச் சென்றார். அதைப் பற்றிப் பின்னர் அவர் எழுதினார்: “நான் அங்கு போய்ச் சேருவதற்குள் என்னைப் பற்றிய செய்திகள் போய்ச் சேர்ந்திருந்தன. அதனால்தானோ என்னவோ, நான் அங்கு போனபோது, தீவுக்குள் நுழைய எனக்கு அனுமதி இல்லை என்று ஒரு போலீஸ்காரர் சொன்னார். நான் என் பாஸ்போர்ட்டை அவருக்குக் காண்பித்தேன். அதில் நயம்பட எழுதப்பட்டிருந்த ஆரம்ப வரிகளை வாசித்துக் காட்டினேன். ‘இதை வாசிப்பவர் யாராக இருந்தாலும்சரி, இந்த பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் பிரிட்டன் அரசின் குடிமகனுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதியளிக்க வேண்டும், எந்தவொரு தடையோ இடையூறோ ஏற்படுத்தக்கூடாது. தேவையான எல்லா உதவியையும் பாதுகாப்பையும் அளிக்க வேண்டும்’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது. இதனால், அத்தீவின் ஆளுநர் என்னை அழைத்துப் பேசினார். அடுத்த படகு ஐந்து நாட்கள் கழித்து வரவிருந்ததால் அதுவரை அங்கேயே தங்குவதற்கு அனுமதியளித்தார். நான் ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தீவு முழுவதையும் சுற்றி எல்லா இடத்திலும் சிறுபுத்தகங்களை விநியோகித்தேன்.”
சமோவாவிலும் அமெரிக்கன் சமோவாவிலும் தன்னுடைய பிரசங்க வேலையை வெற்றிகரமாக முடித்த பின்பு அவர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிச் சென்றார். ஆனால், அவர் விநியோகித்திருந்த சிறு புத்தகங்களில் ஒன்று காலப்போக்கில் அலுவலகப் பணியாளர் ஒருவரின் கைகளில் கிடைத்தது. அவருடைய பெயர் பெலே ஃபியுயாயூபோலு. d அந்தச் சிறு புத்தகத்திலுள்ள செய்தி பெலேயின் இருதயத்தில் விதைக்கப்பட்டுக் காத்துக்கொண்டிருந்தது. ஆம், மதிப்புமிக்க சத்தியத்தின் விதை, சாட்சிகள் வந்து நீர் ஊற்றுவதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தது.—1 கொ. 3:6.
12 வருடங்களுக்குப் பிறகு, 1952-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சியான ஜான் கிராக்ஸ்பர்ட், யூப்போலூ தீவிலுள்ள அபியாவுக்கு வந்தார். இது சமோவாவின் தலைநகராகும். பெலே பணிபுரிந்துவந்த அலுவலகத்தில் ஜானுக்கு வேலை கிடைத்தது. அவர் எல்லாரோடும் நட்புடன் பழகினார், மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்க அதிக ஆவலாக இருந்தார். பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள பெலே மிக ஆர்வமாக இருந்ததைப் பார்த்து, அவரிடம் பேச அவருடைய வீட்டிற்குப் போனார். அதைப் பற்றி பெலே இவ்வாறு எழுதுகிறார்: “ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை வரை நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். நான் அவரிடம் கேள்விக்குமேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தேன். அவரும் சளைக்காமல் பைபிளிலிருந்தே பதில்களை எடுத்துக் காட்டினார். நான் தேடிக்கொண்டிருந்த சத்தியம் இதுதான் என்பது எனக்கு நூற்றுக்குநூறு தெளிவானது.” அந்த வருடத்தின் பிற்பகுதியில் பெலேயும் அவருடைய மனைவி ஐலுவாவும் ஞானஸ்நானம் பெற்றார்கள். சமோவாவில் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்த முதல் நபர்கள் இவர்களே.
தன் முன்னோர்களின் மதத்தை விட்டுவிட்டதற்கான காரணத்தை மற்றவர்களுக்கு விளக்க வேண்டியிருக்கும் என்பதை பெலே அறிந்திருந்தார். அதனால் அவர் பைபிளை ஊக்கமாகப் படித்தார், உதவி கேட்டு யெகோவாவிடம் உருக்கமாக மன்றாடினார். பெலேயின் சொந்த ஊரான ஃபலேசியுவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்திற்கு வரும்படி அவரது குடும்பத்தைச் சேர்ந்த கிராமத்தலைவர் அழைத்திருந்தார். ஃபலேசியு கடலோரத்தில் அமைந்திருந்த ஒரு பெரிய கிராமம். இது அபியாவுக்கு மேற்கே 19 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. பெலேயும் சத்தியத்தில் ஆர்வம் காட்டிய அவருடைய உறவினர் ஒருவரும் சென்றார்கள். அங்கே, ஊர்ப் பெரியவர்கள் ஆறுபேர், சொற்பொழிவாளர்கள் மூன்றுபேர், போதகர்கள் பத்துப்பேர், இறையியல் ஆசிரியர்கள் இரண்டுபேர், கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கிராமத்தலைவர் ஒருவர், பெலேயின் குடும்பத்தைச் சேர்ந்த வயதான ஆண்கள், பெண்கள் எனக் கோபத்தோடு இருந்த ஒரு பெரிய கூட்டத்தையே பார்த்தார்கள்.
பெலே இவ்வாறு சொல்கிறார்: “குடும்பத்தின் பெயருக்கும், எங்கள் முன்னோருடைய சர்ச்சுக்கும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக அவர்கள் எங்களைச் சபித்தார்கள்.” பின்பு கிராமத்தலைவர், இதைப் பற்றி விவாதிக்கலாம் என்று சொன்னார். அந்த விவாதம் காலை நான்கு மணிவரை நீடித்தது.
பெலே தொடர்கிறார்: “‘அந்த பைபிளை எடுத்துக்கொண்டு போ! அதைப் படிக்காதே!’ என்றெல்லாம் சிலர் கத்தினார்கள். ஆனாலும், அவர்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பைபிளிலிருந்தே பதில் அளித்து அவர்களுடைய விவாதங்களைத் தவறென்று நிரூபித்தேன். அதற்குப்பின் அவர்களிடமிருந்து பேச்சுமூச்சே இல்லை. தலைகுனிந்தபடியே இருந்தார்கள். பின்பு, கிராமத்தலைவர் தழுதழுத்த குரலில், ‘பெலே, நீ ஜெயித்துவிட்டாய்’ என்றார்.”
“அதற்கு நான், ‘இல்லை, ஐயா, நான் ஜெயிக்கவில்லை. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைத்தான் நீங்கள் இன்று கேட்டீர்கள். அதற்கிசைய நீங்கள் நடக்க வேண்டுமென நான் மனமார ஆசைப்படுகிறேன்’ என்று சொன்னேன்.”
யெகோவாவின் மீதும் அவருடைய வார்த்தையான பைபிளின் மீதும் பெலே சார்ந்திருந்ததால் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியத்தின் விதை யூப்போலூவில் வேர்பிடிக்கத் தொடங்கியது.
ஆரம்பகால சபைக் கூட்டங்கள்
அந்தத் தீவில் அன்னியோன்னியமாக வாழ்ந்துவந்த மக்களிடையே பெலேயின் புதிய மதத்தைப் பற்றிய பேச்சு வேகமாகப் பரவியது. முதல் நூற்றாண்டில் பவுலின் பிரசங்கத்தைக் கேட்ட அத்தேனே நகரத்தாரைப் போலவே, சிலர் இந்த ‘புதிதான உபதேசத்தைக்’ கேட்க ஆர்வமாக இருந்தார்கள், அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள்; (அப். 17:19, 20) இந்தப் புதிய மதத்தில் ஆர்வமாயிருந்த நபர்கள், மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மருத்துவரின் வீட்டில் கூடி இதைப் பற்றிக் கலந்தாராய்கிறார்கள் என்பதை மாட்டுஸி லியாவானி என்ற இளைஞர் அறிந்துகொண்டார். அவர்கள் எதைத்தான் படிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மருத்துவமனை வாசல்வரை வந்தார். ஆனால் அவரைத் திடீரென்று பயம் கவ்வியது, அதனால் அங்கிருந்து போய்விட நினைத்தார். நல்லவேளையாக ஜான் கிராக்ஸ்பர்ட் அந்தச் சமயத்தில் வந்தார். அங்கிருந்த சிறிய தொகுதியுடன் சேர்ந்து படிப்பதற்காக உள்ளே அழைத்துச் சென்றார். “தேவனே சத்தியபரர்” என்ற புத்தகத்தை அன்றிரவு அவர்கள் படித்தார்கள். மாட்டுஸிக்கு அந்தப் படிப்பு மிகவும் பிடித்துப்போனதால், மறுபடியும் செல்ல விரும்பினார். ஆரம்பத்தில் கூட்டங்களுக்கு அவ்வப்போதுதான் வந்தார் என்றாலும், காலப்போக்கில் சத்தியம் அவருடைய இருதயத்தில் வேரூன்றியது. 1956-ல் அவர் ஞானஸ்நானம் பெற்றார்.
இந்தத் தொகுதியோடு சேர்ந்து பைபிளைப் படித்த புதியவர்கள் தாங்கள் கற்றுவந்த விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டார்கள். சகோதரர் கிராக்ஸ்பர்ட், அபியாவுக்கு வந்த ஐந்து மாதங்களுக்குள் பத்துப் பேர் அவருடன் சேர்ந்து பிரசங்கிக்கத் தொடங்கினார்கள். நான்கு மாதங்களுக்குப் பின்பு அந்த எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது. இந்தப் புதியவர்கள் தங்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பிரசங்கித்தார்கள். இதனால், நல்ல பலன்கள் கிடைத்தன.
இந்தப் புதிய பிரஸ்தாபிகளில் ஒருவர், ஃபலேசியுவில் வசித்த தன் ஒன்றுவிட்ட சகோதரரான சாவோ டோட்டு என்பவருக்குச் சாட்சி கொடுத்தார். காலப்போக்கில், சாவோவும் அவருடைய மைத்துனரான ஃபினா ஃபியோமையாவும் தங்கள் குடும்பத்தாரோடு கூட்டங்களுக்கு வரத் தொடங்கி சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
ஜனவரி 1953-ல் உண்மை வணக்கம் சம்பந்தமாக சாதனை படைத்த ஒரு சந்தோஷமான சம்பவம் சமோவாவில் நிகழ்ந்தது. அச்சமயத்தில் சுமார் 40 பேர் கூட்டங்களுக்கு வந்துகொண்டிருந்ததால், அபியாவில் முதல் சபையை ஆரம்பிப்பதற்கு ஆஸ்திரேலியாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் அங்கீகாரம் அளித்தது. சகோதரர் கிராக்ஸ்பர்ட் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்ற பின்பு, புதிதாக ஞானஸ்நானம் பெற்றிருந்த பெலே சபையை முன்நின்று நடத்தத் தொடங்கினார். பிரஸ்தாபிகள் தைரியத்தோடும் உள்ளார்வத்தோடும் இருந்தார்கள். ஆனால், சத்தியத்தில் புதியவர்களாகவும் அனுபவமற்றவர்களாகவும் இருந்தார்கள். அவர்களில் அநேகர், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை இன்னும் அதிக சாதுரியமாகவும் மனதை எட்டும் விதத்திலும் சொல்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. (கொலோ. 4:6) புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. (எபே. 4:22–24) சந்தோஷகரமாக, இப்படிப்பட்ட உதவி அவர்களுக்கு விரைவில் கிடைக்கவிருந்தது.—எபே. 4:8, 11–16.
வெளிநாட்டிலிருந்து உதவி
மே 1953-ல் அபியா சபைக்கு உதவி செய்ய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயனியர்களான ரோனல்ட் மற்றும் ஆலிவ் (டாலி) செல்லர்ஸ் வந்தார்கள். “ஆஸ்திரேலியக் கிளை அலுவலகத்திற்கு சமோவாவிலிருந்த
சகோதரர்களைக் குறித்துச் சிறிது காலத்திற்கு எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். பசிபிக்கில் சேவை செய்வதற்கு நாங்கள் விருப்பம் தெரிவித்திருந்ததால், சமோவாவுக்குப் போகும்படியும் அங்கிருந்த புதிய சபையில் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்யும்படியும் எங்களிடம் சொன்னார்கள்” என்று ரோனல்ட் தெரிவிக்கிறார்.ரோனல்டும் டாலியும் கடல் விமானத்தில் சமோவாவுக்கு வந்தார்கள். பொதுவாகத் தொலைதூர மிஷனரிப் பிராந்தியங்களிலுள்ள சவால்களை எதிர்ப்பட அவர்கள் இருவரும் மனதளவில் தங்களைத் தயார் செய்திருந்தார்கள். ரோனல்ட் தொடர்கிறார்: “அங்கு வந்திறங்கியபோது, எங்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பார்த்த இடமெல்லாம் மரம் செடிகொடிகள் பச்சைப்பசேலென்று இருந்தன. எங்கு திரும்பினாலும், சந்தோஷமான சிரித்த முகங்கள். திடகாத்திரமாக இருந்த ஆரோக்கியமான மக்கள் தென்பட்டார்கள். அங்கிருந்த வீடுகள் ஓலை வேய்ந்த கூரைகளையும் பவழப் பாறைகளாலான தரைகளையும் கொண்டிருந்தன. சுவரில்லாத அந்த வீடுகளைச் சுற்றி குழந்தைகள் துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். யாருமே அரக்கப்பரக்க ஓடவோ நேரத்தைப் பற்றிக் கவலைப்படவோ இல்லை. பாரடைஸுக்கே வந்துவிட்டதுபோல் எங்களுக்குத் தோன்றியது.”
இவர்களுக்கு பெலேயின் வீட்டிலேயே தங்க இடம் கிடைத்தது. அதனால், உடனடியாக ஊழியம் செய்யத் தொடங்கினார்கள். “சகோதரர்கள் என்னிடம் கேட்ட நிறைய கேள்விகளுக்குக் கிட்டத்தட்ட எல்லா இரவும் நான் பதிலளித்துக் கொண்டிருந்தேன். அடிப்படை பைபிள் போதனைகளை அவர்கள் அறிந்திருந்தாலும் கடவுளுடைய நெறிமுறைகளுக்கு ஏற்ப வாழ்வதற்கு அவர்கள் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்பது எனக்கு விரைவில் புரிந்தது. அந்த மாற்றங்களைச் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதால் டாலியும் நானும் அவர்களிடம் அதிக பொறுமையுடன் இருக்க முயற்சி செய்தோம். அளவுகடந்த அன்பைக் காட்டவும் முயற்சி செய்தோம்” என்று ரோனல்ட் சொல்கிறார். வருத்தகரமாக, இந்த அன்பான வேதப்பூர்வ உதவியை சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். சபையைவிட்டு மெல்லமெல்ல விலகிச் சென்றார்கள். மனத்தாழ்மையைக் காட்டியவர்களோ தங்களுக்குக் கிடைத்த பயிற்சியையும் ஊக்குவிப்பையும் நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். காலப்போக்கில், ஆன்மீக ரீதியில் முன்னேறினார்கள். இதனால், சபை தூய்மையாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.
ரோனல்டும் டாலியும் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் முன்னணி வகித்தார்கள். பெரும்பாலான சகோதரர்கள் அதுவரை நண்பர்களுக்கும் அக்கம்பக்கத்தாருக்கும் மட்டுமே சந்தர்ப்ப சாட்சி கொடுத்து வந்திருந்தார்கள். இப்போது, செல்லர்ஸ் தம்பதியுடன் சேர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட்டார்கள். அதனால் பைபிள்மீது ஆர்வம் காட்டிய பலரைச்
சந்தித்தார்கள். “ஒரு சமயம், ஆர்வம் காட்டிய ஊர்ப்பெரியவர் ஒருவர் தன் கிராமத்திற்கு வந்து கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அதிகம் சொல்லும்படி எங்களை அழைத்தார். சாப்பாட்டுக்குப் பின்பு, பைபிளைப் பற்றிச் சுவாரஸ்யமாகக் கலந்துபேசினோம். ஒரு மணிநேரத்திற்குப் பின்பு பார்த்தால், அங்கே கிட்டத்தட்ட 50 பேர் வந்துவிட்டார்கள். அதனால், அந்தக் கலந்தாலோசிப்பு ஒரு பொதுப் பேச்சாக மாறிவிட்டிருந்தது, அதுவும் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமலேயே!” என்று ரோனல்ட் தெரிவிக்கிறார். பிரஸ்தாபிகள் இரண்டோ மூன்றோ பேரிடம் பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருப்பார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் 10 முதல் 40 பேர்கூட அங்கு வந்துவிடுவார்கள்.இருந்தபோதிலும், இந்தப் பிரசங்க வேலை கிறிஸ்தவமண்டல குருமாரின் கண்களைத் தப்பவில்லை. ரோனல்டுக்கும் டாலிக்கும் விசாவை நீட்டிப்பதற்கான அனுமதியை அதிகாரிகள் மறுத்தபோது, அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள ரோனல்ட் உயர் ஆணையரை அணுகினார். அப்போது நடந்தவற்றை ரோனல்ட் சொல்கிறார்: “யாரோ ஒரு பாதிரி எங்களுடைய பிரசங்க வேலையைக் குறித்து அரசாங்கத்திடம் புகார் செய்திருப்பதாக அந்த ஆணையர் தெரிவித்தார். அதனால், பிரசங்க வேலையில் சபையாருக்கு உதவி செய்ய மாட்டோம் என்று வாக்குக் கொடுத்தால் மட்டுமே விசாவை நீட்டிக்கப்போவதாக அவர் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். அதோடு, ‘இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், கடவுளுடைய வேலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது’ என்றும் சொன்னேன். அதற்கு அவர் சிரித்தவாறே, ‘நீங்கள் போன பின்பு, என்ன நடக்கிறதென்று பார்ப்போம்’ என்றார்.”
அதுமுதற்கொண்டு, அதிகாரிகள் வெளிநாட்டிலிருந்து வரும் யெகோவாவின் சாட்சிகளை அந்நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. என்றபோதிலும், ஆஸ்திரேலியக் கிளை அலுவலகத்தில் சேவை செய்தவரும், இப்போது ஆளும் குழுவின் அங்கத்தினர்களில் ஒருவருமான தியோடர் ஜாரக்ஸ் சமோவாவிலிருந்த சாட்சிகளை ஊக்குவிப்பதற்காக,
யாருடைய கவனத்தையும் ஈர்க்காத வகையில் 1953-ஆம் வருடம் சமோவாவுக்கு வந்தார். “அவருடைய சந்திப்பு எங்களுக்கு உற்சாக டானிக் போல இருந்தது. யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து சரியான திசையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்று உறுதியளித்தது” என ரோனல்ட் சொல்கிறார்.அதற்குப் பின்பு சிறிது காலத்திலேயே செல்லர்ஸ் தம்பதியினரின் விசா முடிவடைந்தால், அமெரிக்கன் சமோவாவுக்கு அவர்கள் மாறிச் சென்றார்கள். என்றாலும், சமோவாவில் அவர்கள் தங்கியிருந்த எட்டு மாதங்களில், தங்களால் முடிந்தளவுக்கு சகோதரர்களைப் பலப்படுத்தி, திடப்படுத்தினார்கள். செல்லர்ஸ் தம்பதியினர் ஆரம்பித்து வைத்த வேலையைத் தொடருவதற்காக மற்றவர்கள் விரைவில் வரவிருந்ததை அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை.
அபியாவில் வளர்ச்சி
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான ரிச்சர்ட் ஜென்கென்ஸ் மே 1954-ல் அபியாவுக்கு வந்தார். புதிதாக ஞானஸ்நானம் பெற்ற அவர் ஆர்வத்துடிப்புமிக்கவராக இருந்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய வேலை நிரந்தரமாகும் வரை அபியாவில் உள்ள சகோதரர்களோடு வெளிப்படையாகப் பழக வேண்டாமென்று ஆஸ்திரேலியாவிலிருந்த சகோதரர்கள் என்னிடம் சொன்னார்கள். என்றாலும், பல மாதங்கள் கழித்து நான் தனிமையை உணரத் தொடங்கினேன். அதோடு ஆன்மீக ரீதியில் பலவீனமாக உணர்ந்தேன். அதனால், பெலே ஃபியுயாயூபோலுவை ரகசியமாகச் சந்திக்கத் தீர்மானித்தேன்.” நள்ளிரவில் கும்மிருட்டில் நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டோம்.
“நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பது வெளியே தெரிந்தால் என்னை நாட்டைவிட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்ற பயத்தில் என்னுடைய நிஜப் பெயரைப் பயன்படுத்தப்போவதில்லை என பெலே என்னிடம் சொன்னார். அதனால், விட்டினீஸ் என்ற பெயரில் என்னை அழைத்தார். ‘விட்னஸ்’ (சாட்சி) என்பது சமோவன் மொழியில் இப்படித்தான் உச்சரிக்கப்படுகிறது. சமீபத்தில் பிறந்த அவருடைய மகனுக்கு இந்தப் பெயரையே அவர் வைத்திருந்தார். இன்றுவரை சமோவன் சகோதர சகோதரிகள் என்னை இந்தப் பெயரில்தான் அழைக்கிறார்கள்” என்று ரிச்சர்ட் சொல்கிறார்.
ரிச்சர்ட் தம்முடைய புதிய புனைபெயரைப் பயன்படுத்தி சகோதரர்களுடன் ஜாக்கிரதையாகத் தொடர்புகொண்டார். அதோடு சந்தர்ப்ப சாட்சி கொடுத்து வந்ததால், நிறைய பைபிள் படிப்புகளையும் தொடங்கினார். சுகாதார ஆய்வாளராக இருந்த முபாலூ கலூவா என்ற இளைஞர் அவருடன் பைபிளைப் படித்தவர்களில் ஒருவர். இவர் பிற்பாடு சமோவா கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினரானார். காலப்போக்கில்,
அவரோடு பைபிளைப் படித்த ஃபலிமா டூயீபோலோ என்பவரும் அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் பலரும் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள்.ரிச்சர்டுடன் பைபிளைப் படித்த ஓர் இளைஞர் சீயெம்மூ டாஸே. இவர் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பொருள்களைத் திருடிய கும்பலின் தலைவராக இருந்தார். என்றாலும், இவர் ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்வதற்கு முன்னரே, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும், ரிச்சர்ட் தளர்ந்துவிடவில்லை. சீயெம்மூவோடு பைபிள் படிப்பைத் தொடருவதற்கான அனுமதியைச் சிறை வார்டனிடமிருந்து பெற்றார். சிறைச்சாலை சுவருக்கு வெளியே சுமார் 100 மீட்டர் தூரத்தில் இருந்த மாமரத்து நிழலில் அவர்கள் பைபிளைப் படித்தார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து, கைதிகள் பலர் இந்தப் படிப்பில் கலந்துகொண்டார்கள்.
“யாருமே எங்களைக் காவல் காக்கவில்லை, ஆனால், கைதிகளில் ஒருவர்கூட, ஒருநாளும் தப்பிக்க முயற்சி செய்யவில்லை. அவர்களில் சிலர் பின்பு சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்” என்று ரிச்சர்ட் சொல்கிறார். பின்னர், சீயெம்மூ சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். காலப்போக்கில், மூப்பராகச் சேவை செய்தார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயனியரான குளோரியா கிரீன் என்பவரை ரிச்சர்ட் 1955-ல் மணந்தார். அவர்கள் சமோவாவில் இருந்த 15 ஆண்டுகளில், சத்தியத்தைக் கற்றுக்கொள்ள 35 பேருக்கு உதவினார்கள். அதன் பின்பு, ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். இப்போது, பிரிஸ்பேனில் உள்ள சமோவன் மொழி சபையில் ரிச்சர்ட் மூப்பராகச் சேவை செய்கிறார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வில்லியம் (பில்) மாஸ், மார்ஜொரி (கேர்லி) மாஸ் என்ற மற்றொரு தம்பதியினரும் அந்தக் காலப்பகுதியில் சபைக்கு உதவினார்கள். மூப்பராகச் சேவை செய்த பில் சமயோசிதமாகச் செயல்படுகிற நபர். 24 ஆண்டுகளாக பயனியர் சேவை செய்துவந்த கேர்லியுடன் அவர் 1956-ல் அபியாவுக்கு வந்தார். அந்தச் சமயத்தில்,
அபியா சபையில் 28 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். அபியாவிலும் ஃபலேசியுவிலும் புத்தகப் படிப்புத் தொகுதிகள் இருந்தன. அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு பில்லும் கேர்லியும் அந்தச் சபையாருடன் சேர்ந்து ஊக்கமாக உழைத்தார்கள். ஆனால், கேர்லியின் உடல்நிலை மோசமடைந்ததால், 1965-ல் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அதற்குள், ஃபலேசியு தொகுதி ஒரு சபையாக ஆகியிருந்தது.அக்காலப்பகுதியில், சமோவாவுக்குள் வருவதற்கு மிஷனரிகள் கொடுத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள அந்த அரசாங்கம் மறுத்து வந்தது. யெகோவாவின் சாட்சிகள் என்ற தொகுதி மெல்லமெல்ல மறைந்துவிடும் என்றே அரசும் குருவர்க்கமும் எண்ணியது. ஆனால், நடந்ததோ வேறு! யெகோவாவின் சாட்சிகள் எண்ணிக்கையில் பெருகினார்கள். அதோடு, சுறுசுறுப்பாகவும் பக்தி வைராக்கியமாகவும் செயல்பட்டார்கள்—அவர்கள் மறைந்துபோகவில்லை!
அமெரிக்கன் சமோவாவில் வளர்ச்சி
ரோனல்ட் செல்லர்ஸ் தம்பதியினரின் விசா 1954-ல் முடிவடைய இருந்தது. அச்சமயத்தில், அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிச் செல்வதற்குப் பதிலாக, அமெரிக்கன் சமோவாவில் குடியேறுவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்கத் தீர்மானித்தார்கள். இதுகுறித்து ரோனல்ட் சொல்கிறார்: “அதற்காக, அரசு தலைமை வழக்கறிஞரை நான் அணுகினேன். நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதால், சமோவா அரசாங்கம் எங்களுடைய விசாவை நீட்டிக்க மறுத்துவிட்டதை அறிந்த அவர் என்னிடம், ‘மிஸ்டர் செல்லர்ஸ், அமெரிக்கன் சமோவாவில் மதச் சுதந்திரம் இருக்கிறது. எப்படியும் உங்களுக்கு விசா கிடைக்கும்படி பார்த்துக்கொள்கிறேன்’” என்றார்.
ரோனல்டும் டாலியும் ஜனவரி 5, 1954-ல் அமெரிக்கன் சமோவாவில் உள்ள பாகோ பாகோவுக்கு வந்தார்கள். அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ரோனல்டைத் தன்னுடைய அலுவலகத்தில் தினமும் வந்து பார்த்துவிட்டுப்
போகும்படி நிபந்தனை விதித்தார். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நன்கு அறிந்துகொள்வதற்காகவே அப்படிச் சொன்னார். இதன் பலனாக, பைபிள் விஷயங்களை அவர்கள் அடிக்கடி கலந்துபேசினார்கள்.அந்த மாதக் கடைசியில், அரசு தலைமை வழக்கறிஞர் ரோனல்டையும் டாலியையும் இரவு விருந்துக்காகத் தன் வீட்டுக்கு அழைத்தார். உள்ளூர் கத்தோலிக்க பாதிரியும், லண்டன் மிஷனரி சொஸைட்டியின் பாஸ்டரும் அங்கு அழைக்கப்பட்டிருந்ததால், பைபிளிலிருந்து விறுவிறுப்பான உரையாடல் நிகழ்ந்தது. “கடைசியில், அந்த விருந்துக்கு வந்ததற்காக எங்கள் அனைவருக்கும் அரசு தலைமை வழக்கறிஞர் நன்றி சொன்னார். அதோடு, ‘இன்று இரவு நடந்த விவாதத்தில் செல்லர்ஸ் தம்பதிதான் வெற்றி பெற்றார்கள் என்று சொல்வேன்’ என்றார். சீக்கிரத்திலேயே, நிரந்தரமாகத் தங்குவதற்கான விசா எங்களுக்குக் கிடைத்தது. மிஷனரிகள் வருவதற்கான விண்ணப்பங்களை அரசு ஏற்றுக்கொள்கிறது என்ற தகவலை அரசு தலைமை வழக்கறிஞர் என்னிடம் தெரிவித்தபோது, அதை உடனடியாக ஆஸ்திரேலியக் கிளை அலுவலகத்திற்குத் தெரிவித்தேன்” என்கிறார் ரோனல்ட்.
அமெரிக்கன் சமோவாவில் யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்த முதல் நபர் 19 வயது வாலெசி (வாலஸ்) பெட்ரோ. இவர் டோகிலாவ்வில் பிறந்தவர். பிஜியில் விசேஷ பயனியராக இருந்த இவருடைய உறவினரான லிடியா பெட்ரோ 1952-ல் அமெரிக்கன் சமோவாவுக்கு வந்திருந்தபோது, வாலஸின் அண்ணனிடம் “தேவனே சத்தியபரர்” என்ற புத்தகத்தைக் கொடுத்திருந்தார். இளம் வாலஸ் தன் அண்ணனின் வீட்டிலிருந்து அந்தப் புத்தகத்தைக் கண்டெடுத்து அதைக் கவனமாகப் படித்தார்.
ரோனல்டும் டாலியும் பெட்ரோ குடும்பத்தை 1954-ல் சந்தித்து, வாலஸின் அண்ணனுக்கும் அக்காவுக்கும் பைபிள் படிப்பு நடத்தினார்கள். வாலஸ் யெகோவா தேவன்மீது நம்பிக்கை வைத்தார். ஆனால், ஆரம்பத்தில் மதத்தின்மீது அவருக்கு அவநம்பிக்கை இருந்ததால், பைபிள் படிப்பில் கலந்துகொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்தார். காலப்போக்கில், யெகோவாவின் சாட்சிகள்தான் சத்தியத்தைக் கற்பிக்கிறார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. பகடோகோவில் நடந்த சபைக் கூட்டங்களில் அவர் தவறாமல் கலந்துகொண்டார். ஆன்மீக ரீதியில் விரைவாக முன்னேறினார். ஏப்ரல் 30, 1955-ல் பாகோ பாகோ துறைமுகத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.
ரோனல்டும் டாலியும் அமெரிக்கன் சமோவாவுக்கு வந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. அதற்குள், அதாவது ஜனவரி 1955-க்குள், பகடோகோவிலிருந்த அவர்களுடைய எளிய இல்லத்தில் நடந்த சபைக் கூட்டங்களுக்கு ஏழு பேர் வரத் தொடங்கினார்கள். அங்கே, உட்காருவதற்கு ஓரிரு நாற்காலிகளே இருந்தன. அதனால், எல்லாருமே தரையில்தான் உட்கார்ந்தார்கள். சிறிது காலத்திற்குள், அவர்களில் மூன்றுபேர்
ரோனல்டுடனும் டாலியுடனும் சேர்ந்து ஊழியத்தில் ஈடுபட்டார்கள். அருமையான முன்னேற்றங்கள் நடைபெறுவதற்கு இது ஒரு சிறு தொடக்கமாகவே இருந்தது.கிலியட் மிஷனரிகளின் வருகை
பிப்ரவரி 4, 1955-ல் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு மிஷனரி தம்பதிகள், பால் ஈவான்ஸ், ஃபிரான்சஸ் ஈவான்ஸ் மற்றும் கார்டன் ஸ்காட், பட்ரீஷா ஸ்காட் ஆகியோர் அமெரிக்கன் சமோவாவுக்கு வந்தார்கள். பகடோகோவிலிருந்த மிஷனரி இல்லத்தில் அவர்கள் குடியிருந்தார்கள். அதன் சுற்றுவட்டாரம் எப்போதுமே சந்தடிமிக்கதாய் இருந்தது. அந்த வருடத்தில் பாகோ பாகோவுக்கு விஜயம் செய்த வட்டாரக் கண்காணியான லியனார்ட் (லென்) ஹெல்பர்க் அக்காட்சியை இப்படி விவரிக்கிறார்:
“பழங்கால மளிகைக் கடை ஒன்றின் மேலே இருந்த ஒரு பெரிய அப்பார்ட்மென்ட்தான் மிஷனரி இல்லம். ஒருபுறம், சின்ன ஓடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதன் எதிரே இருந்த மதுபானக் கடைக்கு மாலுமிகள் பொழுதுசாயும் வேளையில் குடித்துக் கும்மாளம் போட வந்துவிடுவார்கள். அங்கு நடக்கிற சண்டை சச்சரவெல்லாம் சிலநேரம் வீதிக்கே வந்துவிடும்; அச்சமயங்களில், குட்டையான, திடமான ஒரு போலீஸ் அதிகாரி, வாயில் சுருட்டுடன் அந்தக் கூட்டத்திற்குள் புயல்போல் பாய்ந்து அங்கிருப்பவர்களை அடித்து நொறுக்கி, கூட்டத்தைக் கலைத்துவிடுவார். மிஷனரி இல்லத்தின் பின்புறம், சற்றுத் தள்ளியிருந்த சர்ச்சிலிருந்து எரிநரகத்தைப் பற்றிய அனல்பறக்கும் பிரசங்கங்கள் காதைத் துளைக்கும். முன்பக்க வராந்தாவிலிருந்து பார்த்தால், அரசாங்கச் சம்பளம் விநியோகிக்கப்படும் நாளில் வங்கியைச் சுற்றிக் கூட்டம் மொய்த்துக்கொண்டிருக்கும். தங்களுடைய சர்ச் அங்கத்தினர்கள் சம்பளப் பணத்தைச் செலவழிப்பதற்கு முன்பு அவர்களிடமிருந்து தசமபாகத்தை வாங்கிவிட ஆலாய்ப்பறக்கும் சர்ச் மிஷனரிகள் அத்தீவின் நாலாபக்கங்களிலும் இருந்து அங்கு வந்து அவர்களைத் தேடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பார்கள்.”
சந்தடிமிக்க அந்தச் சூழலில் வசித்த அநேகர் பைபிளில் உண்மையான ஆர்வம் காட்டினார்கள். லென் தொடர்கிறார்: “மிஷனரி இல்லத்திற்கு எதிரே முடிதிருத்தும் கடை ஒன்று இருந்தது. அதன் முதலாளி தன் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு அவருக்கு பைபிள் படிப்பு நடத்த காலை ஆறு மணிக்கே மிஷனரி ஒருவர் அங்கு செல்வார். அதற்குப் பின்பு காலை உணவுக்காக ரொட்டி வாங்குமுன் ரொட்டி சுடுபவரோடு பைபிள் படிப்பு நடத்தினார். பிற்பாடு, அதே சகோதரர் ஊர் சதுக்கத்தில் கைதிகள் சிலரோடு பைபிள் படிப்பு நடத்தினார்.” அந்த வருடக் கடைசியில், மிஷனரிகள் 200-க்கும் அதிகமானவர்களோடு ஏறக்குறைய 60 பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
“இரவுக் காட்சி—அனுமதி இலவசம்”
பைபிளில் இத்தனை பேர் ஆர்வம் காட்டியதற்கு ஒரு காரணம் புதிய உலக சமுதாயம் செயலில் என்ற படக்காட்சிதான். e கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட “போட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” படக்காட்சிக்குப் பிறகு யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பு தயாரித்த முதல் படக்காட்சி இதுவே. இந்தப் படக்காட்சியில் உலகளாவிய பிரசங்க வேலை, அச்சடிக்கும் வேலை, யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள் ஆகியவை சிறப்பித்துக் காட்டப்பட்டன. 1955-ல் அமெரிக்கன் சமோவாவில் சகோதரர் லென் நான்கு வாரம் இருந்தபோது இந்தப் படத்தை 15 தடவை போட்டுக் காட்டினார். ஒவ்வொரு காட்சிக்கும் 215 பேர் என மொத்தம் 3,227 பேர் இதைக் கண்டுகளித்தார்கள்.
லென் தொடர்கிறார்: “ஒவ்வொரு காட்சிக்கு முன்பாகவும் கிராமம் கிராமமாக வண்டியில் சென்று அதை விளம்பரம் செய்தோம். வழியில் பார்த்தவர்களிடமெல்லாம் படத்தைப் பற்றிய நோட்டீஸ்களை வீசினோம். அதோடு, ‘இரவுக்காட்சி—அனுமதி இலவசம்’ எனக் கத்திக்கொண்டே சென்றோம். அந்தப் படக்காட்சி காட்டப்படப்போகிற கிராமத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டே சென்றோம்.”
இந்தப் படம் மக்கள்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு காட்சிக்குப் பின்பும் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியும் அவர்களுடைய போதனைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள மக்கள் விரும்பினார்கள். ஆர்வம்காட்டிய அநேகர் யெகோவாவின் சாட்சிகள் மீண்டும் வந்து தங்களைச் சந்திக்கும்வரை காத்திருக்காமல், மிஷனரி இல்லத்திற்கே வந்துவிட்டார்கள். ஒரே சமயத்தில், அந்த இல்லத்தின் வெவ்வேறு இடங்களில் மிஷனரிகள் பைபிள் படிப்புகளை நடத்தினார்கள். ஒரு தொகுதியினர் போனவுடன் மற்றொரு தொகுதியினர் வந்துவிடுவார்கள். “பல வருடங்கள் ஆன பின்பும்கூட, மக்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நினைக்கும்போது, அருமையான அந்தப் படக்காட்சிகள்தான் இன்னமும் அவர்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன” என்று ரோனல்ட் செல்லர்ஸ் சொல்கிறார்.
விடாமுயற்சியால் நல்ல பலன்கள்
லென் ஹெல்பர்க் விஜயம் செய்த இரண்டு மாதங்களுக்குப் பின்பு, அமெரிக்கன் சமோவாவில் உள்ள பகடோகோவில் யெகோவாவின் சாட்சிகளுடைய முதல் சபை ஏற்படுத்தப்பட்டது. ஒரு வருடத்திற்குள், சபை
பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 14-லிருந்து 22 ஆக உயர்ந்தது. வளர்ந்துவந்த அந்தச் சபைக்கு உதவ ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விசேஷ பயனியர்களான ஃபிரெட் வெகனர், ஹெர்லி வெகனர் தம்பதியினர் வந்தார்கள். ஃப்ரெட் தற்போது சமோவா நாட்டு ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராகச் சேவை செய்கிறார்.இத்தகைய பிரஸ்தாபிகளும் பயனியர்களும் மிஷனரிகளும், ‘யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்பட்டார்கள்.’ (ரோ. 12:11, NW) “பிரஸ்தாபிகள் விடாமுயற்சியோடு ஊழியம் செய்தார்கள். அந்தச் சமுதாயத்தில் இருந்தவர்களும் பைபிள்மீது ஆர்வம் காட்டினார்கள். இதனால், 1960-களின் மத்திபத்திற்குள் பகடோகோ கிராமத்திலிருந்த கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் பிரஸ்தாபிகள் பைபிள் படிப்பு நடத்தினார்கள். அந்தத் தீவிலிருந்த ஒவ்வொரு வீட்டையும் மாதத்திற்கு ஒருமுறை சந்தித்தார்கள்” என்று லென் எழுதுகிறார்.
இவர்களுடைய முழுமையான பிரசங்க வேலையின் காரணமாக, பைபிள் போதனைகள்மீது அந்த மக்களுக்கு இருந்த கண்ணோட்டமே மாறியது. லென் தொடர்கிறார்: “பூமியில்தான் முடிவில்லா வாழ்வு கிடைக்கும் என்பதையும், எரிநரகம் இல்லை என்பதையும், இறந்தவர்கள் எந்த உணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் மக்கள் தெரிந்துகொண்டார்கள். இந்த அடிப்படைச் சத்தியங்களை சர்ச்சிலிருந்து அல்ல, யெகோவாவின் சாட்சிகளிடமிருந்தே அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நாங்கள் தனித்தனியாகப் பேசியிருந்ததும், அவர்களுடைய பைபிளை வைத்தே விளக்கம் அளித்திருந்ததும்தான் இதற்குக் காரணம்.”
சர்ச்சிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வந்த எதிர்ப்பின் காரணமாக, பெரும்பாலோர் தாங்கள் கற்றுக்கொண்ட சத்தியங்களுக்கு இசைவாக நடக்கவில்லை. உண்மைக் கிறிஸ்தவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட உயர்ந்த ஒழுக்கநெறிகளுக்கு இசைவாக வாழ்வதற்குப் பதிலாக சர்ச்சுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட ஒழுக்கக்கேடான வாழக்கை முறையை அநேகர் விரும்பினார்கள். என்றாலும், உண்மை மனமுள்ள சிலர் இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட வியாபாரியைப் போலவே சத்தியத்தை விலையுயர்ந்த ஒரு முத்தாகக் கருதி அதைக் கைவசமாக்கிக்கொண்டார்கள். இத்தீவில் வசித்த இப்படிப்பட்ட நல்மனமுள்ள ஆட்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு அதில் உறுதியாக இருந்தார்கள்.—மத். 13:45, 46.
பிரசங்கிக்கையில் சமோவா கலாச்சாரத்திற்கு மதிப்புக்கொடுத்தல்
1960-ல் வாலஸ் பெட்ரோவை மணந்த கனடா நாட்டுப் பயனியரான கரோலின் பெட்ரோ இவ்வாறு சொல்கிறார்: “அந்தக் காலங்களில்,
ஊழியம் செய்வதே ரொம்ப இனிமையான அனுபவமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலுமே யாராவது ஒருவர் பைபிளைப் பற்றிப் பேசுவதற்கு ஆர்வமாக இருப்பார். பைபிள் படிப்பைத் தொடங்குவது ரொம்பச் சுலபமாக இருக்கும். பெரும்பாலும் முழு குடும்பமாக உட்கார்ந்து படிப்பார்கள்.“குறிப்பாக, ஒதுக்குப்புற கிராமங்களில் பிரசங்கித்தது பசுமையான அனுபவம். நாங்கள் வீட்டுக்குவீடு போனபோது சிறு பிள்ளைகள் எங்களுக்குப் பின்னாலேயே வருவார்கள். நாங்கள் சொல்வதை ஒன்றுவிடாமல் உற்றுக் கேட்பார்கள். அதன்பின், எங்களுக்கு முன்பே ஓடிப்போய், நாங்கள் வரும் விஷயத்தைப் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்வார்கள். நாங்கள் எதைப் பற்றிப் பேசினோம், என்ன வசனங்களைச் சொன்னோம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்கள்! இதனால், வெவ்வேறு விதங்களில் நற்செய்தியைச் சொல்வதற்கு நாங்கள் பழகிக்கொண்டோம்.”
ஊழியத்தில் ஈடுபட்டபோது, கண்ணியமான விதத்தில் நடக்க வேண்டும் என்பதிலும் உள்ளூர் பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டும் என்பதிலும் சகோதரர்கள் கவனமாக இருந்தார்கள். (1 கொ. 9:20–23) முன்னாள் மிஷனரியும், இப்போது நியுஜிலாந்தில் கிளை அலுவலகக் கண்காணியுமாக இருக்கும் சார்ல்ஸ் பிரிஸ்சர்ட் இவ்வாறு எழுதுகிறார்: “அங்கே, மிக வெப்பமான சீதோஷ்ணம் நிலவியது, அதனால், கிராமத்து வீடுகளுக்கு (ஃபலே) சுவரே இருக்கவில்லை. வீட்டுக்குள் யாராவது இருக்கிறார்களா என வெளியிலிருந்து பார்த்தாலே தெரிந்துவிடும். நின்றுகொண்டே பேசுவதோ வீட்டுக்காரர் வரவேற்பதற்கு முன்பே பேசுவதோ படுமோசமான பழக்கமாகக் கருதப்பட்டது. அதனால், வீடுவீடாகப் போகும்போது, வீட்டுக்காரர்கள் எங்களைப் பார்க்கும்வரை அமைதியாக நின்றுகொண்டே இருப்போம். அந்த வீட்டுக்காரர் எங்களைப் பார்த்தவுடன் வீட்டுக்குள்ளிருந்த கூழாங்கல் தரையில் சுத்தமான பாயை விரிப்பார். ஷூக்களைக் கழற்றிவிட்டு, உள்ளே வந்து, பாயில் சம்மணமிட்டு உட்காருவதற்கான அழைப்பாக இது இருந்தது.” நிறைய மிஷனரிகளுக்கு இப்படியே வெகுநேரம் உட்கார்ந்திருப்பது பெரும்பாடாக இருந்தது. நல்லவேளை, அந்தக் கலாச்சாரத்தின்படி, பாய்க்கு கீழே கால்களை நீட்டிக்கொள்வதில் எந்தத் தவறும் இருக்கவில்லை. இப்படியாக, வீட்டுக்காரரின் முகத்திற்கு எதிரே வெறுங்காலை நீட்டுவதை அவர்களால் தவிர்க்க முடிந்தது. அப்படி நீட்டுவதை சமோவா மக்கள் பெரும் அவமதிப்பாகக் கருதினார்கள்.
சமோவாவிலும் அமெரிக்கன் சமோவாவிலும் 20 ஆண்டுகள் மிஷனரிகளாய்ச் சேவை செய்த ஜான் ரோட்ஸ் இப்படிச் சொல்கிறார்: “வீட்டுக்காரர்கள் எங்களைப் பவ்வியமாக வரவேற்பார்கள். ‘எங்கள் குடிசை வீட்டுக்கு பைபிள் செய்தியைக் கொண்டுவந்து எங்களைக் கௌரவித்திருக்கிறீர்கள்’ என்று சொல்லிச் சந்தோஷப்படுவார்கள். அதற்குப் பின்பு,
எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்குக் குழந்தை இருக்கிறதா? உங்கள் குடும்பத்தார் எங்கே இருக்கிறார்கள்? என்றெல்லாம் சொந்த விஷயங்களைப் பற்றிக் கேட்பார்கள்.”ஜானின் மனைவி ஹெலன் இவ்வாறு சொல்கிறார்: “பலர்முன் பேசும்போது எப்படிக் கண்ணியமாகப் பேசுவோமோ அப்படித்தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாங்கள் வீட்டுக்காரர்களிடம் பேசினோம். அப்படிப் பேசியது வீட்டுக்காரரைக் கௌரவப்படுத்தியது. பைபிள் செய்தியின் மதிப்பையும் கூட்டியது.”
கரோலின் பெட்ரோ இவ்வாறு சொல்கிறார்: “இப்படி அறிமுகப்படுத்திக்கொண்டதால், அவர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் பற்றி நாங்கள் நன்றாகத் தெரிந்துகொண்டோம். அவர்களும் எங்களைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். இதனால், ஆன்மீக ரீதியில் எங்களால் அவர்களுக்கு நன்கு உதவ முடிந்தது.”
அறிமுகமெல்லாம் முடிந்த பின்பு, பிரஸ்தாபிகள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பேசினார்கள். முன்னாள் மிஷனரி ராபர்ட் பாயிஸ் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் எவ்வளவு நேரம் பேசினாலும் வீட்டுக்காரர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பின்பு, நாங்கள் சொன்ன பல விஷயங்களை அப்படியே திரும்பச் சொல்வார்கள். இப்படிச் சொல்வதன் மூலம் நாங்கள் சொன்ன செய்தி அவர்களுக்கு ரொம்ப முக்கியம் என்பதைக் காட்டினார்கள்.”
அந்த மக்களுக்கு பைபிள் வசனங்கள் அத்துப்படியாக இருந்தன. அதனால், பைபிள் போதனைகளைப் பற்றிச் சகோதரர்களால் வெகுநேரம் கலந்துபேச முடிந்தது. “அவர்களுடன் பேசுவதற்காக பைபிளிலுள்ள பல்வேறு விஷயங்களை நானும் நன்கு ஆராய்ச்சிசெய்து
புரிந்துகொண்டேன்” என்று கரோலின் பெட்ரோ சொல்கிறார். பெரும்பாலான வீட்டுக்காரர்கள் பிரசுரங்களைச் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்கள். பைபிள் போதனைகளை அறிந்துகொள்ள உண்மையிலேயே ஆர்வமுள்ளவர்கள் யார், வெறுமனே கேட்க விரும்பியவர்கள் யார் என்பதைப் பிரஸ்தாபிகள் காலப்போக்கில் புரிந்துகொண்டார்கள்.சபைக் கூட்டங்களுக்கு வந்த புதியவர்கள் பலர் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள். ஜான் ரோட்ஸ் சொல்கிறார்: “மற்றவர்களிடம் பேசுவதில் சமோவா மக்கள் கெட்டிக்காரர்கள். புதிய பிரஸ்தாபிகள் பலர் எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே தங்கள் நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் தயக்கமில்லாமல் பேசினார்கள். இருந்தாலும், அமைப்பு கற்றுக்கொடுத்திருக்கிற ஆலோசனைகளைப் பயன்படுத்தும்படி நாங்கள் அவர்களை ஊக்குவித்தோம். தங்களுடைய பேச்சுத் திறமையில் மட்டுமே சார்ந்திருக்காமல் பைபிளிலிருந்து விளக்கமளித்துப் பேசும்படி உற்சாகப்படுத்தினோம்.” இப்படிப்பட்ட நல்ல பயிற்சியினால் காலப்போக்கில் பலர் திறம்பட்ட ஊழியர்களானார்கள்.
சமோவன் மொழிப் பிரசுரங்களின் தாக்கம்
சமோவா மக்கள் பலரால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியும். ஆனால், எல்லாராலும் அல்ல. சத்தியத்தை நேசிக்கிற இப்படிப்பட்ட மக்களின் இருதயத்தை எட்டுவதற்காக, 1954-ல் பெலே ஃபியுயாயூபோலு சமோவன் மொழியில் நான்கு துண்டுப்பிரதிகளை மொழிபெயர்த்தார். பல வருடங்களுக்கு சமோவன் மொழியின் முக்கிய மொழிபெயர்ப்பாளராக பெலே செயல்பட்டார். இரவு நெடுநேரம் கண்விழித்து, அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் பழங்கால டைப்ரைட்டர் ஒன்றைப் பயன்படுத்தி மொழிபெயர்த்தார்.
அவர் ஒரு மொழிபெயர்ப்பாளராகச் சேவை செய்தது மட்டுமல்லாமல், தன் மனைவியையும் எட்டுப் பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு, சபைக் காரியங்களைப் பார்த்துக்கொண்டு, வாரத்தில் ஐந்தரை நாட்கள் அத்தீவுகள் முழுவதிலும் உள்ள கோகோ தோட்டங்களில் மேற்பார்வையாளராக வேலையும் செய்து வந்தார். அவரைப் பற்றி லென் ஹெல்பர்க் இவ்வாறு எழுதுகிறார்: “பல வருடங்களாக அயராமல் உழைத்தபோதிலும், மற்றவர்கள் தன்னைப் பெரிய ஆளாக நினைக்க வேண்டுமென்றோ புகழ வேண்டுமென்றோ அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால், யெகோவா தன்னைப் பயன்படுத்துவதைப் பெரிய பாக்கியமாகக் கருதி அதற்கு மிகவும் நன்றியுள்ளவராக இருந்தார். அவருடைய உண்மைத்தன்மை, மனத்தாழ்மை, பக்திவைராக்கியம் ஆகியவற்றின் காரணமாக அவர் ஓர் அருமையான சாட்சியாக விளங்கினார். நாங்கள் எல்லாரும் அவரை மனதார மெச்சி நெஞ்சார நேசித்தோம்.”
1955-ல் “ராஜ்யத்தின் நற்செய்தி” என்ற 32-பக்க சிறுபுத்தகத்தின் 16,000 பிரதிகளைப் பிரஸ்தாபிகள் விநியோகித்தார்கள். அந்தப் புத்தகம் பைபிளின் அடிப்படைப் போதனைகளை எளிய மொழியிலும் நன்கு புரிந்துகொள்ளத்தக்க விதத்திலும் அளித்தது. இதனால், பைபிள் படிப்புகளை ஆரம்பித்து நடத்துவதற்கு இது மிகச் சிறந்த கருவியாக இருந்தது. ரிச்சர்ட் ஜென்கென்ஸ் இவ்வாறு எழுதுகிறார்: “இந்தச் சிறுபுத்தகத்தை ஓரிரு முறை படித்தபின்பு புதியவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தயாராகிவிட்டார்கள். இந்தச் சிறுபுத்தகம் எங்களுக்கு ரொம்பவுமே பிடித்திருந்தது!” சீக்கிரத்தில், சமோவன் மொழியில் மற்ற சிறுபுத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டன.
சமோவன் மொழி காவற்கோபுரம் முதன்முதலாக 1958-ல் வெளிவந்தது. அச்சகத் தொழில் தெரிந்திருந்த ஃபிரெட் வெகனர் ஸ்டென்ஸில் பேப்பர்களை ஒன்றிணைத்து, பத்திரிகையைத் தயார்செய்தார். பிற்பாடு, அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பத்திரிகைகள் அச்சிடப்பட்டன. பல்வேறு பிரசுரங்கள் சிறுசிறு பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டு சமோவன் காவற்கோபுரத்தில் ஒவ்வொரு மாதமும் வெளிவந்தன. 1970-களின் ஆரம்பத்திலிருந்து முழு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதனால் பிரசங்க வேலை சூடுபிடிக்கத் துவங்கியது.
அமைப்பு வெளியிட்ட பவுண்ட் புத்தகங்கள் சமோவா தீவு முழுவதிலும் விநியோகிக்கப்பட்டன. நீங்கள் அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்து புதிய பூமிக்குள் செல்லலாம் என்ற புத்தகத்தை 1955-ல் பிரஸ்தாபிகள் விநியோகித்தார்கள். அமெரிக்கன் சமோவாவிலிருந்த பெரும்பாலான குடும்பங்கள் ஒரு பிரதியைப் பெற்றுக்கொண்டன. “மக்கள் பைபிளை வாசித்தார்கள்தான், ஆனால், நிறையப் பேர் அர்மகெதோன் என்ற வார்த்தையைக் கேட்டதுகூட இல்லை. குடும்பமாக இந்தப் புத்தகத்தை வாசித்த பின்பு, கிராமத்துப் பிள்ளைகள் நாங்கள் அங்கு போகும்போதெல்லாம் ‘அர்மகெதோன் வர்றாங்க!’ என்று கத்துவார்கள். சில பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு அர்மகெதோன் என்றும்கூட பெயர் வைத்தார்கள்” என வாலஸ் பெட்ரோ எழுதுகிறார்.
அந்தப் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பு 1972-ல் சமோவன் மொழியில் வெளியிடப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற இந்தப் புத்தகத்திற்கும் கிடைத்தது. ஆரம்பத்தில், பெரும்பாலான மிஷனரிகள் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான அட்டைப் பெட்டி நிறைய இருந்த இந்தப் புத்தகத்தை ஆர்வமுள்ள நபர்களிடம் ஒவ்வொரு மாதமும் விநியோகித்தார்கள். “கடைவீதிகளில் மக்கள் எங்களிடம் வந்து
இந்தப் புத்தகத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டார்கள், சத்தியம் புத்தகத்தின் பிரதிகளை பஸ் ஜன்னல் வழியே தலைநீட்டியும்கூட வாங்கிக்கொண்டார்கள்” என்று ஃபிரெட் வெகனர் சொல்கிறார்.ஆன்மீகப் பலமளித்த மாநாடுகள்
ஜூன் 1957-ல் அமெரிக்கன் சமோவாவிலுள்ள பாகோ பாகோவில் முதல் வட்டார மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்த சகோதரர்கள் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தார்கள். அந்த நிகழ்ச்சியை அனுபவித்து மகிழ சமோவாவிலிருந்த பிரஸ்தாபிகள் படகில் வந்திருந்தார்கள். பொதுமக்களை அழைப்பதற்கு ஆர்வமாயிருந்த சகோதரர்கள், மாநாட்டு நிகழ்ச்சியைப் பற்றி சமோவன் மொழியிலும் ஆங்கிலத்திலும் பெருமளவு விளம்பரம் செய்தார்கள். இதன் விளைவாக, வெள்ளிக்கிழமை காலை நிகழ்ச்சிக்கு 106 பேர் வந்திருந்தார்கள்; சமோவாவிலும் அமெரிக்கன் சமோவாவிலும் இருந்த 60 பிரஸ்தாபிகளுக்கு ஒரே சந்தோஷம்!
வேடிக்கை பார்த்தவர்களின் காரணமாகவும், சமோவா நாட்டுக் கலாச்சாரத்தின் காரணமாகவும் மதிய உணவு இடைவேளையின்போது எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்தன. ரோனல்ட் செல்லர்ஸ் இவ்வாறு எழுதுகிறார்: “சமோவா கலாச்சாரத்தில் உணவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. சாப்பாட்டு நேரத்தில் போவோர் வருவோரைச் சாப்பிட வரும்படி அழைப்பது அவர்களுடைய வழக்கம். ஆனால், மாநாட்டின் மதிய உணவு வேளையில் ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான ஆட்களைச் சகோதரர்கள் அழைத்தபோது,
உணவு இலாகாவில் இருந்தவர்கள் திண்டாடிப்போனார்கள். ஏனென்றால், மாநாட்டிற்கு வந்திருந்த சகோதர சகோதரிகளுக்கு மட்டும்தான் அவர்கள் சமைத்திருந்தார்கள்.”என்றாலும், வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு உணவு வேளை சிறந்த சாட்சியாக அமைந்தது. சமோவாவில், விசேஷத் தருணங்களில், ஆண்களுக்கே முதலில் உணவு பரிமாறப்படும். அதற்குப் பின்புதான், பெண்களும் பிள்ளைகளும் சாப்பிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களும் மதத் தலைவர்களும் தனியே உட்கார்ந்து சாப்பிடுவார்கள். உள்ளதிலேயே நல்ல உணவு அவர்களுக்குப் பரிமாறப்படும். ஆனால் மாநாட்டில், வெளிநாட்டு மிஷனரிகளும் உள்ளூர் குடும்பங்களும் சரிசமமாக உட்கார்ந்து சந்தோஷமாகச் சாப்பிடுவதை வெளியாட்கள் கவனித்தார்கள். யெகோவாவின் மக்களிடையே நிலவிய அன்பும் ஒற்றுமையும் கண்கூடாகத் தெரிந்தது.
இப்படிப்பட்ட மாநாடுகள் பிரஸ்தாபிகளை ஊக்கமூட்டி பயிற்றுவித்ததோடு, வரவிருந்த சோதனைகளுக்கும் அவர்களைத் தயார்படுத்தியது.
அபியாவில் விசுவாசதுரோகம்
சமோவன் தீவுகளில் ஒருபக்கம் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. ஆனால், மறுபக்கம் பிரச்சினைகள் தலைகாட்டத் தொடங்கின. தலைக்கனம் பிடித்த ஊர்ப் பெரியவர் (மட்டாய்) ஒருவருடைய தலைமையில் பலர் தேவராஜ்ய வழிநடத்துதலை எதிர்க்கத் தொடங்கினார்கள். இவர்கள் அபியா சபையில் பெரும் பிரச்சினைகளைக் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். சபைக் கூட்டங்கள் அந்த நபருடைய வீட்டில் நடந்ததால், சபையில் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே போயின.
கடைசியில், 1958-ல் அந்தக் கலகக்காரர்கள் சபையிலிருந்து பிரிந்து தனியாகப் படிப்புத் தொகுதி ஒன்றை உருவாக்கினார்கள். ஆஸ்திரேலியக் கிளையில் அப்போது சேவை செய்துவந்த டக்ளஸ் ஹெல்ட் அச்சமயத்தில் பிஜிக்கு விஜயம் செய்தார். அந்த அதிருப்தியாளர்களைத் திருத்துவதற்காக அங்கிருந்து சமோவாவுக்கு வந்தார். பைபிளிலிருந்து அவர் தந்த சிறந்த ஆலோசனைகள் சபையிலிருந்த உண்மையுள்ள நபர்களைப் பெரிதும் பலப்படுத்தின. என்றாலும், சபைக் கூட்டங்களுக்கு வந்த கால்வாசி பேர் காலப்போக்கில் கலகக்காரர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். இவர்களில் பலர் பின்பு சபைநீக்கம் செய்யப்பட்டார்கள். தலைக்கனத்தினால் தங்கள் தலையிலேயே மண்ணைப் போட்டுக்கொண்டார்கள்!
யெகோவாவின் சக்தி எந்தத் தொகுதியுடன் இருந்தது என்பது விரைவில் தெளிவானது. காலப்போக்கில் கலகக்காரர்களின் தொகுதி சிதறிச் சின்னாபின்னமானது. ஆனால், அந்த வருடம் அபியா சபையில்
பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்தது. சில நாட்களுக்கு அபியா மருத்துவமனைக்கு அருகில் இருந்த ரிச்சர்ட் மற்றும் குளோரியா ஜென்கென்ஸ் தம்பதியர் வீட்டில் சபைக்கூட்டம் நடந்தது. பின்பு, அபியாவிலுள்ள ஃபாட்டோயியாவில் இருந்த மாட்டுஸி லியாவானியின் வீட்டில் நடந்தது. இங்கே, பிரஸ்தாபிகள் உண்மையான அன்பையும் அரவணைப்பையும் அனுபவித்தார்கள். அபியாவில் முதல் ராஜ்ய மன்றம் மாட்டுஸிக்குச் சொந்தமான இடத்தில் பின்னர் கட்டப்பட்டது. அதற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி சபை நிதியுதவி அளித்தது.ஊக்கமளிக்கும் தோழமை
அபியாவில் 1959-ம் வருடம் நடந்த முதல் வட்டார மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்கன் சமோவாவைச் சேர்ந்த ஐந்து மிஷனரிகளுக்கு சமோவா அரசாங்கம் அனுமதி அளித்தது. இதனால் அபியா சபையில் இருந்தவர்கள் மேலும் பலப்படுத்தப்பட்டார்கள். 288 பேர் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் 10 பேர் ஞானஸ்நானம் பெற்றபோது அங்கிருந்த எல்லாருக்கும் எவ்வளவு ஆனந்தம்! இரண்டு வருடங்களுக்குப் பின்பு, வயிட் ஹார்ஸ் இன் என அழைக்கப்பட்ட ஒரு விருந்தினர் மாளிகைக்கு அருகே இருந்த பழைய ஜெர்மானிய மருத்துவமனைக் கட்டிடத்தில் முதல் மாவட்ட மாநாட்டை நடத்த அபியா சபை ஏற்பாடு செய்தது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சகோதர சகோதரிகள் நியுஜிலாந்து போன்ற தொலைதூர நாடுகளிலிருந்தும்கூட வந்திருந்தார்கள்.
மாநாடுகளை ஒழுங்கமைப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள இத்தகைய சந்தர்ப்பங்கள் அங்கிருந்த சகோதரர்களுக்கு வாய்ப்பளித்தன. இதனால், சமோவா அரசாங்கம் பின்னர் பயணக் கண்காணிகளையும் மிஷனரிகளையும் நாட்டுக்குள் வருவதற்குத் தடைவிதித்தபோது, சகோதரர்கள் தாங்களாகவே மாநாடுகளை ஒழுங்கமைக்க முடிந்தது. 1967-ல், இவர்கள் முழு ஒப்பனையுடன் கூடிய ஒரு மணிநேர பைபிள் நாடகத்தையும்கூட நடத்தினார்கள். சமோவா மக்கள் ரசித்த முதல் நாடகம் இது! பண்டைய இஸ்ரவேலில் கடவுள் ஏற்பாடு செய்திருந்த அடைக்கலப் பட்டணங்களைப் பற்றிய இந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் இன்றும் அதை ஆசை ஆசையாய் நினைத்துப் பார்க்கிறார்கள்.
அந்த வருடங்களில், சமோவாவிலிருந்த பிரஸ்தாபிகள் அமெரிக்கன் சமோவாவிலும் பிஜியிலும் நடைபெற்ற மாவட்ட மாநாடுகளில் கலந்துகொண்டு பயனடைந்தார்கள். அதில் கலந்துகொள்ள அவர்கள் அதிக முயற்சியும் தியாகமும் செய்ய வேண்டியிருந்தது. உதாரணமாக, பிஜியில் நடைபெறுகிற மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்றால், உணவு, பயணம் போன்றவற்றுக்குச் செலவு செய்வதோடு, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு சமோவாவைவிட்டு வேறொரு இடத்தில் தங்கவும் வேண்டியிருந்தது.
அமெரிக்கன் சமோவா—முன்னேற்றப் பாதையில்
1966-ல் பாகோ பாகோ என்ற இடத்திலே “கடவுளுடைய சுதந்திரப் பிள்ளைகள்” என்ற மாவட்ட மாநாட்டை நடத்தியது குறித்து அமெரிக்கன் சமோவாவிலிருந்த சகோதரர்கள் பூரித்துப்போனார்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டிற்கு ஆஸ்திரேலியா, பிஜி, நியூ கலிடோனியா, நியுஜிலாந்து, நியூ, சமோவா (முன்பு மேற்கு சமோவா), டஹிடி, டோங்கா, வனுவாட்டு (முன்பு நியு ஹெப்ரிட்ஸ்) ஆகிய இடங்களிலிருந்து 372 பேர் வந்திருந்தார்கள். இவர்கள் எட்டு மொழிகளைப் பேசுபவர்கள். மாநாட்டு நகரத்திலிருந்த சபையில் அப்போது 28 பிரஸ்தாபிகளே இருந்தார்கள். ஆனால், பன்மொழி பேசும் பலதரப்பட்ட சாட்சிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்ததால் ஒரு சாட்சிக்கு 35 உள்ளூர்வாசிகள் என்ற விகிதத்தில் சாட்சிகளின் எண்ணிக்கை உயர்ந்தது.
மாநாட்டிற்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் இவ்வளவு சொற்ப பிரஸ்தாபிகளால் தங்கும் வசதிகளை எப்படிச் செய்துகொடுக்க முடிந்தது? இதைப் பற்றி ஃபிரெட் வெகனர் இவ்வாறு சொல்கிறார்: “வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்குத் தங்கும் வசதிகளைச் செய்வதில் எங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை. ஏனென்றால், உள்ளூர்வாசிகள் உபசரிக்கும் குணம் படைத்தவர்கள்; சகோதரர்களை அவர்கள் அன்பாகக் கவனித்துக்கொண்டார்கள்; மதத் தலைவர்களுக்கு அது எரிச்சலூட்டிய போதிலும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.”
இந்த மாநாடு, புதுத் தெம்போடு கடவுளுடைய சேவையில் ஊக்கமாய் ஈடுபட பாகோ பாகோ சபையினரைத் தூண்டியது. ஆறே மாதங்களில் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கையில் 59 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டது. புதியவர்களில் அநேகர் நற்செய்தியை அறிவிக்கும் பிரஸ்தாபிகளானார்கள். “இந்த மாநாடு, கூட்டங்களை நடத்துவதற்காக ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டவும் சபையாரைத் தூண்டியது” என எழுதினார் ரோனல்ட் செல்லர்ஸ். டூடுயீலா தீவிலுள்ள பாகோ பாகோ நகரில் காலி இடங்களைப் பார்ப்பதே அரிது; இருப்பினும், இந்த நகரத்திற்கு மேற்கே டாஃபூனாவில், உள்ளூர் பிரஸ்தாபி ஒருவர் தன்னுடைய காலி இடத்தைச் சபைக்காக 30 வருடங்களுக்கு எழுதிக் கொடுத்தார்.
“இந்த இடம் மிகத் தாழ்வான பகுதியில் இருந்ததால் இறுகிய எரிமலை குழம்புப் பாறைகளால் அதன் அஸ்திவாரத்தை உயர்த்த மூன்று மாதங்களுக்குச் சகோதரர்கள் இரவு பகலாகப் பாடுபட்டார்கள்” என்கிறார் ஃபிரெட் வெகனர்.
அந்த நகரிலிருந்த கத்தோலிக்கப் பாதிரி ஒருவர் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைத் தவறாமல் வாசித்து வந்தார்; ராஜ்ய மன்றத்தில் தளம் போடும் சமயத்தில் இவர், சர்ச்சுக்குச் சொந்தமான சிமெண்ட் கலவை இயந்திரத்தைச் சகோதரர்கள் உபயோகித்துக்கொள்ளும்படி கொடுத்தார். “திருமணத்தைப் பற்றி விழித்தெழு!-வில்
வெளிவந்த ஒரு கட்டுரையை வாசித்த உடனேயே திருமணம் செய்துகொள்ள தன் பதவியைவிட்டு விலகினார் இந்தப் பாதிரி” என எழுதுகிறார் ரோனல்ட் செல்லர்ஸ்.இந்த ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணிக்கு வெளிநாடுகளிலிருந்த சகோதரர்கள் தாராளமாக உதவினார்கள். அமெரிக்கன் சமோவாவில் மிஷனரிகளாகச் சேவை செய்ய முதன்முறையாக வந்த கார்டன் ஸ்காட், பட்ரீஷா ஸ்காட் தம்பதியர் (இவர்கள் பிற்பாடு அமெரிக்கா திரும்பியிருந்தார்கள்) இந்தப் புதிய ராஜ்ய மன்றத்திற்குத் தங்களுடைய சபையிலிருந்த நாற்காலிகளை நன்கொடையாக அளித்தார்கள். “சபைக்குத் தேவையானது போக மீதமிருந்த நாற்காலிகளை உள்ளூரிலிருந்த ஒரு திரையரங்கிற்கு விற்று அந்தப் பணத்தை நாற்காலிகளை இறக்குமதி செய்ததற்கான செலவுக்குப் பயன்படுத்திக்கொண்டோம்” என்கிறார் ரோனல்ட் செல்லர்ஸ். 130 பேர் உட்காரும் வசதி கொண்ட புதிய ராஜ்ய மன்றம் டாஃபூனாவில் கட்டப்பட்டு 1971-ல் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. பின்னர், இந்த ராஜ்ய மன்றத்திற்கு மேலே மிஷனரிகள் தங்குவதற்கான அறைகள் கட்டப்பட்டன.
சமோவாவில் மிஷனரிகள் கால்பதிக்கிறார்கள்
யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் மிஷனரிகள் சமோவாவுக்குள் வர அரசாங்கம் கட்டுப்பாடு விதித்திருந்ததால் 1974 வரை ஊழியம் முடங்கிக் கிடந்தது. அந்த வருடம் அங்கிருந்த பொறுப்பான சகோதரர்கள் இது குறித்து பிரதம மந்திரியை நேரில் சந்தித்துப் பேசினார்கள். அவர்களில் ஒருவரான முபாலூ கலூவா என்பவர் இவ்வாறு எழுதினார்: “அவரிடம் [பிரதமரிடம்] பேசிக்கொண்டிருந்தபோது, எல்லா மிஷனரிகளுடைய விண்ணப்பங்களையும் பரிசீலிக்க அரசு அங்கீகாரம் பெறாத குழு ஒன்றை அரசு அதிகாரி ஒருவர் நியமித்திருந்தது எங்களுக்குத் தெரியவந்தது. யெகோவாவின் சாட்சிகளைப் பகைத்தவர்களே இந்தக் குழுவில் இருந்ததால் பிரதமரிடம்கூடத் தெரிவிக்காமல் விசா பெறுவதற்கான விண்ணப்பங்களைக் கண்ணை மூடிக்கொண்டு நிராகரித்துவிட்டார்கள்.
“இந்தச் சூழ்ச்சி இப்போதுதான் பிரதமருக்கே தெரியவந்தது; எனவே அவர் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய ஃபைலை உடனடியாக எடுத்துவரும்படி தலைமை குடியேற்ற அதிகாரிக்கு ஆணையிட்டார். எங்கள் கண் முன்னாலேயே அரசு அங்கீகாரம் பெறாத அந்தக் குழுவைக் கலைத்துவிட்டார்; பால் ஈவான்ஸ், ஃபிரான்சஸ் ஈவான்ஸ் தம்பதியருக்கு மூன்று வருடம் மிஷனரி ஊழியம் செய்ய விசா வழங்கியதோடு அதை நீட்டிப்பதற்கும் அனுமதி வழங்கினார்.” இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! 19 வருட போராட்டத்திற்குப் பின்னர் ஒருவழியாக இப்போதுதான் மிஷனரிகளால் அதிகாரப்பூர்வமாக சமோவாவுக்குள் நுழைய முடிந்தது.
பால் ஈவான்ஸ், ஃபிரான்சஸ் ஈவான்ஸ் தம்பதியர் ஆரம்பத்தில் முபாலூ கலூவா குடும்பத்தாருடன் தங்கினார்கள். ஜான் ரோட்ஸ்,
ஹெலன் ரோட்ஸ் தம்பதியர் வந்தபோது இந்த இரு தம்பதியரும் அபியாவிலுள்ள வையலா மாவட்டத்தில் புதிதாக வாடகைக்கு எடுக்கப்பட்ட மிஷனரி வீட்டில் குடியேறினார்கள். பிறகு மிஷனரிகளாகச் சேவை செய்ய 1978-ல் ராபர்ட் பாயிஸ், பெட்டி பாயிஸ் தம்பதியரும் 1979-ல் டேவிட் யாஷிகாவா, சூசன் யாஷிகாவா தம்பதியரும் 1980-ல் ரஸல் அன்ஷா, லேலானி அன்ஷா தம்பதியரும் வந்தார்கள்.தீவு வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ளுதல்
இயற்கை எழில் கொஞ்சும் சமோவாவில் சவால்களுக்கும் பஞ்சமில்லை என்பதை இங்கே குடியேறிய வெளிநாட்டு சகோதர சகோதரிகள் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டார்கள். அத்தகைய சவால்களில் ஒன்று போக்குவரத்து. இதைக் குறித்து ஜான் ரோட்ஸ் எழுதினார்: “அபியா என்ற இடத்தில் மிஷனரிகளாக ஊழியம் செய்ய ஆரம்பித்த முதல் இரண்டு வருடங்களில் நாங்கள் கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் பெரும்பாலும் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றோம். அந்தத் தீவில், சாதாரண மக்கள் பயன்படுத்துகிற, கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் உலா வருகிற பஸ்களிலும் பயணம் செய்தோம்.”
இந்த பஸ்கள் எக்கச்சக்கமான அலங்காரத்தோடு காட்சியளித்தன; இவை பார்ப்பதற்குச் சிறிய அல்லது சற்றுப் பெரிய டிரக்குகளைப் போல இருந்தன; இவற்றின் பின்பக்கத்தில் ஆட்கள் உட்காருவதற்கு வசதியாக மரத்தாலான பெரிய பெட்டி ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். பஸ்ஸுக்குள் கால் வைக்கக்கூட இடமில்லாத அளவிற்கு நெரிசல் இருக்கும்; போதாக்குறைக்கு, பயணிகள் விவசாயக் கருவிகள்முதல் விளைபொருள்கள்வரை சகலத்தையும் எடுத்துக்கொண்டு வருவார்கள்.
காதைப் பிளக்கும் இசையிலும் குஷியான பாட்டிலும் அந்த வண்டியே திருவிழாக் கோலத்தில் காட்சி அளிக்கும். இந்த பஸ்கள் நினைத்த இடத்தில் நிற்கும், நினைத்த நேரத்திற்கு வரும், நினைத்த பாதையில் செல்லும். இதைக் குறித்து ஒரு பயண வழிகாட்டி புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “வவாயூக்குப் போகும் பஸ்கள் நிச்சயம் வரும், ஆனால் அது எப்போது வரும் என்றுதான் சொல்ல முடியாது.”“வழியில் எங்களுக்கு ஏதாவது வாங்க வேண்டி இருந்தால் ஓட்டுனரிடம் வண்டியைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்வோம். வேண்டியதை வாங்கிக்கொண்டு மீண்டும் அதே வண்டியில் ஏறிச் செல்வோம். ஆனால், காலதாமதத்தைக் குறித்து யாரும் கவலைப்பட மாட்டார்கள்” என்கிறார் ஜான்.
பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தால், அடுத்தடுத்து ஏறும் பயணிகள் ஏற்கெனவே உட்கார்ந்திருக்கிறவர்களின் மடியில் உட்காருவார்கள். இதனால், மிஷனரி சகோதரர்கள் தங்கள் மனைவிகளை மடியில் உட்கார வைத்துக்கொள்ளப் பழகிக்கொண்டார்கள். இறங்கும் சமயத்தில் பிள்ளைகளும் பெரியவர்களும் தங்களுடைய காதுகளில் செருகி வைத்திருந்த காசை எடுத்துப் பயணக் கட்டணத்தைச் செலுத்துவார்கள். அதுதான் அவர்களுக்கு வசதியான “பாக்கெட்”!
மிஷனரிகளும் பிரஸ்தாபிகளும் தீவுகளுக்கிடையே பயணம் செய்ய விமானங்களையும் சிறு படகுகளையும் பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் பயணம் ஆபத்து நிறைந்ததாய் இருந்தது. காலதாமதமும் ஏற்பட்டது. “நாங்கள் பொறுமையாக இருக்கக் கற்றுக்கொண்டோம், நகைச்சுவை உணர்வையும் வளர்த்துக்கொண்டோம்” என்கிறார் எலிசபெத் லிலீங்வர்த். இவர் பயணக் கண்காணியாகச் சேவை செய்த தன் கணவர் பீட்டருடன் சேர்ந்து தென் பசிபிக் பகுதி முழுவதிலும் பல வருடங்கள் ஊழியம் செய்தவர்.
கொட்டும் மழையில் இத்தீவுக்குள் பயணம் செய்வது படுகஷ்டம், அதுவும் புயல் வீசும் சமயங்களில் சொல்லவே வேண்டாம். மிஷனரியாகச் சேவை செய்த ஜெஃப்ரி ஜேக்ஸன் ஒரு முறை புத்தகப் படிப்புக்குச் செல்லும் வழியில் கரை புரண்டோடிய ஓர் ஆற்றைக் கடக்க முயற்சி செய்தார். அப்போது பெருக்கெடுத்தோடும் தண்ணீரில் தவறி விழுந்துவிட்டார். தொப்பலாக நனைந்து, அழுக்கு உடையோடு கூட்டத்திற்குச் சென்றார். புத்தகப் படிப்பு நடக்கும் வீட்டில் இருந்தவர்கள் துடைத்துக்கொள்ள துண்டையும் கருப்பு நிறத்தில் நீளமான லாவாலாவா உடையையும் (இது பாலினேசியாவைச் சேர்ந்தவர்கள் அணியும் பாவாடையைப் போன்ற உடையாகும்) கொடுத்தார்கள். அன்று புதிதாகக் கூட்டத்திற்கு வந்த ஒருவர் அவரைப் பார்த்து கத்தோலிக்க மதகுரு என நினைத்துக்கொண்டார்! ஜேக்ஸனின் நண்பர்களுக்குச் சிரித்துச் சிரித்து வயிறே புண்ணாகிவிட்டது. சகோதரர் ஜேக்ஸன் இப்போது ஆளும் குழுவின் அங்கத்தினராகச் சேவை செய்கிறார்.
புதிய மொழியைக் கற்றுக்கொள்வது, சதா சுட்டுப் பொசுக்கும் வெயிலில் வாழ்வதற்குப் பழகிக்கொள்வது, புதுப்புது வியாதிகளைச் சமாளிப்பது, நவீன வசதிகளின்றி வாழ்க்கையை ஓட்டுவது, படையெடுத்து வரும் விஷப் பூச்சிகளிடமிருந்து தப்புவது எனப் பல்வேறு சவால்களைப் புதிதாக வந்த மிஷனரிகள் சந்தித்தார்கள். முபாலூ கலூவா இவ்வாறு எழுதினார்: “உண்மையில், மிஷனரிகள் எங்களுக்கு உதவுவதற்காக ரொம்ப முயற்சிகளை எடுத்தார்கள். எங்கள்மீது பாசமழை பொழிந்தார்கள். அந்த அன்பானவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அவர்கள் நினைவாக அநேக பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெயர்களைச் சூட்டினார்கள்.”
சவாயி தீவில் நற்செய்தி
சமோவாவிலுள்ள தீவுகளிலேயே மிகப் பெரியதும் இயற்கை வனப்பு குலையாததுமான தீவுதான் சவாயி தீவு. அந்தத் தீவைப் பற்றி இப்போது நாம் பார்ப்போம். மனிதர்கள் அதிகம் இல்லாத தீவு இது; வானுயர்ந்த மலைகளும், கிட்டத்தட்ட 450 எரிமலைக் குழிகள் (craters) உள்ள செங்குத்தான, கரடுமுரடான மலைகளும், நுழைய முடியாத அடர்ந்த காடுகளும், மேடுபள்ளங்கள் நிறைந்த லாவா நிலப் பகுதிகளுமே இங்கே கண்ணில் தென்படும் காட்சிகள். கடலோரத்தில் சிதறிக்கிடக்கும் குக்கிராமங்களிலேயே முக்கால்வாசிப் பேர் குடியிருக்கிறார்கள். 1955-ல்தான் சவாயி தீவில் முதன்முறையாக நற்செய்தி ஒலித்தது. லென் ஹெல்பர்க்கும் அவருடன் சில பிரஸ்தாபிகளும் புதிய உலக சமுதாயம் செயலில் என்ற ஆங்கிலப் படத்தைக் காட்டுவதற்காக யூப்போலூ என்ற தீவிலிருந்து வந்து சில நாட்கள் தங்கினார்கள்.
ஆறு வருடங்களுக்குப் பிறகு, அமெரிக்கன் சமோவாவிலிருந்து டீயா அலூனி, ஐவி கௌவெ என்ற இரண்டு மிஷனரி சகோதரிகள் சவாயி
தீவில் ஊழியம் செய்வதற்கு வந்தார்கள்; இவர்களில், டீயா அலூனி சமோவாவிலிருந்து கிலியட்டுக்குச் சென்ற முதல் சகோதரி ஆவார். இவர்கள் 1961-ல் இங்கு வந்தபோது தீவுக்குக் கிழக்கே இருந்த ஃபங்கபோவா என்ற கிராமத்தில் வசித்துவந்த வயதான தம்பதியினருடன் தங்கினார்கள். பிறகு விசேஷ பயனியராக இருந்த மற்றொரு சகோதரியும் கொஞ்சக் காலத்திற்கு இவர்களுடன் வந்து தங்கினார்; இவர் முன்பு சவாயி தீவில் வசித்து வந்தவர். ஆறிலிருந்து எட்டுப் பேர் இருந்த புதிய தொகுதிக்கு உற்சாகத்தையும் ஒத்துழைப்பையும் அளிப்பதற்காக அபியாவிலிருந்து சகோதரர்கள் மாதத்திற்கு ஒருமுறை வந்து பொதுப் பேச்சு கொடுத்தார்கள். இந்தக் கூட்டங்கள் ஃபங்கபோவாவிலுள்ள சிறிய வீட்டில் நடைபெற்றன.டீயாவும் ஐவியும் 1964 வரை சவாயி தீவில் ஊழியம் செய்தார்கள்; அதன் பிறகு வேறொரு தீவுக்கு அனுப்பப்பட்டார்கள். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சவாயி தீவில் ஊழியம் மந்த நிலையில் இருந்தது. மீண்டும் ஊழியம் மும்முரமாய் நடைபெறுவதற்காக 1974-ன் ஆரம்பத்தில் அநேக குடும்பங்கள் சவாயி தீவுக்குக் குடிமாறிச் சென்றன. அவர்களில், ரிசாடி ஸீங்கி, மரீட்டா ஸீங்கி தம்பதியரும் ஹாப்பி கால்ட்னர் பார்னட், மாவோட்டா கால்ட்னர் பார்னட் தம்பதியரும் ஃபைங்காயி டூ என்ற சகோதரியும், பலோட்டா அலாங்கி என்ற சகோதரரும், கூமி ஃபளிமாவா (பின்னர் கூமி தாம்ஸன்) என்ற சகோதரியும் அமெரிக்கன் சமோவாவிலிருந்து வந்திருந்த ரோனல்ட் செல்லர்ஸ், டாலி செல்லர்ஸ் தம்பதியரும் அடங்குவர். ஃபங்கபோவாவில் உருவான சிறிய தொகுதியைச் சேர்ந்தவர்கள் கடற்கரையோரத்தில் அமைந்திருந்த ஸீங்கியின் வீட்டில் கூட்டங்களுக்காகக் கூடினார்கள். பிற்பாடு அதற்கு அருகிலேயே ஒரு மிஷனரி இல்லமும் ராஜ்ய மன்றமும் கட்டப்பட்டது. காலப்போக்கில், சவாயி தீவின் மேற்குக் கரையிலுள்ள டங்கா என்ற இடத்தில் மற்றொரு தொகுதி உருவானது.
1979 முதற்கொண்டு, பிரஸ்தாபிகளுக்கு உதவ அநேக மிஷனரி தம்பதிகள் சவாயிக்கு அனுப்பப்பட்டார்கள். ராபர்ட் பாயிஸ், பெட்டி பாயிஸ் தம்பதியர், ஜான் ரோட்ஸ், ஹெலன் ரோட்ஸ் தம்பதியர், லீவா ஃபாஐயூ, டீனைசியா ஃபாஐயூ தம்பதியர், ஃபிரெட் ஹோம்ஸ், டேமீ ஹோம்ஸ் தம்பதியர், ப்ரையன் மல்கேஹி, ஸ்சூ மல்கேஹி தம்பதியர், மேத்யூ குர்ட்ஸ், டெபி குர்ட்ஸ் தம்பதியர், ஜாக் வைசர், மாரிஜேன் வைசர் தம்பதியர் ஆகியோர் வந்தார்கள். இந்த மிஷனரிகளின் சிறந்த முன்மாதிரியால் சவாயி தீவில் ஊழியம் சீராக முன்னேறியது.
என்றாலும், சவாயி தீவுவாசிகளைப் பாரம்பரியமும் குடும்பப் பிணைப்புகளும் கட்டிப்போட்டிருந்தன. அதோடு, அங்கிருந்த முக்கால்வாசி கிராமங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலைக்குத் தடைவிதித்திருந்தன. சில கிராமங்கள் இதை ரேடியோ மூலம் அறிவிக்கவும் செய்தன. எனவே, புதியவர்கள் சத்தியத்தில் முன்னேற்றம் செய்ய உதவுவதில் சாட்சிகளுக்கு அதிக நேரமும் பொறுமையும் தேவைப்பட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அநேகர், உடல்நல பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்கூட, சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.யெகோவாவைச் சேவிக்க சுகவீனங்களோடு மல்லுக்கட்டுதல்
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மெட்டுசேலா நேரூ; 12 வயதில் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் இவரது முதுகுத்தண்டு முறிந்துவிட்டது. இவரைக் குறித்து ஒரு மிஷனரி இவ்வாறு சொல்கிறார்: “இந்த விபத்திற்குப் பிறகு அவருக்குக் கூன் விழுந்துவிட்டது; தீராத வலியோடு அவதிப்பட்டுவந்தார்.” இவர் 19 வயதில் யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிள் படிக்க ஆரம்பித்தபோது இவருடைய குடும்பத்தாரின் எதிர்ப்பை உறுதியாய்ச் சகித்து நின்றார். ஐந்து நிமிட நடை தூரத்தில் சபைக் கூட்டங்கள் நடைபெற்றாலும் உடல் குறைபாடு காரணமாக அங்கே போய்ச் சேர இவருக்கு 45 நிமிடங்கள் எடுத்தன; அந்த நிமிடங்கள் வேதனையிலும் வலியிலும் கரைந்தன. என்றாலும், மெட்டுசேலா சத்தியத்தில் நல்ல முன்னேற்றம் செய்தார், 1990-ல் ஞானஸ்நானம் பெற்றார். பின்னர், ஒழுங்கான பயனியராக முழுநேர ஊழியத்தில் கால் பதித்தார், மூப்பர் ஆனார். அப்போதுமுதல் இவருடைய உறவினர்களில் 30-க்கும் அதிகமானோர் ஃபாங்கா கிராமத்தில் நடக்கும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்; அவர்களில் அநேகர் ஞானஸ்நானம் பெற்றுவிட்டார்கள். இன்னமும் இவர் உடல் சுகவீனங்களோடு போராடிக்கொண்டிருந்தாலும் ‘சிரித்த முகத்துடன் கலகலப்பாகப் பழகுபவர்’ என்று பெயரெடுத்திருக்கிறார்.
உடல் சுகவீனங்களின் மத்தியிலும் ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்குப் போராடிய மற்றொரு சகோதரர் சௌமாலூ டௌவாயனை. தொழுநோயால் உருக்குலைந்து போயிருந்த இவர் ஆவோபோ என்ற ஒதுக்குப்புற கிராமத்தில் வசித்து வந்தார். இந்தக் கிராமம் மிகமிகத் தொலைவில் இருந்ததால் இவருக்கு முதலில் சகோதரர் ஐவன் தாம்ஸன் கடிதம் மூலம் பைபிள் படிப்பு நடத்தினார். பிறகு, ஆசா கோ என்ற விசேஷ பயனியர் சவாயிக்குக் குடிமாறிச் சென்றபோது சௌமாலூவுக்கு இவரே பைபிள் படிப்பு நடத்தினார். 1991-ல் சௌமாலூ முதன்முறையாகக் கூட்டத்திற்குச் செல்ல தீவின் மறுகோடியிலுள்ள டங்கா என்ற கிராமத்திற்கு இரண்டு மணி நேரம் வாகனத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
தன் உருக்குலைந்த உருவத்தைப் பார்த்து மற்றவர்கள் முகம் சுளித்துவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு எப்போதுமே இருந்தது; அதனால், முதன்முறையாக விசேஷ மாநாட்டு தினத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது நிகழ்ச்சிகளைத் தன் காரிலிருந்தே கேட்டார். ஆனால், மதிய சாப்பாட்டு இடைவேளையின்போது சகோதர சகோதரிகள் அவரிடம் கனிவாகப் பேசி தங்களுடன் வந்து உட்காரும்படி அவரை அன்பாக அழைத்தார்கள். அவர்களுடைய அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து கூட்டத்தாருடன் உட்கார்ந்து மதிய நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார்.
சீக்கிரத்தில் ஃபாங்காவில் நடைபெற்ற கூட்டங்களுக்கு சௌமாலூவும் அவருடைய மனைவி டோரீஸெயும் செல்ல ஆரம்பித்தார்கள்; ஃபாங்காவுக்குப் போய்வர அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. சௌமாலூ 1993-ல் ஞானஸ்நானம் பெற்றார்; சீக்கிரத்தில், உதவி ஊழியராக ஆனார். பிற்பாடு, டாக்டர்கள் அவருடைய கால்களில் ஒன்றை வெட்டியெடுத்தபோதிலும் தன் காரில் கூட்டங்களுக்குச் சென்றுவருகிறார். சௌமாலூ, டோரீஸெ தம்பதியரின் கிராமத்தில் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதால் சந்தர்ப்ப சாட்சியின் மூலமும், தொலைபேசியின் மூலமும் ஊக்கமாய்ச் சாட்சி கொடுத்து வருகிறார்கள்.
இப்போது இவர்கள் அபியாவில் வசிக்கிறார்கள்; அங்கே, உடல்நல பிரச்சினைகளுக்காக சௌமாலூ தவறாமல் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடைய நிலைமையை நினைத்துக் கசந்துகொள்ளவில்லை, மாறாக நம்பிக்கையான மனநிலை உள்ளவர் என்றும், எப்போதும் சந்தோஷமாய் இருப்பவர் என்றும் பெயரெடுத்திருக்கிறார். இவரும் இவருடைய மனைவியும் கடவுளிடம் வைத்திருக்கிற விசுவாசத்திற்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள்.
டோகிலாவ்வில் எதிர்ப்பு தலைதூக்குகிறது
காயலைச் சூழ்ந்த மூன்று தனித்தனி பவழத் தீவுகளால் ஆன டோகிலாவ், சமோவாவுக்கு வடக்கே அமைந்துள்ளது. இங்கு 1974-ல் முதன்முறையாக நற்செய்தி அறிவிக்கப்பட்டது. அதே வருடம் ரோபாடி ஊயிலீ என்ற மருத்துவர் பிஜியில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு டோகிலாவ்வுக்குத் f
திரும்பினார். அவருடைய மனைவி எம்மாவு ஞானஸ்நானம் பெற்ற சாட்சியாக இருந்தார்; யெகோவாவின் சாட்சிகளோடு பிஜியில் சில காலம் ரோபாடி பைபிள் படித்தார்.டோகிலாவ்வில் மற்றொரு மருத்துவரான யோனா டினியலும் அவருடைய மனைவி லூயிசா டினியலும் ஞானஸ்நானம் பெற்ற சாட்சிகளாக இருப்பதை ரோபாடி அறிந்துகொண்டார். சத்தியத்தில் ஆர்வம் காட்டிய நானூமீயா ஃபோவா என்பவரையும் இவர் சந்தித்தார்; இவருடைய உறவினர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள். இந்த மூன்று ஆண்களும் தவறாமல் கூட்டங்களை நடத்தி, பொதுப் பேச்சுகளையும் கொடுத்து வந்தார்கள்; சீக்கிரத்தில், சராசரியாக 25 பேர் கூட்டங்களுக்கு வரத் தொடங்கினார்கள். இந்த மூன்று பேரும் இவர்களுடைய குடும்பத்தாரும்கூட மற்றவர்களுக்குச் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க ஆரம்பித்தார்கள்.
ஆனால், இவர்கள் செய்துவந்த தேவராஜ்ய வேலைகள் சிலருக்குப் பிடிக்கவில்லை. லண்டன் மிஷனரி சொஸைட்டியில் பாஸ்டராக இருந்த ஒருவரின் தூண்டுதலால் அந்தத் தீவின் தலைவர்கள் குழு இந்தக் குடும்பத் தலைவர்கள் மூவரையும் விசாரணைக்கு அழைத்தது. இதைக் குறித்து ரோபாடி இவ்வாறு சொல்கிறார்: “இனிமேல் நாங்கள் கூட்டங்களை நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்கள்; மீறி நடத்தினால், வீட்டோடு சேர்த்து எங்களையும் உயிரோடு எரித்துவிடுவதாக அல்லது துடுப்பில்லாத கட்டுமரத்தில் ஏற்றி கடலில் விட்டுவிடப் போவதாக மிரட்டினார்கள். பைபிளிலிருந்து எடுத்துச் சொல்லி அவர்களுக்குப் புரியவைக்க எவ்வளவோ முயற்சி செய்தோம், ஆனால் அவர்கள் விடாப்பிடியாக இருந்தார்கள். மறுபேச்சின்றி அவர்களுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும் என எதிர்பார்த்தார்கள்.” அவர்களுடைய இறுதி எச்சரிக்கையைக் கேட்ட பிறகு, மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்காதபடி கூட்டங்களை ரகசியமாக நடத்த அந்தக் குடும்பத்தார் தீர்மானித்தார்கள்.
இந்த எதிர்ப்பு, பிரச்சினைகளின் ஆரம்பமாகத்தான் இருந்தது. பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு ரோபாடியின் சகோதரியும் அவருடைய கணவரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்; பின்பு, சர்ச்சிலிருந்து விலகிக்கொள்வதாகக் கடிதம் எழுதித் தந்தபோது, கிராமத் தலைவர்கள் அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் எல்லாரையும் கிராமத்திலிருந்து துரத்திவிட்டார்கள். ரோபாடி இவ்வாறு எழுதினார்: “அன்றிரவே அவர்கள் அனைவரும் தங்களுடைய சாமான்களையெல்லாம் ஒரு சிறிய படகில் ஏற்றிக்கொண்டு டோகிலாவ்வின் மிகப் பெரிய கிராமத்திற்குத் தப்பிச்சென்றார்கள். அவர்களுடைய வீடுவாசல்களையும் தோட்டம்துரவுகளையும் அக்கம்பக்கத்தார் சூறையாடினார்கள்.”
கடுமையான இந்தத் துன்புறுத்தலின் மத்தியிலும் வழிபாட்டிற்காகப் பிரஸ்தாபிகள் தொடர்ந்து தைரியமாகக் கூடிவந்தார்கள். “எல்லாக் குடும்பத்தாரும் வார இறுதி நாட்களில் பிக்னிக் போவதைப் போல் காட்டிக்கொண்டு புறப்பட்டுவிடுவார்கள். தொலைதூரத்திலிருந்த ஒரு குட்டித் தீவுக்குச் சிறிய படகில் சனிக்கிழமை காலை சென்றுவிட்டு கூட்டங்களை முடித்துக்கொண்டு ஞாயிறு மாலை வீடு திரும்பிவிடுவார்கள்” என்று ரோபாடி சொன்னார். அந்தச் சமயங்களில், இன்னும் அநேக குடும்பத்தார் வருடாவருடம் நடக்கும் மாவட்ட மாநாடுகளில் கலந்துகொள்ள டோகிலாவ்விலிருந்து சமோவாவுக்குப் படகில் நீண்டதூரம் கஷ்டப்பட்டுப் பயணம் செய்தார்கள்.
இப்படிச் சதா எதிர்ப்பைச் சந்தித்ததால் இந்தக் குடும்பங்கள் நியுஜிலாந்துக்குக் குடிமாறிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயின. 1990-களில், காயலைச் சூழ்ந்திருந்த இந்தப் பவழத் தீவுக்கூட்டங்களில் ஒரு யெகோவாவின் சாட்சிகூட இருக்கவில்லை. அந்தச் சூழ்நிலையிலும் அபியாவில் பயனியர் ஊழியம் செய்து வந்த ஐவன் தாம்ஸன் என்பவர் டோகிலாவ்வில் வசித்து வந்த லோனே டேமா என்ற இளைஞனுக்குக் கடிதம் மூலம் பைபிள் படிப்பு நடத்தினார். ஆன்மீக ரீதியில் லோனே நன்கு முன்னேறினார்; இப்போது அவர் ஆஸ்திரேலியாவில் மூப்பராகச் சேவை செய்கிறார்.
பிறகு, பல பிரஸ்தாபிகள் மீண்டும் டோகிலாவ்வுக்குத் திரும்பினார்கள். சமோவா கிளை அலுவலகத்தில் அப்போது சேவை செய்து வந்த ஜெஃப்ரி ஜேக்ஸன், இந்தப் பவழத் தீவுகளில் யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்பட்ட பிரச்சினைகளைக் குறித்து டோகிலாவ்வின் அரசு விவகாரங்களுக்கான நியுஜிலாந்து கமிஷனரிடம் பேச விரும்பினார், ஆனால் முடியாமல் போனது. அதைக் குறித்து ஜெஃப்ரி இவ்வாறு எழுதினார்: “பன்மொழி அறிஞராக டோகிலாவ்வுக்குச் செல்ல எனக்கு அனுமதி கிடைத்தது; அந்தக் கப்பற்பயணத்தின்போது அதிகாரிகளுக்கான ஓய்வறையில் சிற்றுண்டி சாப்பிட கப்பல் கேப்டன் என்னை அழைத்தார், அவரோடு மற்றொருவரும் இருந்தார். என்ன ஆச்சரியம், அவர் வேறு யாருமில்லை, நான் சந்திக்க முயற்சி செய்த டோகிலாவ்வின் நியுஜிலாந்து அரசு விவகாரங்களுக்கான ஆணையர்தான்! ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். கடைசியில் அவர் எனக்கு நன்றி தெரிவித்து டோகிலாவ்வில் நம் சகோதரர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.”
இன்றும் டோகிலாவ்வில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஃப்யூயிமானூ கிரீஃபி, ஹாடாசா கிரீஃபி தம்பதியரின் கடைசி மகன் 2006-ல் மரணம் அடைந்த சமயத்தில் ஃப்யூயிமானூ பைபிள் அடிப்படையிலான சவ அடக்கப் பேச்சைக் கொடுத்தார்; அப்போது தீவின் தலைவர்கள் குழு, யாக். 1:2–4) தம்முடைய உண்மை ஊழியர்களை யெகோவா ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை இவர்கள் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொண்டார்கள்.—உபா. 31:6.
ஃப்யூயிமானூவின் குடும்பத்தாரைத் தீவைவிட்டே துரத்திவிடப்போவதாக மிரட்டியது. பிறகு, சர்ச்சில் வேலை செய்ய ஃப்யூயிமானூ மறுத்தபோது அந்தக் குழு அவரைப் பயமுறுத்தியது; அதோடு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவரையும் அவருடைய மனைவியையும் வற்புறுத்தியது. எனினும், அவரும் அவருடைய குடும்பத்தாரும் விசுவாசத்தைக் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருந்தார்கள். இதனால் அவர்களுடைய விசுவாசம் பலப்பட்டது. “பிரச்சினைகளைச் சந்தித்த சமயத்தில் முழுக்க முழுக்க யெகோவாவையே நம்பியிருக்க நாங்கள் கற்றுக்கொண்டோம்” என்கிறார் ஃப்யூயிமானூ. (ஆன்மீக வளர்ச்சி—யெகோவாவின் ஆசீர்வாதம்
சமோவாவில் முதன்முதலில் நற்செய்தி பிரசங்கிக்கப்பட ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு கிளை அலுவலகங்கள் இங்கு நடைபெற்ற ராஜ்ய வேலைகளை மேற்பார்வை செய்திருக்கின்றன. தற்போது நான்கு சகோதரர்கள் அடங்கிய நாட்டு ஆலோசனைக் குழு ஆஸ்திரேலியா கிளை அலுவலகத்தின் மேற்பார்வையின்கீழ் செயல்படுகிறது. கடந்து சென்ற வருடங்களில், தொலைதூரப் பகுதிகளிலும் நற்செய்தியை அறிவிக்க சமோவாவிலுள்ள சகோதரர்கள் பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். அமெரிக்கன் சமோவாவில் தவறாமல் செய்யப்பட்டு வந்த ஊழியத்தால், டூடுயீலா தீவிலிருந்து வடக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் ஒதுக்குப்புறத்திலுள்ள ஸ்வென்ஸ் தீவிலும் கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மனுவா தீவுக்கூட்டத்திலும் நற்செய்தி பரவியிருக்கிறது. அந்தத் தீவுகளில் ஊழியம் செய்யச் சென்றபோதெல்லாம் பிரஸ்தாபிகள் நூற்றுக்கணக்கான பிரசுரங்களை அளித்தார்கள், அதோடு, அநேக பைபிள் படிப்புகளையும் ஆரம்பித்தார்கள். இன்னும் சில பிரஸ்தாபிகள் தங்கள் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் நற்செய்தியை அறிவிப்பதற்காக, பிறமொழி பேசுபவர்களிடமும் சாட்சி கொடுத்திருக்கிறார்கள்.
மொழிபெயர்க்கும் வேலை தீவிரமடைந்தது
பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சமோவா மொழியில் பிரசுரங்களுக்கான தேவையும் அதிகரித்தது. இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய, துவாலூவில் மிஷனரிகளாக இருந்த ஜெஃப்ரி ஜேக்ஸனும் அவருடைய மனைவி ஜென்னியும் 1985-ல் சமோவா கிளை அலுவலகத்தில் சேவை செய்ய நியமிக்கப்பட்டார்கள். இரண்டு பேருள்ள சமோவன் மொழிபெயர்ப்புக் குழுவை மேற்பார்வை செய்ய ஜெஃப்ரி நியமிக்கப்பட்டார். இதைப் பற்றி ஜெஃப்ரி இவ்வாறு சொல்கிறார்: “ஆரம்பத்தில்,
பெத்தேல் சாப்பாட்டு அறையிலிருந்த மேஜையையே மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் வேலைக்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் சாப்பாட்டு மேஜையைச் சுத்தம் செய்த பிறகு வேலையை ஆரம்பித்தார்கள். மதியம் சாப்பிடுவதற்கு முன் மொழிபெயர்ப்பு சம்பந்தப்பட்ட அனைத்தையும் மேஜையிலிருந்து எடுத்துவிட்டுச் சாப்பாட்டுக்குத் தயார்படுத்தினார்கள். பிறகு மீண்டும் மேஜையைச் சுத்தம் செய்து தங்கள் மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்தார்கள்.”இத்தகைய இடையூறு அவர்களுடைய வேலையைப் பெரிதும் பாதித்தது. அதோடு, மொழிபெயர்ப்பு வேலை பிழிந்தெடுப்பதாகவும் அதிக நேரத்தை உறிஞ்சுவதாகவும் இருந்தது. “பெரும்பாலும் கையால் எழுதிய பிறகு அதை டைப் செய்ய வேண்டியிருந்தது. எழுதப்பட்ட ஒவ்வொரு பக்கமும் திரும்பத்திரும்ப டைப் செய்யப்பட்டு, பிழை திருத்தப்பட்ட பின்னரே அச்சுக்கு அனுப்பப்பட்டன” என்கிறார் ஜெஃப்ரி. கிளை அலுவலகத்திற்கான முதல் கம்ப்யூட்டர் 1986-ல் வந்ததிலிருந்து திரும்பத்திரும்ப செய்கிற வேலை கணிசமாகக் குறைந்தது, அல்லது அப்படிச் செய்வதற்கான அவசியமே இல்லாமல் போனது. மொழிபெயர்ப்பு வேலையிலும் அச்சிடும் வேலையிலும் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டதால் வேலை படுவேகமாக நடந்தது.
காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை மொழிபெயர்த்துப் பிரசுரிக்கும் வேலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஜனவரி 1993-லிருந்து சமோவன் காவற்கோபுர பத்திரிகை ஆங்கிலத்தில் வெளியாகும் அதே சமயத்தில் வெளியிடப்பட்டது, அதுவும் நான்கு வண்ணங்களில்! 1996-ல் விழித்தெழு! பத்திரிகை சமோவன் மொழியில் காலாண்டு பத்திரிகையாக வெளியிடப்பட்டது. “விழித்தெழு! பத்திரிகையின் வெளியீடு பற்றிய தகவல் செய்தித்தாள்களிலும் ரேடியோவிலும் மட்டுமல்ல தேசிய டிவி செய்திகளிலும் அறிவிக்கப்பட்டது” என்கிறார் ஜெஃப்ரி.
தற்போது சமோவன் மொழியில் தேவைப்படும் பிரசுரங்களை மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்களின் தொகுதி ஒன்று இங்கு இருக்கிறது. ஆங்கிலத்தை நன்கு புரிந்துகொள்வதற்கும் இயல்பான விதத்தில் மொழிபெயர்ப்பதற்கும் உலகெங்குமுள்ள மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதைப் போலவே கடினமாக உழைக்கிற இந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இது, மிகச் சரியாகவும் திறம்படவும் மொழிபெயர்க்க அவர்களுக்குப் பேருதவியாக இருக்கிறது.
கிளை அலுவலக விரிவாக்கத்திற்கான தேவை
மில்டன் ஜி. ஹென்ஷல் 1986-ல் மண்டலக் கண்காணியாக சமோவாவுக்கு விஜயம் செய்தார்; அப்போது கிளை அலுவலகப் பிராந்தியத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பார்த்து, சினமோகா மிஷனரி இல்லம் அதற்குப் போதாது என்ற முடிவுக்கு வந்தார். இதனால், பெரிய நிலத்தை
வாங்குவது குறித்துக் கலந்துபேச, புருக்லின் வடிவமைப்பு/கட்டுமான இலாகாவிலும் ஆஸ்திரேலியாவிலுள்ள மண்டலப் பொறியியல் அலுவலகத்திலும் சேவை செய்கிற சகோதரர்களை ஆளும் குழு சமோவாவுக்கு அனுப்பியது. இவர்கள் என்ன முடிவெடுத்தார்கள்? புதிய பெத்தேல் வளாகத்தைக் கட்டுவதற்காக சினமோகாவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தீவின் உட்புறத்திலுள்ள சியூசெங்கா என்ற இடத்தில் ஏழு ஏக்கர் நிலத்தை வாங்குவதென முடிவெடுத்தார்கள். அதோடு, புதிய கிளை அலுவலகத்தைக் கட்டிய பிறகு சினமோகாவிலிருந்த பெத்தேல் இல்லத்தை மாநாட்டு மன்றமாக மாற்ற முடிவு செய்தார்கள்.1990-ல் புதிய கிளை அலுவலகத்திற்கான கட்டுமானப் பணி தொடங்கியது. இது பல நாடுகளைச் சேர்ந்த சகோதரர்கள் கைகோர்த்துச் செய்த பணியாய்த் திகழ்ந்தது. ஏனென்றால், மொத்தம் 113 சர்வதேசக் கட்டுமான வாலண்டியர்களும், உள்ளூரைச் சேர்ந்த 38 முழுநேர வாலண்டியர்களும், அநேக பகுதிநேர வாலண்டியர்களும் இந்தக் கட்டுமான பணியில் ஒற்றுமையாக உழைத்தார்கள். கட்டுமான வேலைகள் ஜோராகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் திடீரென ஒரு பேரழிவு தாக்கியது.
பேரழிவின் தாக்குதல்!
தென் பசிபிக் பகுதிகளை ஆக்ரோஷமாகத் தாக்கிய புயல்களில் ஒன்றான வேல் சூறாவளி, டிசம்பர் 6, 1991-ல் சமோவாவில் கோர முகத்தைக் காட்டியது. மணிக்கு 260 கிலோமீட்டர் வேகத்தில் ஐந்து நாட்கள் வீசிய காற்று சிறு சிறு தீவுகளைச் சின்னாபின்னமாக்கியது. 90 சதவீத பயிர்கள் நாசமாயின, 380 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருள்கள் சேதமாயின. 16 பேர் அதற்குப் பரிதாபமாகப் பலியானார்கள்.
இதைக் குறித்து ஜான் ரோட்ஸ் இவ்வாறு சொன்னார்: “கிளை அலுவலகம் உடனே நிவாரணப் பணிகளில் இறங்கியது. ஒருசில நாட்களில் ஒரு பெரிய சரக்குப் பெட்டி நிறைய நிவாரணப் பொருள்கள் பிஜி கிளை அலுவலகத்திலிருந்து வந்து இறங்கின. பசிபிக் பகுதியிலுள்ள மற்ற கிளை அலுவலகங்களிலிருந்தும் சீக்கிரத்தில் நிதி உதவி கிடைத்தது.
“அத்தியாவசியப் பொருள்கள் முதலில் வந்து இறங்கின. சுத்தமான தண்ணீர், தார்ப்பாய்கள், மண்ணெண்ணெய், மருந்து மாத்திரைகள் போன்றவை ஏழைஎளிய சகோதரர்களுக்கு வழங்கப்பட்டன. பிறகு நாங்கள் சினமோகா பெத்தேலைப் பழுதுபார்த்து, உபயோகிக்கும் நிலைக்குக் கொண்டுவந்தோம்; கிளை அலுவலகக் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த இடத்தில் சேதமடைந்த கட்டிடங்களைப் பழுதுபார்த்தோம். பிற்பாடு, சேதமடைந்த ராஜ்ய மன்றங்களையும் மிஷனரி இல்லங்களையும் நம் சகோதர சகோதரிகளுடைய வீடுகளையும் பழுதுபார்த்து, மோசமாகச் சேதமடைந்தவற்றை மீண்டும் கட்டினோம். இவற்றை எல்லாம் முடிக்க எங்களுக்குப் பல மாதங்கள் எடுத்தன” என்று
எழுதினார் டேவ் ஸ்டேபல்டன். இவர் சியூசெங்காவில் புதிய கிளை அலுவலகத்தை அமைக்கும் பணியில் சர்வதேச ஊழியராகச் சேவை செய்து வருகிறார்.பின்னர், யெகோவாவின் சாட்சிகள் உட்பட அனைத்து மதத்தினருக்கும் தங்கள் இடங்களைப் பழுதுபார்த்துக்கொள்ள அரசாங்கம் நிதி உதவி அளித்தது. ஆனால், தங்களுக்கு ஏற்பட்ட அனைத்துச் சேதங்களையும் சகோதரர்கள் பழுதுபார்த்துவிட்டதால் அந்தப் பணத்தை அரசாங்கக் கட்டிடங்களைப் பழுதுபார்ப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளும்படி கடிதம் எழுதி, அந்தப் பணத்தை அரசாங்கத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அரசாங்க அதிகாரிகள் கிளை அலுவலகக் கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் பொருள்களை இறக்குமதி செய்வதற்குரிய வரியைக் குறைத்தார்கள்; இதனால் கணிசமான தொகையைச் சகோதரர்களால் மிச்சப்படுத்த முடிந்தது.
“நினைத்துப் பார்க்காதளவுக்கு . . .”
சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களையெல்லாம் சரிசெய்த பிறகு புதிய கிளை அலுவலகக் கட்டுமான வேலைகள் மும்முரமாக முன்னேறின. ஒன்றரை வருடத்திற்குப் பிறகு மே 1993-ல் சினமோகாவிலிருந்த பெத்தேல் குடும்பத்தாரின் நீண்ட நாள் கனவு நனவானது; சியூசெங்காவிலுள்ள தங்கள் புதிய வீட்டிற்கு அவர்கள் குடிமாறினார்கள்.
செப்டம்பர் 1993-ல் சினமோகாவில் மாநாட்டு மன்றம் கட்ட ஆஸ்திரேலியா, ஹவாய், நியுஜிலாந்து, அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து கட்டுமானப் பணியில் கைதேர்ந்த 85 சாட்சிகள் சமோவாவுக்கு வந்தார்கள். அனைவரும் தங்களுடைய சொந்த செலவில் வந்தார்கள். “கட்டுமானப் பணி சம்பந்தமான வார்த்தைகளும் அளவீட்டு முறைகளும் வேறுபட்டாலும் எந்தப் பிரச்சினையையும் சந்தோஷமாய்ச் சமாளிக்க யெகோவாவின் சக்தி எங்களுக்கு உதவியது” என்று எழுதினார் கென் அப்போட்; இவர், ஆஸ்திரேலியக் கட்டுமானக் குழுவினரை முன்நின்று நடத்தியவர்.
“பன்னாட்டுச் சகோதரர்கள் ஒற்றுமையாய் வேலை செய்ததைக் கண்கூடாகப் பார்த்தது அனைவருடைய மனதையும் தொட்டது” என ஹவாய் குழுவைச் சேர்ந்த ஆபிரகாம் லிங்கன் சொன்னார்.
சர்வதேசக் கட்டுமானக் குழுவிலுள்ளவர்கள் ஒற்றுமையாக வேலை செய்ததால் பத்தே நாட்களில் மாநாட்டு மன்றம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்தச் சகோதரர்களிடமிருந்து உள்ளூர் பிரஸ்தாபிகள் கட்டுமான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்கள்; அதோடு, அவர்களுடைய தோழமையிலிருந்தும் பயன் அடைந்தார்கள். இதனால், கட்டுமானப் பணி முடிந்ததும் சில பிரஸ்தாபிகள் பயனியர்களாக அல்லது பெத்தேல் ஊழியர்களாகச் சேவை செய்ய முன்வந்தார்கள்.
கடைசியில் 1993 நவம்பர் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் கிளை அலுவலகமும் மாநாட்டு மன்றமும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டன. ஆளும் குழுவின் அங்கத்தினரான ஜான் பார் அர்ப்பணப் பேச்சுகளைக் கொடுத்தார். மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில், நீண்ட கால மிஷனரியான பால் ஈவான்ஸ் கூடிவந்திருந்தவர்களுடைய உணர்ச்சிகளை ஒரே வரியில் இவ்வாறு சொன்னார்: “நினைத்துப் பார்க்காதளவுக்கு யெகோவா நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.”
சத்தியம் வாழ்க்கையை மாற்றுகிறது
பைபிள் சத்தியம் மக்களின் மனதைத் தொடும்போது யெகோவாவின் உயர்ந்த நெறிமுறைகளுக்கு இசைய தங்கள் வாழ்க்கையை அவர்கள் மாற்றிக்கொள்கிறார்கள். கடவுளுடைய வார்த்தைக்கு இப்படி மாற்றக்கூடிய சக்தி இருப்பதை அநேக சமோவா மக்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்.—எபே. 4:22–24; எபி. 4:12.
இதற்கு, நெகோங்கோ கூபூ, மரியா கூபூ தம்பதியரின் வாழ்க்கை ஓர் அத்தாட்சி. இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமலேயே குடும்பம் நடத்தினார்கள். இப்படி வாழ்பவர்களை சமோவா மக்கள் “இருட்டு வாழ்க்கை வாழ்பவர்கள்” என்றழைப்பார்கள். ஃபிரெட் வெகனர் இவ்வாறு சொல்கிறார்: “நெகோங்கோவுக்கும் மரியாவுக்கும் சில காலம் நாங்கள் பைபிள் படிப்பு நடத்தினோம். ஒருநாள், புதிதாகப் பெற்ற தங்கள் திருமணச் சான்றிதழை அவர்கள் பெருமையாக எங்களிடம் காண்பித்தார்கள். அதுவரை அவர்கள் திருமணம் செய்யாதிருந்தது அப்போதுதான் எங்களுக்குத் தெரியவந்தது. அதன் பிறகு சீக்கிரத்தில் அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். நெகோங்கோ இறந்துவிட்டபோதிலும் மரியா அமெரிக்கன் சமோவாவில் ஒழுங்கான பயனியராக இன்னும் சேவை செய்து வருகிறார்.”
சமோவாவில் புதியவர்கள் எதிர்ப்படுகிற மற்றொரு பிரச்சினை இரத்தத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுப்பது. சமோவா மக்கள் பொதுவாகப் பன்றிகளையும் கோழிகளையும் கழுத்தை நெரித்துக் கொன்ற பின்புதான் அவற்றைச் சமைத்துச் சாப்பிடுவார்கள்; இந்தப் பழக்கத்தைக் கடவுளுடைய வார்த்தையான பைபிள் தடைசெய்கிறது. (ஆதி. 9:4; லேவி. 17:13, 14; அப். 15:28, 29) இதுகுறித்துக் கடவுள் கொடுத்திருந்த திட்டவட்டமான கட்டளைகளைத் தன்னுடைய பைபிளிலிருந்தே படித்த ஓர் இளம் பெண் ஆச்சரியம் அடைந்தாள்; அவள் அமெரிக்கன் சமோவாவைச் சேர்ந்தவள். அவளைப் பற்றி ஜூலி-ஆன் பெகெட் என்ற சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “அவளுடைய குடும்பத்தார் தவறாமல் சர்ச்சுக்குப் போனார்கள், பைபிளை வாசித்தார்கள். இருந்தாலும், சரிவர இரத்தம் நீக்கப்படாத இறைச்சியைச் சாப்பிட்டு வந்தார்கள், அதனால் அவளும் சிறுவயதுமுதல் அதைச் சாப்பிட்டு வந்திருந்தாள். ஆனால், இது சம்பந்தமான பைபிள் அறிவுரையைத் தெரிந்துகொண்டவுடன், இரத்தம் முழுமையாக நீக்கப்பட்ட இறைச்சியையே இனி சாப்பிடப்போவதாகத் தீர்மானித்தாள்.” இரத்தத்தின் பரிசுத்தத்தன்மைக்கு மதிப்புக் கொடுப்பது சம்பந்தப்பட்டதில் யெகோவாவின் சாட்சிகளுடைய நிலைநிற்கையை அறியாதவர்களே சமோவாவில் இல்லை. அதோடு, சமோவாவில் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் இரத்தம் ஏற்றிக்கொள்ளாதிருக்கும் நம் தீர்மானத்திற்குப் பொதுவாக மதிப்புக் கொடுக்கிறார்கள்.
தங்கள் படைப்பாளரைத் துதிக்கும் இளைஞர்கள்
சமைப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும், வீட்டுக் காய்கறித் தோட்டத்தைப் பராமரிப்பதற்கும், கூடப் பிறந்தவர்களைக் கவனித்துக்கொள்வதற்கும் இங்குள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறுவயதிலிருந்தே பயிற்சி அளிக்கிறார்கள். இந்தப் பிள்ளைகளில் அநேகர் கடவுளுடைய நெறிமுறைகளுக்கு இசைய வாழ்கிற பொறுப்பைச் சிறுவயதிலேயே ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். அதுவும், அவர்களில் சிலர் குடும்பத்தாரின் உதவி இல்லாமல் தாங்களாகவே யெகோவாவின் பக்கம் உறுதியாக நிலைநிற்கை எடுத்திருக்கிறார்கள்.
ஆனி ரோபாடி என்ற பெண் 13 வயதில் இருந்தபோது அவருடைய பெற்றோர் சபைக் கூட்டங்களுக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்கள். எனவே, அவர் தன்னுடைய இரண்டு சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் அழைத்துக்கொண்டு எட்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்த ராஜ்ய மன்றத்திற்கு நடந்தே சென்று கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டார். பின்னர், பயனியராகச் சேவை செய்தார்; சியூசெங்கா கிளை அலுவலகக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டார். “மிஷனரிகள் என் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டார்கள். சத்தியத்தில் முன்னேற்றம் செய்ய எனக்குப் பெரிதும் உதவினார்கள்” என்று அவர் எழுதினார். கட்டுமான இடத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து வாலண்டியர் சேவை செய்ய வந்திருந்த ஸ்டீவ் கால்ட் என்ற சகோதரரைச் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்; பின்னர், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, ரஷ்யா ஆகிய இடங்களில் கட்டுமானப் பணியில் சர்வதேச வாலண்டியர்களாகச் சேவை செய்த பிறகு சமோவா பெத்தேலில் சேவை செய்தார்கள். இப்போது இருவரும் ஆஸ்திரேலிய பெத்தேலில் சேவை செய்கிறார்கள்.
ரேடியோ மூலம் கல்வி
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அனைவருக்கும் அறிவிக்க ஆண்டாண்டு காலமாக யெகோவாவின் சாட்சிகள் பல வழிகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதில் அதிக பலன் தந்த ஒரு வழி ரேடியோ ஆகும். ஜனவரி 1996-லிருந்து, அபியாவில் தனியார் எஃப்எம் ரேடியோ நிலையம் ஒன்று, “உங்கள் பைபிள் கேள்விகளுக்குப் பதில்” என்ற தலைப்பில் வாராவாரம் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்படி யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டுக்கொண்டது.
இந்த நிகழ்ச்சியை சமோவா கிளை அலுவலகத்தில் சேவை செய்து வந்த லீவா ஃபாஐயூவும் பலோட்டா அலாங்கியும் தொகுத்து வழங்கினார்கள். இதைக் குறித்து லீவா இவ்வாறு சொல்கிறார்: “எங்களுடைய முதல் நிகழ்ச்சியில் சகோதரர் அலாங்கி பல கேள்விகளைக் கேட்டார். உதாரணத்திற்கு: நோவா காலத்தில் பெருவெள்ளம் உண்மையிலேயே வந்ததா? அவ்வளவு தண்ணீரும் எங்கிருந்து வந்தது? பிறகு அது எங்கே சென்றது? எல்லா மிருகங்களுக்கும் அந்தப் பேழை எப்படிப் போதுமானதாக இருந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நம்முடைய பிரசுரங்களிலிருந்து எடுத்துச் சொன்னேன். நிகழ்ச்சியின் முடிவில் அடுத்த வாரத்திற்கான தலைப்பைச் சொல்லிவிட்டு, இன்னும் கேள்விகள் இருந்தால் உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளை அணுகும்படி நேயர்களிடம் சொன்னோம். தொடர்ந்து வந்த வாரங்களில் பின்வரும் சில கேள்விகளுக்கும் பதில் அளித்தோம்: சாலொமோனுக்கு நிறைய மனைவிகள் இருந்தபோது கிறிஸ்தவர்கள் மட்டும் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஏன் வாழ வேண்டும்? அன்பே உருவான கடவுள் எரிநரகத்தில் என்றென்றுமாக மனிதர்களை வாட்டி வதைப்பாரா? பைபிள்—கடவுளுடைய புத்தகமா, மனிதனுடையதா?”
இந்த ரேடியோ நிகழ்ச்சி ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றது, மக்களிடையே அதிக ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. இதைக் குறித்து ஐவன் தாம்ஸன் இவ்வாறு சொல்கிறார்: “இந்த நிகழ்ச்சியை அநேகர் தவறாமல், விரும்பிக் கேட்டதாக எங்களிடம் சொன்னார்கள். இன்னும் சிலர், ஆர்வத்தைத் தூண்டும் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பைபிள் பதில் அளிக்குமெனத் தாங்கள் நினைக்கவே இல்லையென எங்களிடம் சொன்னார்கள்.”
ராஜ்ய மன்றங்கள் தேவைப்பட்டன
1990-களில் சமோவாவிலும் அமெரிக்கன் சமோவாவிலும் இருந்த பெரும்பாலான சபைகள், காட்டு மரங்களால் ஆன வீடுகளில் அல்லது கட்டிடங்களில் சபைக் கூட்டங்களை நடத்தின. “கூட்டம் நடத்தப்பட்ட இந்த இடங்களைப் பொதுவாக உள்ளூர்வாசிகள் கேவலமாகப் பார்த்தார்கள்” என்கிறார் ஸ்டூவர்ட் டூகால். இவர் 2002-லிருந்து 2007-வரை
நாட்டு ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராகச் சேவை செய்தார். அமெரிக்கன் சமோவாவைச் சேர்ந்த டாஃபூனாவில் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ராஜ்ய மன்றம்கூட பார்ப்பதற்குப் பழமையானதாகத் தெரிந்தது. இந்தப் பழைய மன்றத்திற்குப் பதிலாகப் புதிய ராஜ்ய மன்றம் கட்டப்படுவதற்கான சமயம் வந்தது.ஆனால், புதிய ராஜ்ய மன்றத்திற்குப் பெரிய இடம் தேவைப்பட்டது; குட்டித் தீவான டூடுயீலாவில் இப்படிப்பட்ட இடம் கிடைப்பது குதிரைக் கொம்புதான். அந்தப் பழைய ராஜ்ய மன்றத்திலிருந்து சற்றுத் தொலைவில் பெட்டாசா என்ற இடத்தில் ஒரு பெரிய காலி மனை இருந்தது; அது, பிரபல கத்தோலிக்கப் பெண்மணி ஒருவருக்குச் சொந்தமானதாய் இருந்தது. அந்த இடத்தைப் பெற சகோதரர்கள் அவரை அணுகினார்கள். வழிபாட்டு ஸ்தலத்தைக் கட்ட நம் சகோதரர்களுக்கு ஓர் இடம் தேவைப்பட்டதை அவர் அறிந்தபோது அதைக் குறித்துத் தன் மகளிடம் நிச்சயம் பேசுவதாகத் தெரிவித்தார்; அவருடைய மகளோ அந்த இடத்தில் வர்த்தகக் கட்டிடங்களைக் கட்டத் திட்டமிட்டிருந்தார். சகோதரர்களுடைய ஜெபங்களுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு பதில் கிடைத்தது. “கடவுளுக்கே முதலிடம்” என்று சொல்லி, அந்த நிலத்தைச் சகோதரர்களுக்கு விற்க அவர் சம்மதம் தெரிவித்தார்.
வாலஸ் பெட்ரோ இவ்வாறு எழுதினார்: “நாங்கள் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னதாகவே அவர் அந்த நிலத்திற்கான பத்திரத்தை எங்களிடம் கொடுத்துவிட்டு, ‘நீங்கள் நேர்மையானவர்கள், எல்லாப் பணத்தையும் கொடுத்துவிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்’ என்றார். நாங்களும் அப்படியே செய்தோம்.” ஏஸி வசதியுடன் 250 பேர் உட்கார முடிந்த ஓர் அழகிய ராஜ்ய மன்றம் தயார்! இது 2002-ல் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.
குறைந்த வசதி படைத்த நாடுகளில் ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு உதவி அளிக்கிற புதிய திட்டத்தை 1999-ல் யெகோவாவின் சாட்சிகள் அறிமுகப்படுத்தினார்கள். இந்தத் திட்டத்தின்படி, சமோவன் தீவுகளைச் சேர்ந்த லிஃபங்கா என்ற ஒதுக்குப்புற கிராமத்தில் முதல் ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது. இது யூப்போலூ தீவின் தெற்குக் கரையோரத்தில் உள்ளது. லிஃபங்கா சபையில் மொத்தம் பத்துப் பிரஸ்தாபிகள் இருந்தார்கள்; அவர்களில் ஒருவருடைய வீட்டின் முன்புறம், பக்கச் சுவரில்லாத ஓலைக் கூரையின் கீழ் ஆரம்பத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஜாக் ஷீடி என்ற ஆஸ்திரேலியச் சகோதரர் இந்தக் கட்டுமான வேலையை மேற்பார்வை செய்தார். இவர் தன் மனைவி காரலுடன் டோங்காவில் ஏழு வருடங்கள் சேவை செய்திருந்தார். “விவசாயிகள், மீனவர்கள், இல்லத்தரசிகள் அடங்கிய கட்டுமானப் பணியாட்கள் வேலை செய்ததைத் தூரத்திலிருந்து பார்த்தபோது, எறும்புக் கூட்டம் அந்தக் கட்டிட வளாகத்திற்குள் போவதும் வருவதுமாக இருந்ததுபோலத் தெரிந்தது” என எழுதினார் இவர்.
60 பேர் உட்காரும் வசதி கொண்ட ராஜ்ய மன்றம் 2001-ல் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கிராமவாசிகள் அந்த மன்றத்தைப் பார்த்துப் புகழ்ந்தார்கள். “உங்களுடைய வழிபாட்டு மன்றங்கள் நேர்த்தியாகவும் எளிமையாகவும் இருப்பதால்தான் அவை பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. ஆனால், எங்கள் சர்ச்சுடன் ஒப்பிட உங்கள் மன்றம் எவ்வளவு வித்தியாசமாய் இருக்கிறது! எங்கள் சர்ச்சுகளில் ஏகப்பட்ட அலங்காரப் பொருள்களும் தட்டுமுட்டுச் சாமான்களும் இருக்கின்றன; அதுவும் சுத்தமாகவோ நேர்த்தியாகவோ இருக்காது” என்று அவர்கள் சொன்னார்கள். கூட்டங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென அதிகரித்தது. 2004-ல் இந்தப் புதிய மன்றத்தில் நடைபெற்ற இயேசுவின் மரண நினைவுநாள் அனுசரிப்புக்கு 205 பேர் வந்திருந்தார்கள்.
குறைந்த வசதி படைத்த நாடுகளில் ராஜ்ய மன்றக் கட்டுமானத் திட்டத்தின்படி 2005-ன் முடிவிற்குள் சமோவன் தீவுகள் முழுவதிலும் நான்கு புதிய ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டன, மூன்று மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டன. அதோடு, சமோவாவில் அபியா என்ற இடத்திலுள்ள சினமோகா மாநாட்டு மன்றமும் புதுப்பிக்கப்பட்டது. குறைந்த வசதி படைத்த நாடுகளிலுள்ள பிரஸ்தாபிகளைப் போலவே சமோவாவிலுள்ள பிரஸ்தாபிகளும் உலகம் முழுவதிலும் உள்ள தங்கள் சகோதர சகோதரிகள் அளித்த அன்பான உதவிக்குத் தங்களுடைய இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவிக்கிறார்கள்.—1 பே. 2:17.
காலத்திற்கு ஏற்ப . . .
சமோவா மக்கள் அநேகர் வேறு நாடுகளுக்குக் குடிமாறிச் சென்றிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவுக்கும், நியுஜிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும், முக்கியமாக, ஹவாய் தீவுக்கும் இவர்கள் சென்றிருக்கிறார்கள். தற்போது ஹவாய் தீவில் சமோவா மக்கள் ஏராளமானோர் வசிக்கிறார்கள். அந்த இடங்களில், 700-க்கும் அதிகமான சாட்சிகள் சமோவன் மொழியில் கூட்டம் நடத்தப்படுகிற 11 சபைகளிலும் 2 தொகுதிகளிலும் இருக்கிறார்கள். சமோவாவைச் சேர்ந்த இன்னும் சில பிரஸ்தாபிகள், தாங்கள் குடிமாறிச் சென்ற நாடுகளிலுள்ள ஆங்கில மொழிச் சபைகளில் சேவை செய்கிறார்கள்.
சமோவாவைச் சேர்ந்த சாட்சிகள் பலர் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிற பள்ளிகளில் பயிற்சி பெற வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள்; பெற்ற பயிற்சியை நல்ல விதத்தில் பயன்படுத்துவதற்காக மீண்டும் சமோவாவுக்கு அல்லது அமெரிக்கன் சமோவாவுக்கு அவர்கள் திரும்பியிருக்கிறார்கள். உதாரணமாக, 1990-களில் டாலாலெலே லீயேயானி, ஸிடீவி பலிசாவோ, கேசி பீட்டா, ஃபியாடா சூவா, ஆன்ட்ரூ கோ, சீவோ டௌவா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொண்டு ராஜ்ய வேலைகளை முன்னேற்றுவிக்க
மறுபடியும் சமோவாவுக்குத் திரும்பினார்கள். இன்று ஆன்ட்ரூவும் அவருடைய மனைவி ஃபோடுவோசாமோவாவும் சமோவா பெத்தேலில் சேவை செய்கிறார்கள். சீவோவும் அவருடைய மனைவி எஸ்ஸியும் தங்கள் மகன் எல் நேதனுடன் பல வருடங்கள் பயண வேலையில் ஈடுபட்டார்கள். சீவோ இப்போது நாட்டு ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராகச் சேவை செய்கிறார். ஊழியப் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்ற மற்றவர்கள் மூப்பர்களாகவோ, பயனியர்களாகவோ, பிரஸ்தாபிகளாகவோ அவரவர் சபைகளில் சேவை செய்கிறார்கள்.இவர்களுடைய அருமையான சேவையின் பலன்? 2008-ல் சமோவாவிலும் அமெரிக்கன் சமோவாவிலும் உள்ள 12 சபைகளில் உச்சநிலை எண்ணிக்கையாக 620 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தார்கள். 2008-ல் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் அனுசரிப்புக்கு 2,300-க்கும் அதிகமானோர் வந்திருந்தார்கள். இதிலிருந்து சமோவன் தீவுகளில் அதிகரிப்புக்கு வாய்ப்பிருப்பது பளிச்செனத் தெரிகிறது.
யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுதல்
உருண்டோடிய இத்தனை வருடங்களில் சமோவாவில் நல்மனமுள்ள அநேகர் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்திக்குச் செவிசாய்த்திருக்கிறார்கள். (மத். 24:14) கடற்பயணப் பிரியர்களான இவர்களுடைய முன்னோர்கள் கடல் பயணத்தின்போது பல சவால்களைச் சமாளித்தார்கள்; அதைப் போலவே இவர்களும் சாத்தானின் பொல்லாத உலகத்திலிருந்து யெகோவாவின் அமைப்பிற்கு, அதாவது அவருடைய சக்தியால் வழிநடத்தப்படுகிற ஆன்மீக வீட்டிற்கு, “பயணிப்பதில்” எத்தனை எத்தனையோ சவால்களைச் சமாளித்திருக்கிறார்கள். குடும்பத்தாரிடமிருந்து எதிர்ப்பு, சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவது, குருமாரின் பொய்ப் பிரச்சாரம், அரசாங்கத் தடையுத்தரவுகள், பாவ இச்சைகள் போன்ற பல சோதனைகள் உண்மைக் கடவுளான யெகோவாவைச் சேவிப்பதிலிருந்து இவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை. (1 பே. 5:8; 1 யோ. 2:14) இதனால் கிடைத்த பலன் என்ன? இன்று இவர்கள் ஆன்மீகப் பூஞ்சோலை தரும் பாதுகாப்பை அனுபவித்து மகிழ்கிறார்கள்.—ஏசா. 35:1–10; 65:13, 14, 25.
ஆனாலும் இவர்களுடைய பயணம் இன்னும் முடியவில்லை. இவர்கள் போக வேண்டிய இடம், அதாவது கடவுளுடைய நீதியான அரசாங்கத்தின்கீழ் வரவிருக்கும் பூஞ்சோலையான பூமி, கண்ணுக்கு எட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. (எபி. 11:16) சமோவன் தீவுகளில் வாழும் யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய வார்த்தையாலும் அவருடைய வல்லமைமிக்க சக்தியாலும் வழிநடத்தப்பட்டு, உலகெங்குமுள்ள தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து பூஞ்சோலையான பூமியில் வாழும் உறுதியோடு முன்னேற்றப் பாதையில் பயணம் செய்து வருகிறார்கள்.
[அடிக்குறிப்புகள்]
a லபிட்டா என்பது நியூ கலிடோனியாவில் உள்ள ஓர் இடத்தின் பெயர். அங்குதான் இந்த மக்கள் உருவாக்கிய பிரத்தியேகமான மண்பாண்டங்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.
b மேற்கு சமோவா 1997-ல் சமோவா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனவே, இந்தப் பதிவு முழுவதிலும் இந்தப் பெயரே பயன்படுத்தப்படும்.
c ஹெரல்டை உபசரித்த திரு. டலியுடாஃபா யங் என்பவரின் சந்ததியில் வந்த பலர் பிற்பாடு யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். அவருடைய பேரன் ஆர்தர் யங் தற்போது அமெரிக்கன் சமோவாவில் உள்ள டாஃபூனா சபையில் மூப்பராகவும் பயனியராகவும் சேவை செய்கிறார். ஆர்தர் ஆசை ஆசையாக வைத்திருக்கும் பொருள்களில் ஒன்று, அவருடைய குடும்பத்திற்கு ஹெரல்ட் கில் தந்த ஒரு பைபிள் ஆகும்.
d சமோவா மக்களுக்குப் பொதுவாக ஒரு முதல் பெயர் இருக்கும், அதோடு, ஒரு குடும்பப் பெயரும் இருக்கும். உதாரணமாக பெலே என்பது முதல் பெயர், ஃபியுயாயூபோலு என்பது குடும்பப் பெயர். அதோடு, சமோவா மக்களில் சிலருக்கு விசேஷப் பட்டப்பெயரும் தரப்படுகிறது. ஆனால், யெகோவாவின் சாட்சிகள் சிலர் அப்படிப்பட்ட விசேஷப் பெயரைத் துறந்துவிடுகிறார்கள் அல்லது அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார்கள். ஏனென்றால், அப்படிப்பட்ட பெயர்கள் அரசியலோடு அல்லது உலகத்தோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கிறதென்று நினைக்கிறார்கள். இந்தப் பதிவில் நன்கு அறியப்பட்டிருக்கிற குடும்பப் பெயருக்கு முன் வருகிற பெயரே பொதுவாகப் பயன்படுத்தப்படும். உதாரணமாக, பெலே ஃபியுயாயூபோலு என்ற பெயர், பெலே என்றே பொதுவாகப் பயன்படுத்தப்படும்.
e இந்தப் படக்காட்சி 1995-ல் வீடியோ படமாக மீண்டும் வெளியிடப்பட்டது. அரபிக், சைனீஸ் (கன்டோனீஸ், மான்டரின்), செக், டேனிஷ், டச், ஆங்கிலம், ஃபின்னிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கு, இத்தாலியன், ஜாப்பனீஸ், கொரியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ் (பிரேஸிலியன், யூரோப்பியன்), ஸ்பானிஷ், ஸ்வீடிஷ் ஆகிய மொழிகளில் இப்போது கிடைக்கிறது.
f அவர் ஒரு முறை நியுஜிலாந்துக்குச் சென்றபோது அங்கு ஞானஸ்நானம் பெற்றார்.
[பக்கம் 77-ன் சிறுகுறிப்பு]
“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைத்தான் நீங்கள் இன்று கேட்டீர்கள். அதற்கு இசைய நீங்கள் நடக்க வேண்டுமென நான் மனமார ஆசைப்படுகிறேன்.”
[பக்கம் 98-ன் சிறுகுறிப்பு]
“கிராமத்துப் பிள்ளைகள் நாங்கள் அங்கு போகும்போதெல்லாம் ‘அர்மகெதோன் வர்றாங்க!’ என்று கத்துவார்கள்”
[பக்கம் 108-ன் சிறுகுறிப்பு]
“வவாயூக்குப் போகும் பஸ்கள் நிச்சயம் வரும், ஆனால் அது எப்போது வரும் என்றுதான் சொல்ல முடியாது”
[பக்கம் 69, 70-ன் பெட்டி/ படம்]
சமோவாவின் மதங்கள் —அன்றும் இன்றும்
பண்டைய சமோவா நாட்டிலிருந்த மதங்களில் கலப்பு வணக்கமுறை நிலவியது. பல-தெய்வ வழிபாடு, ஆன்மவாதம், ஆவியுலகத் தொடர்பு, முன்னோர் வழிபாடு ஆகியவை கலந்த கதம்ப வணக்கமுறையாக அவை இருந்தன. ஆனால், கோவில்களோ, சிலைகளோ, குருத்துவ ஏற்பாடோ இருக்கவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மதம் பின்னிப் பிணைந்திருந்தது. என்றாலும், 1830-ஆம் வருடம் லண்டன் மிஷனரி சொஸைட்டியைச் (LMS) சேர்ந்த மிஷனரிகள் அங்கு கால்பதித்தபோது, மதம் சம்பந்தமான மாற்றங்களை வரவேற்கிற நல்ல மனநிலை அந்த மக்களுக்கு இருந்தது. அதற்குக் காரணம் என்ன?
பண்டைய சமோவாவின் புராணக் கதை ஒன்று, பெரும் செல்வாக்கு செலுத்துகிற புதிய மதம் தோன்றுமெனவும், பழைய தெய்வங்களின் ஆட்சியை அது முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் முன்னறிவித்தது. இப்புதிய மதத்தின் பிரதிநிதிகளாக வந்தவர்களே இந்த மிஷனரிகள் என சமோவாவின் ஊர்ப்பெரியவர்கள் (மட்டாய்கள்) சொன்னார்கள். கிறிஸ்தவர்களின் கடவுளாகிய யெகோவாவையே வணங்கப் போவதாக அரசனாகிய மலீடோவா தீர்மானித்தார், தன் குடிமக்களும் அப்படியே செய்ய வேண்டுமெனக் கட்டளையிட்டார்.
கேத்தலிக், மெத்தடிஸ்ட், மார்மன் மற்றும் லண்டன் மிஷனரி சொஸைட்டி ஆகியவற்றைச் சேர்ந்த மிஷனரிகளுடன் ஏராளமான ஆட்கள் சேர்ந்துகொண்டார்கள். சமோவன் தீவுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட எல்லாருமே இன்று ஏதோவொரு சர்ச்சின் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். “சமோவாவுக்குத் தெய்வமே துணை” என்பது சமோவா அரசாங்கத்தின் தாரகமந்திரம். “சமோவாவே, முதலில் தெய்வத்தை நினை” என்பது அமெரிக்கன் சமோவா அரசாங்கத்தின் தாரகமந்திரம். சமோவா நாட்டு டிவி சேனல்களில் மத சம்பந்தமான நிகழ்ச்சிகளே அதிகமாக வலம்வருகின்றன.
கிராமத்தில் மதங்களின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது. கிராம மக்கள் எந்த மதத்தில் இருக்க வேண்டும் என்பதைப் பொதுவாக ஊர்ப் பெரியவர்களே தீர்மானிக்கிறார்கள். அந்த மக்கள் தங்களுடைய வருமானத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை நன்கொடையாகக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். இந்தத் தொகை சர்ச் பாதிரிகளின் செலவுக்கும் சர்ச் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நிறையப் பேருக்கு இது பெரும் சுமையாக இருக்கிறது. அதிகமான தொகையைக் கொடுப்பது யார் என்பதில் போட்டா போட்டியும்கூட நடக்கிறது. மிக அதிகமான தொகையைக் கொடுத்து முதலிடத்தைப் பெறும் நபரின் பெயரைச் சில சர்ச்சுகள் பகிரங்கமாக அறிவிக்கின்றன.
நிறையக் கிராமங்களில் மக்கள் தினந்தோறும் 10-15 நிமிடங்களுக்கு ஒன்றுசேர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இது சா என்றழைக்கப்படுகிறது. மக்கள் தங்களுடைய வேலைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு இந்தப்
பிரார்த்தனையில் கலந்துகொள்கிறார்கள். இந்த வழக்கத்தைச் சரிவரக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காக இளைஞர்கள் பெரிய தடிகளைப் பிடித்துக்கொண்டு சாலைகளில் வரிசையாக நிற்கிறார்கள். பிரார்த்தனையில் கலந்துகொள்ளாதவர்கள் தண்டிக்கப்படலாம், அதாவது, 100 டாலர்வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கலாம் அல்லது தலைவர்களுக்கோ கிராமம் முழுவதற்குமோ உணவளிக்க வேண்டியிருக்கலாம். ஏன், சில சமயங்களில் அவர்கள் அடிக்கவும் படலாம் அல்லது கிராமத்தைவிட்டே துரத்தவும் படலாம்.ஒரு சமயம் ஜான் ரோட்ஸ் என்ற வட்டாரக் கண்காணியும் அவரது மனைவி ஹெலனும் களைப்புமிக்க ஒரு பயணத்திற்குப் பிறகு, சவாயி தீவைச் சேர்ந்த சலிமு கிராமத்திற்குச் சென்றார்கள். அந்த நேரத்தில் சா பிரார்த்தனை ஆரம்பித்துவிட்டதால், கிராமத்தின் எல்லையில் நிற்கும்படி அவர்களைக் காவலர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்படியே, ரோட்ஸ் தம்பதியினர் அங்கே காத்திருந்து சா பிரார்த்தனை முடிந்தவுடன் தங்கள் இருப்பிடத்திற்குச் சென்றார்கள்.
ஜானும் ஹெலனும் காத்திருந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட கிராமத்தலைவர் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார். யெகோவாவின் சாட்சிகளான அவர்கள் கௌரவ விருந்தாளிகள் என்று அந்தக் கிராமத்தலைவர் சொன்னார். எனவே, எந்த நேரமானாலும் சரி, சா பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தாலும் சரி, கிராமத்திற்குள் வருவதற்கு அவர்களை அனுமதிக்கும்படி காவலர்களுக்கு அவர் கட்டளையிட்டார். இவர்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சிறப்புச் சலுகை? அந்தத் தலைவரின் மகன் சீயோ யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிளைப் படித்துக்கொண்டிருந்தார்; அதோடு, ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றம் செய்திருந்தார். இப்போது, சமோவா நாட்டு ஆலோசனைக் குழுவில் அங்கத்தினராக சீவோ டௌவா சேவை செய்கிறார்.
[படம்]
ஜான் ரோட்ஸ், ஹெலன் ரோட்ஸ்
[பக்கம் 72-ன் பெட்டி]
சமோவா, அமெரிக்கன் சமோவா, டோகிலாவ்—ஒரு கண்ணோட்டம்
நிலம்
யூப்போலூ, சவாயி ஆகிய இரண்டு முக்கியத் தீவுகளையும் ஏராளமான சிறுசிறு தீவுகளையும் கொண்டதே சமோவா. யூப்போலூ மற்றும் சவாயி தீவுகளுக்கு இடையே 18 கிலோமீட்டர் அகலமான ஜலசந்தி உள்ளது. சமோவாவிலிருந்து தென் கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அமெரிக்கன் சமோவாவில் டூடுயீலா என்ற முக்கியத் தீவும், மனுவா தீவுகள், ஸ்வென்ஸ் தீவு, அவ்னுவு, மனித சஞ்சாரமற்ற ரோஸ் பவழத் தீவு ஆகியவை உள்ளன. டோகிலாவ், மூன்று தாழ்வான பவழத் தீவுகளை உள்ளடக்கியது. இவை சமோவாவுக்கு வடக்கே 480 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன.
மக்கள்
சமோவாவில் 2,14,000-க்கும் அதிகமானோர் குடியிருக்கிறார்கள், அமெரிக்கன் சமோவாவில் சுமார் 57,000 பேர் குடியிருக்கிறார்கள். டோகிலாவ்வில் கிட்டத்தட்ட 1,400 பேர் குடியிருக்கிறார்கள். 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாலினேசியர்கள். மற்றவர்கள் ஆசியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் கலப்பின பாலினேசியர்கள்.
மொழி
முக்கிய மொழி சமோவன், என்றாலும் பெரும்பாலோர் ஆங்கில மொழியிலும் பேசுகிறார்கள். சமோவன் மொழிக்கு ஒத்திருக்கும் டோகிலாவன் மொழி டோகிலாவ்வில் பேசப்படுகிறது.
பிழைப்பு
விவசாயம், சுற்றுலாத்துறை, சூரைமீன் (tuna) பிடித்தல், மீன் பதப்படுத்துதல் ஆகியவை முக்கியத் தொழில்களாக இருக்கின்றன.
உணவு
மாச்சத்து மிகுந்த சேம்பினக் கிழங்கு, வாழைக்காய், தேங்காய்ப் பாலில் சேர்க்கப்படுகிற ஒருவகை பலா ஆகியவை அன்றாட உணவாக இருக்கின்றன. பன்றி, கோழி, மீன் ஆகியவையும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. பப்பாளி, அன்னாசி, மாம்பழம் ஆகிய வெப்பமண்டலப் பழங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.
சீதோஷ்ணம்
இத்தீவுகள் பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்துள்ளன. எனவே, வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் உஷ்ணமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். அமெரிக்கன் சமோவாவைச் சேர்ந்த டூடுயீலா தீவிலுள்ள பாகோ பாகோவில் ஒவ்வொரு வருடமும் 15 கன அடிக்கும் அதிகமாக மழை பெய்கிறது.
[பக்கம் 75-ன் பெட்டி]
“ரொம்ப நல்ல புத்தகம்”
சமோவன் மொழியில் பிரசுரிக்கப்பட்ட மரித்தோர் எங்கே இருக்கின்றனர்? என்ற சிறுபுத்தகத்தை அமெரிக்கன் சமோவாவில் விநியோகிப்பதற்காக சகோதரர் ஹெரல்ட் கில் அதன் 3,500 பிரதிகளைக் கொண்டுவந்தார். அந்தச் சிறுபுத்தகத்தின் ஒரு பிரதியை அந்நாட்டு ஆளுநரிடம் கில் கொடுத்தபோது, அங்கிருந்த எல்லா மதத் தலைவர்களிடமும் அதைக் காட்டும்படி அவர் ஹெரல்டிடம் சொன்னார். மதத் தலைவர்களின் கருத்தைக் கேட்ட பிறகுதான் அது பொதுமக்களிடம் விநியோகிப்பதற்கு ஏற்ற புத்தகமா இல்லையா என்பதை அரசு தலைமை வழக்கறிஞர் தீர்மானிப்பார் என்றும் சொன்னார். அங்கிருந்த மதத் தலைவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி என்ன சொன்னார்கள்?
லண்டன் மிஷனரி சொஸைட்டியின் பாதிரியார் சிநேகப்பான்மையானவராக இருந்தார், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. செவன்த் டே அட்வன்டிஸ்டைச் சேர்ந்தவர்கள், தங்கள் சர்ச்சிலுள்ள ஆட்களை ஹெரல்ட் தன் பக்கம் இழுத்துக்கொள்ளாத வரையில் அவர் என்ன செய்தாலும் தங்களுக்குக் கவலை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கப்பற்படையின் பாதிரி சற்றுக் குத்தலாகப் பேசினாலும், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், ஒரு வினோதமான சம்பவத்தின் காரணமாக, கத்தோலிக்க பாதிரியைப் பார்க்க வேண்டிய அவசியம் ஹெரல்டுக்கு ஏற்படவில்லை. ஆளுநரிடம் தன்னை அழைத்துச் சென்றிருந்த சமோவன் போலீஸ்காரருக்கு இந்தச் சிறுபுத்தகத்தின் ஒரு பிரதியை ஹெரல்ட் கொடுத்திருந்தார். சில நாட்களுக்குப் பின்பு, அதை அவர் வாசித்தாரா என ஹெரல்ட் கேட்டார்.
அந்த போலீஸ்காரர் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் இவ்வாறு சொன்னார்: “‘இந்தப் புத்தகம் நல்ல புத்தகமா, இல்லையா என்று உன்னுடைய [கத்தோலிக்க] பாதிரியாரிடம் கேட்டுவந்து சொல்’ என்று என்னுடைய மேலதிகாரி [அரசு தலைமை வழக்கறிஞர்], என்னிடம் சொன்னார். நானோ மரத்தடியில் உட்கார்ந்து இதைப் படித்தேன். ‘இது ரொம்ப நல்ல புத்தகம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால், பாதிரியாரிடம் கொண்டு போய்க் காட்டினால், இது நல்ல புத்தகம் இல்லையென்றுதான் சொல்வார்’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். அதனால் நானாகவே என் மேலதிகாரியிடம், ‘இது “ரொம்ப நல்ல புத்தகம்” என்று பாதிரியார் சொன்னார்’ எனச் சொல்லிவிட்டேன்.”
பின்னர், அரசு தலைமை வழக்கறிஞர் தன் அலுவலகத்திற்கு வரும்படி ஹெரல்டை அழைத்தார். அவர் அந்தச் சிறுபுத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதிலுள்ள விஷயங்களை ஹெரல்ட் விளக்கினார். உடனே அரசு தலைமை வழக்கறிஞர் போன் செய்து, அந்தச் சிறுபுத்தகத்தை விநியோகிக்க அனுமதிக்கும்படி சொன்னார். அதன் விளைவாக, ஹெரல்ட் தான் கொண்டு வந்திருந்த கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களையும் அந்தத் தீவு முழுவதிலும் விநியோகித்தார்.
[பக்கம் 76-ன் பெட்டி]
சமோவாவின் பாரம்பரியக் கலாச்சாரம்
“நாகரிகமாக நடந்துகொள்வதில், பாலினேசியாவில் மட்டுமின்றி உலகிலேயே தலைசிறந்து விளங்குகிறவர்கள்” சமோவா நாட்டு மக்கள்தான் என்று 1847-ஆம் வருடத்தில் ஜார்ஜ் பிரேட் என்ற மிஷனரி சொன்னார்; இவர் லண்டன் மிஷனரி சொஸைட்டியைச் சேர்ந்தவர். ஃபா சமோவா (சமோவன் மார்க்கம்) என்றழைக்கப்படுகிற சமோவாவின் பாரம்பரியக் கலாச்சாரம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நன்னெறிகள் நிறைந்தது. இது சமோவா மக்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது.
இந்த நன்னெறிகளில் மிக முக்கியமானது “மரியாதை, அதுவும் தன்னைவிடப் பெரியவர் ஒருவரிடம் காட்டுகிற பக்திகலந்த மரியாதை” என்று சமோவன் ஐலண்ட்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது. இப்படிப்பட்ட மரியாதை கண்ணியமான நடத்தையிலும், நல்ல பேச்சிலும், குடும்பம் மற்றும் கிராமத்தின்மீது பற்றுடன் இருப்பதிலும் காட்டப்படுகிறது. அங்குள்ள பெரும்பாலான மக்களுக்குத் தங்களுடைய முன்னோர்கள் ஏற்படுத்திய கலாச்சாரங்களையும் மதங்களையும் ஒதுக்கித் தள்ளுவது என்பது கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.
இந்தப் பாரம்பரியத்தின் காவலர்களாக இருக்கும் ஊர்ப் பெரியவர்கள் (மட்டாய்கள்) தங்கள் குடும்பத்தினருடைய அல்லது சொந்தபந்தங்களுடைய தினசரி வேலைகளைத் தீர்மானிக்கிறார்கள். தங்கள் குடும்பங்களின் சார்பாகக் கிராமப் பஞ்சாயத்தில் கலந்துகொள்கிறார்கள். எல்லாரும் கீழ்ப்படிதலைக் காட்ட வேண்டும் என்பதில் மிகவும் கறாராக இருக்கிறார்கள். அப்படிக் காட்டாதவர்களுக்கு அபராதம் விதிப்பது, அடிகள் கொடுப்பது, அல்லது ஊரைவிட்டே ஒதுக்கி வைப்பது என்று தீர்ப்பளித்து தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். உதாரணத்திற்கு, யெகோவாவின் சாட்சிகள்மீது சிறு பையன்களை விட்டுக் கல்லெறியச் சொன்னதற்காக ஒரு கிராமத்தைச் சேர்ந்த மட்டாய் ஒரு மத குருவுக்கு அபராதம் விதித்தார்.
ஒவ்வொரு கிராமத்திலும் 10-லிருந்து 50 வரையான ஊர்ப் பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்ப அங்கத்தினர்களால் (ஐங்கா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், சிலருக்கு ஊர்ப் பெரியவர் என்ற அந்தஸ்து பரம்பரை பரம்பரையாகக் கிடைத்துவிடுகிறது. அவரவர் வகிக்கும் ஸ்தானத்திற்கு ஏற்றபடிதான் பட்டப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராமத் தலைவர் (ஆலியோயி) இருக்கிறார். அவரே கிராமப் பஞ்சாயத்தைத் தலைமைதாங்கி நடத்துகிறார். பேச்சாளராக இருக்கும் தலைவர் (டுலாப்ஃபலி) சடங்காச்சாரம் சம்பந்தப்பட்ட காரியங்களைக் கவனித்துக்கொள்கிறார். என்றாலும், ஊர்ப் பெரியவர்கள் எல்லாருமே அரசியலிலோ மதத்திலோ பொறுப்பு வகிப்பதில்லை. சிலர் தங்களுடைய குடும்ப விஷயங்களை மட்டுமே கவனித்துக்கொள்கிறார்கள். அதாவது, குடும்பச் சொத்துகளின் பொறுப்பாளர்களாகச் செயல்படுகிறார்கள். அதோடு, அந்தச் சொத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
[பக்கம் 79-ன் பெட்டி/ படம்]
“யெகோவாவின் ஆள்”
சாவோ டோட்டு
பிறப்பு 1902
ஞானஸ்நானம் 1954
பின்னணிக் குறிப்பு பெலேசியுவில் முதன்முதலாகச் சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர். இவருக்குச் சொந்தமான இடத்தில் பிற்பாடு ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது. இவரது மகன் டாஃபிகா சாவோ சொன்னபடி
அது 1952-ஆம் வருடம். அபியா என்ற இடத்திலிருந்து என்னுடைய அப்பாவின் உறவினர் ஒருவர் எங்களைப் பார்க்க ஃபலேசியுவுக்கு வந்தார். யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்பு வைத்திருந்த அவர், என் அப்பாவுடன் பைபிளைக் கலந்து பேச விரும்பினார். எங்களுடைய சொந்தபந்தங்கள் பலர் அவர் சொல்வதைக் கேட்கத் தீர்மானித்தார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து, சனிக்கிழமை காலையிலிருந்து திங்கட்கிழமை மதியம்வரை தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். தூங்குவதற்காக ஒருமணி நேரம் மட்டுமே இடையில் நிறுத்தியிருந்தார்கள். இப்படி நான்கு சனி ஞாயிறுகளில் தொடர்ந்து பேசிய பின், கடைசியாக என் அப்பா, “என் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் கிடைத்துவிட்டது, நான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்று சொன்னார். என் அப்பாவின் மைத்துனர், ஃபினா ஃபியோமையாவும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். அவருடைய குடும்பத்தாரும் எங்களுடைய குடும்பத்தாரும் அவ்வாறே சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
என் அப்பா உடனடியாகப் பிரசங்கிக்கத் தொடங்கினார். இதைப் பார்த்து எங்களுடைய உறவினர்களுக்கு ஒரே அதிர்ச்சி. ஏனென்றால், செவன்த் டே அட்வன்டிஸ்ட் சர்ச்சில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்திருந்ததை அவர்கள் பார்த்திருந்தார்கள். யெகோவாவின் ஆள் என அவரைக் கேலியாக அழைத்தார்கள். ஆனால், அதை உண்மையில் பாராட்டு என்றுதான் சொல்ல வேண்டும். என் அப்பா உருவத்தில் குள்ளமாக இருந்தாலும் உள்ளத்தில் திடகாத்திரமாக இருந்தார். அதோடு, அவரால் தெளிவாக யோசிக்கவும் பக்குவமாகப் பேசவும் முடிந்தது. புதிதாகக் கற்றுக்கொண்ட சத்தியத்தை ஆதரித்துப் பேச இவை அவருக்கு உதவின. காலப்போக்கில், எங்கள் சிறிய தொகுதி ஒரு சபையானது. இது சமோவாவில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது சபையாக இருந்தது.
[பக்கம் 83-ன் பெட்டி/ படம்]
ஊனத்தின் மத்தியிலும் உண்மைத்தன்மை
ஃபகலிமா டௌடகாலோவா
பிறப்பு 1903
ஞானஸ்நானம் 1953
பின்னணிக் குறிப்பு பிரபல மட்டாயாக, அதாவது ஊர்ப் பெரியவராக, ஆகும் வாய்ப்பை உதறித் தள்ளிவிட்டு ஒழுங்கான பயனியரானார்.
பார்வைக் கோளாறாலும், கால் ஊனத்தாலும் அவதிப்பட்டுவந்த அவர் பிற்பாடு, பல வருடங்களுக்கு சமோவா எங்கும் விசேஷ பயனியராகச் சேவை செய்தார். ஒரு சமயம், கண்ணாடி இல்லாமலேயே அவர் வசனங்களைத் திருத்தமாக வாசிப்பதை அவருடன் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்த ஒரு வட்டாரக் கண்காணி கவனித்தார். ‘இப்போது உங்கள் பார்வைக் கோளாறு குணமாகி வருகிறதா?’ என அவரிடம் கேட்டார். அதற்கு ஃபகலிமா, தன் கண்ணாடி தொலைந்து விட்டதாகவும், ஞாபகத்திலிருந்த வசனங்களையே வாசித்துக் காட்டியதாகவும் சொன்னார்.
பிஜியில் நடைபெறவிருந்த ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள ஃபகலிமா மிகவும் ஆசைப்பட்டார். அதனால், யூப்போலூவின் கடைக்கோடியில் இருந்த ஓரிடத்திற்குச் சென்று தேங்காய்களைச் சேகரிக்கும் வேலையில் நான்கு வாரங்கள் தனியாக ஈடுபட்டார். அவருடைய கால் ஊனமாக இருந்தபோதிலும் ஒரே நேரத்தில் 15 தேங்காய்களைச் சுமந்துகொண்டு இரண்டு மைல் தூரத்திற்குச் சென்றார். அங்கே தேங்காய் மட்டைகளை உரித்து, தேங்காயை எடுத்துக் காய வைத்தார். பிறகு அந்தக் கொப்பரைகளை விற்றார். பிஜி செல்வதற்கான பயணச் சீட்டை வாங்குவதற்காக அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு அபியாவுக்கு வந்தார். ஆனால், பயணச் சீட்டின் விலை அதிகரித்திருந்த விஷயம் அங்கு வந்த பிறகுதான் அவருக்குத் தெரிந்தது. அவரோ அதைக் குறித்து யாரிடமும் புலம்பவில்லை, மாநாட்டிற்குப் போக வேண்டாமென்றும் நினைக்கவில்லை. அதோடு, எவரிடமும் உதவி கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, திரும்பி வந்து இன்னும் அதிக தேங்காய்களை எடுத்து கொப்பரைகளை விற்று, போதுமான பணத்தைச் சம்பாதித்தார். மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்ற துடிப்பில்தான் இதையெல்லாம் அவர் செய்தார். அந்த மாநாடு தனக்குத் தெரியாத இரண்டு மொழிகளில் நடக்கப்போகிறது என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால், அவர் பிஜிக்கு வந்தபோது, மாநாட்டு நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தன் தாய்மொழியிலேயே நடந்ததைக் கண்டார். பட்ட பாடுகளுக்கு எப்பேர்ப்பட்ட பலன்!
[பக்கம் 87-ன் பெட்டி/ படம்]
“ஒவ்வொரு நாளையும் ரசித்தேன், ருசித்தேன்”
ரோனல்ட் செல்லர்ஸ்
பிறப்பு 1922
ஞானஸ்நானம் 1940
பின்னணிக் குறிப்பு இவரும் இவருடைய மனைவி ஆலிவ்வும் (டாலி) 1953-ஆம் வருடம் விசேஷ பயனியர்களாக சமோவாவுக்கு வந்தார்கள். இவர் 1961-ஆம் வருடம் கிலியட் மிஷனரிப் பள்ளியிலிருந்து பட்டம் பெற்றார். அமெரிக்கன் சமோவாவில் இன்றும் விசேஷ பயனியராகச் சேவை செய்து வருகிறார்.
சமோவா அரசாங்கம் எங்களுடைய விசாவை நீட்டிக்க மறுத்தபோது, நானும் டாலியும் அமெரிக்கன் சமோவாவுக்கு மாறிச்சென்றோம். இத்தீவுகளுக்கு இடையே விடப்பட்டிருந்த போக்குவரத்துக் கப்பலில் நாங்கள் சென்றோம். பொட்டல் காடாக இருந்த பாகோ பாகோவின் கப்பல் துறையில் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் இறங்கினோம். அங்கே எங்களைத் தவிர வேறு பிரஸ்தாபிகளே இருக்கவில்லை. அந்நாட்டில் நாங்கள் இறங்கியபோது எங்கள் கையில் 12 டாலர் மட்டுமே இருந்தது. யெகோவாவின் சாட்சிகளோடு முன்பு பைபிளைப் படித்துவந்த ஒருவருடைய தந்தை எங்களுக்குத் தங்க இடமளித்தார். ஒரேவொரு அறை மட்டுமே இருந்த அவருடைய வீட்டில் ஒரு ஓரமாகத் திரைச்சீலை மறைவில் நாங்கள் தூங்கினோம். எங்களுக்கென ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்பினோம். ஆனாலும், பிரசங்க வேலையை ஆரம்பித்தோம்; அதுவும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமிருந்தே ஆரம்பித்தோம்.
பல வாரங்கள் கழித்து, பகடோகோ கிராமத்தில் ஒரு மளிகைக் கடைக்கு மேலே இருந்த பெரிய அப்பார்ட்மென்ட்டை வாடகைக்கு எடுத்தோம். அங்கிருந்து பார்க்கும்போது, இயற்கை வனப்புமிக்க பாகோ பாகோவின் துறைமுகம் எழில் கொஞ்சும் அழகுடன் காட்சியளித்தது. ஆனால், அந்த அப்பார்ட்மென்ட் காலியாக இருந்தது. சகோதரர் நார் எங்களிடம் ஒருமுறை இப்படிச் சொல்லியிருந்தார்: “பசிபிக் தீவுகளுக்குச் சென்றால், எல்லாச் சௌகரியங்களும் இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஒருவேளை, அட்டைப் பெட்டிகளைத் தரையில் விரித்து நீங்கள் படுக்க வேண்டியிருக்கலாம்.” அதைத்தான் நாங்கள் செய்தோம். கட்டில், மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றைச் செய்வதற்குத் தேவையான பணம் சில மாதங்கள் கழித்துத்தான் எங்களுக்குக் கிடைத்தது. என்றாலும், வீடு என்று சொல்லிக்கொள்வதற்கு ஒரு இடம் இருக்கிறதே எனச் சந்தோஷப்பட்டோம்.
என் அருமை மனைவி 1985-ல் இறந்துவிட்டாள். ஆனால், இன்றும்கூட கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே நான் ஊழியத்திற்குப் போகிறேன். 50-க்கும் அதிகமான வருடங்கள் பயனியராகவும் மிஷனரியாகவும் சேவை செய்து வருவதை நினைத்துப் பார்க்கும்போது, ஒவ்வொரு நாளையும் ரசித்தேன், ருசித்தேன் என்றே நான் சொல்வேன்!
[பக்கம் 88-ன் பெட்டி/ படம்]
“யெகோவாமீது அன்பை என் மனதில் விதைத்தார்கள்”
வாலஸ் பெட்ரோ
பிறப்பு 1935
ஞானஸ்நானம் 1955
பின்னணிக் குறிப்பு அமெரிக்கன் சமோவாவில் ஞானஸ்நானம் பெற்ற முதல் நபர். இவரும் இவருடைய மனைவி கரோலினும் பயனியர்களாகச் சேவை செய்தார்கள். பின்பு குடும்பஸ்தரானார்கள். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனைச் சேர்ந்த சீயட்டிலில் தற்போது சேவை செய்கிறார்கள்.
பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, பைபிளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்; பின்பு, ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது, என் குடும்பத்தார் என்னை வீட்டைவிட்டே துரத்திவிட்டார்கள், அதுவும், போட்டிருந்த உடையுடன்! அன்றிரவு நான் கடற்கரையில் படுத்துத் தூங்கினேன். ‘யெகோவாவே, என்ன நடந்தாலும்சரி, உங்களுக்குச் சேவை செய்ய எனக்குத் தைரியம் கொடுங்கள்’ என்று ஜெபித்தேன்.
அடுத்த நாள், நான் பள்ளி நூலகத்தில் இருந்தபோது சகோதரர் பால் ஈவான்ஸ் எதிர்பாராவிதமாக அங்கு வந்தார். நான் ஏதோவொரு பிரச்சினையில் இருப்பதை உணர்ந்து, “மிஷனரி இல்லத்திற்குப் போய்ப் பேசலாம், வா” என்று அழைத்தார். மிஷனரிகள் அன்போடு என்னைத் தங்க வைத்துக்கொண்டார்கள். அந்த வருடத்தின் பிற்பகுதியில் நான் ஞானஸ்நானம் பெற்றேன்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மிஷனரிகளுடன் சேர்ந்து பயனியர் சேவை செய்தேன். பின்னர், கனடாவைச் சேர்ந்த கரோலின் ஹின்ஷ் என்ற ஆர்வத்துடிப்புமிக்க பயனியரைத் திருமணம் செய்தேன். அவர் பிஜியில் சேவை செய்திருந்தார். நாங்கள் இருவரும் அமெரிக்கன் சமோவாவில் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்யத் தொடங்கினேன்.
என் அப்பா அம்மாவின் மனம் மெல்லமெல்ல இளகியது. அப்பா இறப்பதற்கு முன்பு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார். அம்மா, 72-ஆம் வயதில் ஞானஸ்நானம் பெற்றார். அந்த மிஷனரிகள் வைத்த நல்ல முன்மாதிரிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் யெகோவாமீது அன்பை என் மனதில் விதைத்தார்கள். அதனால்தான் இன்றுவரை நான் சத்தியத்தில் உறுதியாக இருந்து வருகிறேன்.
[பக்கம் 91-ன் பெட்டி/ படம்]
முயற்சி திருவினையானது
பால் ஈவான்ஸ்
பிறப்பு 1917
ஞானஸ்நானம் 1948
பின்னணிக் குறிப்பு இவரும் இவருடைய மனைவி ஃபிரான்சஸும் சமோவா மற்றும் அமெரிக்கன் சமோவாவில் 40-க்கும் அதிகமான வருடங்கள் மிஷனரிகளாகச் சேவை செய்தார்கள்.
நானும் என் மனைவியும் 1957-ஆம் வருடம் வட்டாரச் சேவையைத் தொடங்கிய சமயத்தில், சமோவாவுக்குள் நுழைவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஏனென்றால், அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு வெளிநாட்டுச் சகோதரர்களின் உதவி கிடைக்காதபடி செய்ய அரசாங்கம் முயன்றுகொண்டிருந்தது. அங்கு விஜயம் செய்கிறவர்களும் சுற்றுலாப் பயணிகளும் தாங்கள் தங்கியிருக்கும் காலப்பகுதியில் யாரையும் மதமாற்றம் செய்வதில்லை என எழுதிக் கையெழுத்திட வேண்டியிருந்தது. எனவே, நான் ஒரு வட்டாரக் கண்காணியாக சமோவாவுக்கு முதன்முதலில் சென்றபோது, குடியேற்ற அதிகாரியிடம், ‘மதமாற்றம் செய்யக்கூடாதென்று எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்’ என்று கேட்டேன். அவர் சற்றுக் குழப்பமாக என்னைப் பார்த்தபோது,
“நீங்கள் ஒரு கத்தோலிக்கர் என வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் வேறொரு நாட்டிற்குப் போகும்போது அங்குள்ள சர்ச்சில் பேசும்படி அவர்கள் கேட்டால் பேசுவீர்களா, மாட்டீர்களா?” என்று கேட்டேன்.
“தாராளமாகப் பேசலாமே” என்றார்.
“சரி, யெகோவாவின் சாட்சிகள் பைபிளிலிருந்து தாங்கள் கற்றுக்கொண்ட செய்தியைச் சொல்வதற்காக வீடுவீடாகப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒருவேளை, என்னுடைய நண்பர்கள் அப்படிப் போகும்போது என்னையும் அழைத்தால் நான் போகலாமா, கூடாதா?”
“போகலாம் என நினைக்கிறேன்.”
“ஒருவேளை, வீட்டுக்காரர்கள் என்னிடம் ஏதாவது கேள்வி கேட்டால், நான் பதில் சொல்லலாமா, கூடாதா?”
“அதிலொன்றும் பிரச்சினை இல்லை.”
“உங்களிடம் பேசியது ரொம்ப நல்லதாகப் போயிற்று, என்ன செய்ய வேண்டுமென இப்போது நான் தெரிந்துகொண்டேன்” என்றேன்.
வட்டாரச் சந்திப்பை நல்லபடியாக முடித்துக்கொண்டு அந்த நாட்டைவிட்டுக் கிளம்பியபோது, அதே அதிகாரியிடம், ‘எங்களுடைய சந்திப்பைப் பற்றி ஏதாவது தவறாகக் கேள்விப்பட்டீர்களா?’ எனக் கேட்டேன்
“அப்படி எதுவும் இல்லை” என்றார்.
“அப்படியானால், அடுத்தமுறை இங்கே வருவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”
“குடியேற்றத் துறைக்கு விண்ணப்பம் அனுப்பாதீர்கள், எனக்கு ஒரு கடிதம் எழுதுங்கள், போதும். ஆக வேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னார்.
அடுத்தடுத்த பல சந்திப்புகளுக்கு நாங்கள் அப்படியே செய்தோம்.
வருத்தகரமாக, இந்த நியாயமான மனிதருக்குப் பின்வந்த மற்ற அதிகாரிகள் இவரைப் போல் ஒத்துழைப்புத் தரவில்லை. அதனால் எங்களுக்குப் பின்வந்த வட்டாரக் கண்காணிகளுக்கு சமோவாவுக்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. 1974 வரை இந்நிலை தொடர்ந்தது. அந்த வருடத்தில் அங்கிருந்த அரசாங்கம் என்னையும் என் மனைவி ஃபிரான்சஸையும் மிஷனரிகளாக ஏற்றுக்கொண்டது. எங்களுடைய பொறுமைக்கும் விடாமுயற்சிக்கும் கடைசியில் நல்ல பலன் கிடைத்தது.
[படம்]
ஃபிரான்சஸ் ஈவான்ஸ், பால் ஈவான்ஸ் தம்பதியர்
[பக்கம் 97-ன் பெட்டி]
சொற்பொழிவாளர்களின் மொழி
சமோவன் மொழி காதுக்கு இனிமையாகவும் மென்மையாகவும் சந்தங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. என்றாலும், “அநேக வார்த்தைகளில் உயிரெழுத்துக்கள் தாறுமாறாகக் கலந்து கிடப்பதால் இந்த மொழியில் தேர்ச்சிபெற மிஷனரிகளுக்கு அதிக பயிற்சியும் (ஃபாடாயிடாய்ங்கா) ஊக்குவிப்பும் (ஃபாலால்வோவினா) தேவைப்படுகிறது” என்கிறார் ஃபிரெட் வெகனர்.
சொல்நயத்தோடும், பழமொழிகளோடும் பேசுவது சமோவாவின் கலாச்சாரத்தில் ஊறியிருக்கும் ஒன்று. ஊர்ப் பெரியவர்கள் (மட்டாய்கள்) சொற்பொழிவாளர்கள், (டுலாப்ஃபலி) பேச்சாளர்களாக இருக்கும் தலைவர்கள் ஆகியோர் பைபிளிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசவே விரும்புவார்கள். மேலும், விசேஷத் தருணங்களில் இலக்கிய நடையில் பேசுவார்கள். தேவைப்படும்போது சம்பிரதாய மொழியைப் பயன்படுத்துவதில் சமோவா மக்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். இதில் அவர்களுடைய பாரம்பரியத்திற்கே உரிய மரியாதை தெரிகிறது. கடவுள், ஊர்ப் பெரியவர்கள், அதிகாரிகள், வெளிநாட்டு விருந்தாளிகள் ஆகியோரிடம் பேசும்போது அல்லது அவர்களைப் பற்றிப் பேசும்போது தரமிக்க பவ்வியமான “விசேஷ” மொழியை (டௌடாலா லெலா) பயன்படுத்துவார்கள். மறுபட்சத்தில், தினசரி உரையாடலில், அல்லது தன்னையே குறிப்பிட்டுப் பேசும்போது, பேச்சுவழக்கில் (டௌடாலா லெங்கா), அதிக சம்பிரதாயமான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் சகஜமாகப் பேசுவார்கள்.
அதிகாரிகளிடம் பேசும்போதும் சம்பிரதாயமான விஷயங்களைப் பேசும்போதும் பைபிளைப் பற்றிப் பேசும்போதும், மற்றவர்களைப் புண்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு மரியாதைமிக்க “விசேஷ” மொழியைப் பயன்படுத்துவார்கள். இதற்கென்றே கண்ணியமான பதங்கள் அதில் இருக்கின்றன. “பவ்வியமும் மரியாதையும்தான் இந்த மொழியில் மேலோங்கி இருக்கின்றன. அதனால், சாட்சி கொடுக்கும்போது, அரச குடும்பத்தாரிடம் எப்படிப் பவ்வியமாகப் பேசுவோமோ அப்படித்தான் சமோவா மக்களிடம் பேச வேண்டும். ஆனால், ஒருவர் தன்னைப் பற்றிப் பேசும்போது தினசரி வழக்கத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்” என்று சமோவாவில் மிஷனரியாக இருந்த ஆளும் குழுவின் உறுப்பினர் ஜெஃப்ரி ஜேக்ஸன் சொல்கிறார்.
[பக்கம் 99-ன் பெட்டி/ படம்]
‘கண்கள் குளமாக “குட்-பை” சொன்னோம்’
ராபர்ட் பாயிஸ்
பிறப்பு 1942
ஞானஸ்நானம் 1969
பின்னணிக் குறிப்பு இவரும் இவருடைய மனைவி எலிசபெத்தும் (பெட்டி) 1978-லிருந்து 1986 வரை சமோவா தீவுகளில் மிஷனரிகளாகச் சேவை செய்தார்கள்.
நாங்கள் அமெரிக்கன் சமோவாவுக்கு வந்துசேர்ந்த சமயத்தில் சமோவன் மொழியைக் கற்றுக்கொள்வதற்கு எடுத்த முயற்சிகளை அந்த மக்கள் பாராட்டினார்கள். இதனால் நாங்கள் தப்புத்தப்பாகப் பேசியபோதிலும் அதை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை. ஒரு சமயம், இந்த உலகம் சாத்தானுடைய கைக்குள் இருக்கிறது என்பதை விளக்குவதற்கு வெளிப்படுத்துதல் 12:9-ஐப் பயன்படுத்தினேன். ஆனால், பிசாசு (டியாபோலோ) என்பதற்கான சமோவன் வார்த்தையின் உச்சரிப்பும் எலுமிச்சை (டிபோலோ) என்பதற்கான வார்த்தையின் உச்சரிப்பும் ஒரே மாதிரி இருக்கும். எந்த வார்த்தையைச் சொல்வது என்ற குழப்பத்தில், “எலுமிச்சை” பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டு, இந்த உலகம் முழுவதையும் மோசம்போக்கிக் கொண்டிருக்கிறது என்றும் சீக்கிரத்தில் யெகோவா இந்த “எலுமிச்சை”யை ஒழித்துவிடுவார் என்றும் சொன்னேன். அந்த வீட்டுக்காரரும் என்னோடிருந்த மிஷனரியும் வயிறு குலுங்க சிரித்ததைச் சொல்லவும் வேண்டுமா!
மற்றொரு சமயம், வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது, நான் மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளை ஒரு சமோவன் பெண்மணியிடம் கிளிப்பிள்ளை போல அப்படியே ஒப்பித்தேன். அந்தப் பெண்மணிக்கு நான் சொன்னதில் பாதி மட்டுமே புரிந்தது. அதுவும் வெளிப்படுத்துதல் 21:4-ன் ஒரு சிறிய பகுதி மட்டுமே புரிந்தது, பிற்பாடுதான் இது எனக்குத் தெரிய வந்தது. நான் சொன்ன செய்தி மிகவும் முக்கியமானது என்பதை அவள் புரிந்துகொண்டதால், உடனடியாக உள்ளே போய் தன் பைபிளை எடுத்து அந்த வசனத்தை வாசித்தாள். அந்த வசனம் அவளுடைய மனதை அந்தளவுக்குத் தொட்டதால், பைபிள் படிப்புக்குப் பின்னர் ஒப்புக்கொண்டாள். அதுமட்டுமல்ல, அவளும் அவளுடைய பிள்ளைகளும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
காலப்போக்கில், நாங்கள் சமோவன் மொழியைக் கரைத்துக் குடித்தோம், இதுகுறித்து எங்களுக்கு அதிக சந்தோஷம். எங்களுக்கு அருமையான அனுபவங்களும் கிடைத்தன. உடல்நலக் கோளாறுகளின் காரணமாக அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது, கண்கள் குளமாக சமோவாவுக்கு “குட்-பை” சொன்னோம்.
[பக்கம் 101, 102-ன் பெட்டி/ படம்]
“ஊரே திரண்டு வந்தது”
ஃபிரெட் வில்லியம்ஸ் என்பவருடைய சவ அடக்கம் அபியாவில் நடைபெற்ற மிகப் பெரிய சவ அடக்கங்களில் ஒன்று. இது 1950-ல் நடைபெற்றது. இவர் கேப்டன் என்றே அறியப்பட்டார். வயதான, ஓய்வுபெற்ற மாலுமியாக இருந்த இவர் முரட்டுச் சுபாவமுள்ளவராக இருந்தார். யெகோவாவின் சாட்சி ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். உலகிலுள்ள பெருங்கடல்கள் எல்லாவற்றிலும் கப்பல் பயணம் செய்திருந்தார். தென் பசிபிக் பகுதி முழுவதிலும் பிரபலமானவராக இருந்தார். கடலில் அவர் புரிந்த வீரதீரச் செயல்கள் பல. ஒரு சமயம், இவர் செலுத்திய கப்பல் தொலைதூரத்திலிருந்த நீரடிப்பாறையில் மோதி நீருக்குள் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த உயிர்காப்புப் படகிலோ உணவுப்பொருள்கள்கூட இருக்கவில்லை. என்றாலும் இவர், தன் கப்பல் குழுவினரை அதில் ஏற்றி ஆயிரக்கணக்கான மைல் தூரம் பயணித்து அவர்களைப் பத்திரமாகக் கரைசேர்த்தார்.
மக்கள் பெயரளவில்தான் மதத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது இந்த கேப்டனின் கருத்தாக இருந்தது. என்றாலும், ஒருகாலத்தில் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாக இருந்த இவர், பில் மாஸ்ஸுடன் பைபிளைப் படித்து ஆர்வத்துடிப்புமிக்க சாட்சியாக ஆனார். ஞானஸ்நானம் பெறவிருந்த சமயத்தில் கண்பார்வையைக் கிட்டத்தட்ட இழந்தேவிட்டார், படுத்த படுக்கையாகவும் ஆகிவிட்டார். இருந்தாலும், தன்னைச் சந்திக்க வந்த நிறைய மதத் தலைவர்கள் உட்பட ஏராளமானவர்களிடம் தான் புதிதாகக் கற்றுக்கொண்ட சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து வந்தார்.
தன் சவ அடக்க நிகழ்ச்சியை யெகோவாவின் சாட்சிகளே நடத்த வேண்டுமென்றும், தன் உடலைக் கடலில் அடக்கம் செய்ய வேண்டுமென்றும் இந்த கேப்டன் தன் உயிலில் எழுதி வைத்திருந்தார். கேர்லி மாஸ் இவ்வாறு எழுதுகிறார்: “சவ அடக்கத்திற்கு ஊரே திரண்டு வந்ததுபோல் தோன்றியது. வானொலி நிலையம் அவருடைய இறப்பைப் பற்றி அறிவிப்புச் செய்தது. அவருக்கு மதிப்புக் காட்டும் விதமாக அபியாவிலிருந்த வியாபார நிறுவனங்கள் தங்கள் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட்டன.” யெகோவாவின் சாட்சிகள் மட்டுமல்ல, வழக்கறிஞர்கள், பள்ளி ஆசிரியர்கள், பிரபல மதத் தலைவர்கள், வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.
சவ அடக்கப் பேச்சில், இந்த கேப்டனுக்கு இருந்த உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி, அதாவது பூஞ்சோலையான பூமியில் நடைபெறும் எபி. 11:4) இந்த கேப்டன் இறந்த பிறகும், தன் சவ அடக்க நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய சாட்சியைக் கொடுத்தார்.”
உயிர்த்தெழுதலைப் பற்றி நிறைய வசனங்களுடன் பில் மாஸ் விளக்கிக் காட்டினார். அதை அங்கிருந்த எல்லாரும் உன்னிப்பாய்க் கவனித்தார்கள். கேர்லி சொல்கிறார்: “வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்திக்கவே முடியாத ஆட்கள் பலருக்கு இந்தச் சவ அடக்க நிகழ்ச்சி நல்லதொரு சாட்சியாக அமைந்தது. இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அந்த கேப்டன்மீது என் உள்ளத்தில் பாசம் பொங்கியது. ‘மரித்தும் இன்னும் பேசிக்கொண்டிருக்கிற’ ஆபேலின் உதாரணம் என் நினைவுக்கு வந்தது. (கேப்டன் வீட்டில் நடைபெற்ற சவ அடக்க நிகழ்ச்சிக்குப் பின்பு, 50-க்கும் அதிகமான கார்கள் துறைமுகத்தை நோக்கிச் சென்றன. “கப்பல் துறையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதனால், நாங்கள் படகிற்குச் செல்ல போலீஸார் கூட்டத்தாரை ஒதுக்கி வழிவிட வேண்டியிருந்தது. பின்பு, கேப்டனுடைய குடும்பத்தார், உயர் ஆணையர், பிரபலமான ஆட்கள் ஆகியோருடன் ஆவோலெலே (பறக்கும் மேகம்) என்ற படகில் கிளம்பினோம். படகுக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் மிகவும் பொருத்தமாக இருந்தது. ஏனென்றால், அலைகளால் இங்குமங்கும் அடித்துச் செல்லப்படுகிற தக்கையைப் போல், படகு கடலில் அல்லாடியதாலும், பலத்த காற்று சகோதரர் பில்லைப் பிடித்துத் தள்ளியதாலும், அவருடைய கையிலிருந்த பைபிள் பறந்துவிடுவதுபோல் இருந்ததாலும் படகின் பாய்மரத்தோடு அவர் அப்படியே ஒட்டிக்கொண்டு நிற்க வேண்டியிருந்தது. கடைசியாக, ‘சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கும்’ என்ற வசனத்தை பில் பைபிளிலிருந்து வாசித்துவிட்டு ஜெபம் செய்தார். (வெளி. 20:13) பின்பு, துணிகளால் சுற்றப்பட்டிருந்த கேப்டனின் பருமனான உடல் அவருக்குப் பிரியமான பசிபிக் கடலின் கொந்தளிக்கும் தண்ணீருக்குள் போடப்பட்டது. இவருடைய சவ அடக்க நிகழ்ச்சி நடந்து பல வருடங்களான பின்பும் மக்கள் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இதனால், சாட்சி கொடுப்பதற்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைத்தன.
[படம்]
“கேப்டன்” ஃபிரெட் வில்லியம்ஸ், ஞானஸ்நானம் பெறுவதற்குமுன்
[பக்கம் 109, 110-ன் பெட்டி/ படம்]
‘மீண்டும் திரும்பி வந்தோம்’
ஃபிரெட் வெகனர்
பிறப்பு 1933
ஞானஸ்நானம் 1952
பின்னணிக் குறிப்பு இவரும் இவருடைய மனைவி ஹெர்லியும் சமோவா பெத்தேலில் சேவை செய்கிறார்கள். தற்போது நாட்டு ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராக இருக்கிறார்.
புதுமணத் தம்பதிகளான நாங்கள் 1956-ல் விசேஷ பயனியர் ஊழியம் செய்ய ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கன் சமோவாவுக்குக் குடிமாறினோம். முதன்முதலாக லௌலீலி என்ற குக்கிராமத்தில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டோம். இது பாகோ பாகோ துறைமுகத்தின் கிழக்கு வாயிலில் அமைந்துள்ளது. படுமோசமான நிலையிலிருந்த சிறிய வீட்டில் நாங்கள் குடியேறினோம்; அங்கே கதவுகளோ, ஜன்னல்களோ, கூரையோ, குழாய்த் தண்ணீர் வசதியோ இருக்கவில்லை. இந்த வீட்டைப் பழுதுபார்த்து, குடியிருப்பதற்கு ஏற்ப மாற்றிய உடனேயே எங்களுடன் தங்குவதற்குப் புதிதாக ஒருவர் வந்தார். இவர்தான் வாலஸ் பெட்ரோ; சத்தியத்தை எதிர்த்த இவருடைய பெற்றோர் இவரை வீட்டிலிருந்து துரத்தி விட்டதால் இவர் எங்களுடனேயே தங்கிக்கொண்டு, பயனியர் ஊழியம் செய்தார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு நாங்கள் கிலியட் பள்ளியில் கலந்துகொண்டோம்; பின்னர் டஹிடியில் மிஷனரிகளாக நியமிப்பைப் பெற்றோம். ஆனால், அங்கே கொஞ்சக் காலமே ஊழியம் செய்தோம். மிஷனரிகளாகத் தொடர்ந்து சேவை செய்வதற்குரிய விண்ணப்பங்களை அரசாங்கம் நிராகரித்ததால் அடுத்த விமானத்திலேயே டஹிடியைவிட்டு வெளியேறும்படி அது ‘பணிவுடன்’ உத்தரவிட்டது. அமெரிக்கன் சமோவா திரும்பியதும் நாங்கள் பால் ஈவான்ஸ், ஃபிரான்சஸ் ஈவான்ஸ் தம்பதியருடனும் ரோனல்ட் செல்லர்ஸ் டாலி செல்லர்ஸ் தம்பதியருடனும் பாகோ பாகோவிலுள்ள, பகடோகோ மிஷனரி இல்லத்தில் தங்கி ஊழியம் செய்தோம். சாப்பாட்டு அறை மேசையில் வைக்கப்பட்டிருந்த பழைய மிமியோகிராஃப் மெஷினில் காவற்கோபுரம், நம் ராஜ்ய ஊழியம் ஆகியவற்றை சமோவன் மொழியில் நான் அச்சிட்டேன். 1962-ல்
வட்டார ஊழியம் செய்ய நானும் ஹெர்லியும் அழைப்பைப் பெற்றோம். எங்களுடைய முதல் நியமிப்பில் தென் பசிபிக் தீவுப் பகுதியிலுள்ள அமெரிக்கன் சமோவா, குக் தீவுகள், பிஜி, கிரிபடி, நியூ, சமோவா, டோங்கா, துவாலூ, வனுவாட்டு ஆகிய இடங்களிலுள்ள சபைகளைப் போய்ச் சந்தித்தோம்.எட்டு வருடங்களுக்குப் பிறகு, எங்கள் மகன் டாரல் பிறந்தான். எனவே, நாங்கள் அமெரிக்கன் சமோவாவில் குடியேறினோம். நான் விசேஷ பயனியராக ஊழியம் செய்தேன், ஹெர்லியோ சமோவன் மொழியில் பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்க்கும் வேலையில் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டாள்.
இந்தச் சமயத்தில், அபலோனி என்ற சிப்பி வகையைப் பிடிப்பதற்காக முக்குளிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு சகோதரருடன் வேலை செய்து வந்தேன்; என் குடும்பத்தைப் பராமரிக்க இது பெரிதும் உதவியது. இப்படி ஒரு முறை மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது, அவருடைய சிறிய படகில் வெளிப்புறம் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதடைந்துவிட்டது; அதனால் நாங்கள் நடுக்கடலில் நான்கு நாட்கள் மாட்டிக்கொண்டோம். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு அலைகளின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டோம். மூர்க்கத்தனமான புயலின் பிடியிலிருந்து தப்பினோம். 32 கப்பல்கள் எங்களைக் கடந்து சென்றதைப் பார்த்தோம். ஒரு பெரிய சரக்குக் கப்பலின் அடியில் சிக்கி எங்கள் படகு நொறுங்கிப் போகவிருந்த சமயத்தில் காப்பாற்றப்பட்டோம். சீக்கிரத்திலேயே, ஹெர்லி மீண்டும் தாயாகவிருப்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். எனவே, 1974-ல் மனதே இல்லாமல் ஆஸ்திரேலியா திரும்பினோம். அங்கு எங்கள் மகள் டாமாரி பிறந்தாள்.
ஆசை ஆசையாகச் செய்து வந்த மிஷனரி ஊழியத்தை மீண்டும் செய்ய மாட்டோமாவென அதற்குப்பின் வந்த வருடங்களில் நாங்கள் அடிக்கடி யோசித்தோம். டாமாரியுடன் சேர்ந்து மீண்டும் சமோவாவுக்குப் போய் பெத்தேலில் சேவை செய்ய அழைப்பைப் பெற்றபோது நானும் ஹெர்லியும் அளவுகடந்த ஆனந்தம் அடைந்தோம். ஒரு வருடத்திற்குப் பிறகு, மீண்டும் வட்டார ஊழியத்தில் ஈடுபடும்படி எங்களுக்கு அழைப்பு வந்தது, அதுவும் 26 வருட இடைவெளிக்குப் பிறகு! சமோவா, அமெரிக்கன் சமோவா, டோங்கா ஆகிய இடங்களில் முன்பு நாங்கள் சந்தித்த பலர் இன்னமும் உண்மையாய்ச் சேவை செய்து வருவதைப் பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.—3 யோ. 4.
இன்று, நானும் ஹெர்லியும் டாமாரியுடனும் அவளது கணவர் ஹிடாயூகி மொடோயியுடனும் சமோவா பெத்தேலில் சேவை செய்கிறோம். மீண்டும் திரும்பி வந்ததை நினைத்து எங்களுக்குச் சந்தோஷமோ சந்தோஷம்!
[பக்கம் 113, 114-ன் பெட்டி/ படம்]
‘யெகோவா என் ஜெபங்களுக்குப் பதில் அளித்தார்’
ஃபைங்காயி டூ
பிறப்பு 1932
ஞானஸ்நானம் 1964
பின்னணிக் குறிப்பு 1965 முதல் 1980 வரை யூப்போலூ, சவாயி ஆகிய தீவுகளில் இவர் பயனியராக ஊழியம் செய்தார். இப்போது சவாயி தீவில் வசிக்கிறார்.
படுமோசமாக வளைந்திருந்த கால்களுடன் நான் பிறந்தேன். என்னுடைய பாதங்கள் குதிங்காலைத் தொடுமளவுக்கு மடங்கி இருந்தன; இதனால் நடப்பதற்கு ரொம்பச் சிரமமாக இருந்தது.
முதன்முதலாகச் சத்தியத்தைக் கேட்டபோது அது என் நெஞ்சைத் தொட்டது. சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆசைப்பட்டேன்; ஆனால், அங்கே போவதற்குப் பாறைகள் நிறைந்த, கரடுமுரடான பாதையில் நடந்து செல்ல வேண்டியிருந்ததால், என்னால் முடியாதென்று நினைத்தேன். காலப்போக்கில், ரப்பர் செருப்புகளிலிருந்து என் காலுக்கேற்ற ஷூக்களைத் தயாரிப்பதில் கெட்டிக்காரி ஆனேன். சிரமமில்லாமல் நடக்க அவை எனக்கு ஓரளவு உதவின.
ஞானஸ்நானம் பெற்ற உடனேயே பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். யூப்போலூ தீவில் ஒன்பது வருடங்கள் பயனியர் ஊழியம் செய்தேன்; சவாயி தீவில் ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கான தேவை அதிகமிருந்ததால், என் அக்காவோடும் அவரது கணவரோடும் சேர்ந்து அங்கே குடிமாறிச் சென்றேன். என் அக்கா மகள் கூமி ஃபளிமாயாவோடு சேர்ந்து சவாயி தீவில் விசேஷ பயனியராக ஊழியம் செய்தேன்.
நானும் கூமியும் ஃபாங்கா கிராமத்திலிருந்து சவாயி தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள லாடா என்ற குக்கிராமத்திற்கு ஒவ்வொரு வாரமும் பஸ்ஸில் சென்றோம். அங்கு ஒரு பெண்ணிற்கு பைபிள் படிப்பை நடத்தினோம். பிறகு அங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலுள்ள டங்கா என்ற கிராமத்திற்கு நடந்தே சென்று மற்றொரு பெண்ணிற்கு பைபிள்
படிப்பு நடத்தினோம். இவருடைய குடும்பத்தாருடன் அன்று இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை பஸ்ஸைப் பிடித்து ஃபாங்காவுக்குத் திரும்பி வந்தோம். இப்படிக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பயணித்தோம். பிற்பாடு, இந்த இரு பெண்களுமே தங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து யெகோவாவை ஊக்கமாய்ச் சேவிக்க ஆரம்பித்தார்கள். இது அதிக சந்தோஷத்தைத் தந்தது.என் அக்கா குடும்பத்தார் சவாயி தீவைவிட்டு மாறிச் சென்றபோது நான் செல்லவில்லை; ஃபாங்கா கிராமத்தில் சகோதரிகள் மட்டுமே இருந்த சிறிய தொகுதிக்கும் சத்தியத்தில் ஆர்வம் காட்டிய பெண்களுக்கும் ஆன்மீக உதவி அளிக்க அங்கேயே தங்கிவிட்டேன். வாராவாரம் காவற்கோபுர படிப்பையும் சபை புத்தகப் படிப்பையும் நடத்தினேன்; வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சகோதரிகளை முன்நின்று நடத்தினேன். மாதத்திற்கு ஒருமுறை அபியாவிலிருந்து ஒரு மூப்பர் வந்து ஞாயிற்றுக்கிழமைக் கூட்டங்களை நடத்தினார். கூட்டங்களில் ராஜ்யப் பாடல்களைப் பாடக்கூடாதென கிராமத் தலைவர் உத்தரவிட்டிருந்ததால் நாங்கள் பாடல் வரிகளைச் சத்தமாக வாசித்தோம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு, எங்கள் சிறிய தொகுதிக்கு உதவ மிஷனரிகளான லீவா ஃபாஐயூ, டீனைசியா ஃபாஐயூ தம்பதியர் நியுஜிலாந்திலிருந்து வந்தார்கள். பிற்பாடு இன்னும் அநேகர் வந்தார்கள். இன்று சவாயி தீவில் நன்கு வளர்ந்துவருகிற இரண்டு சபைகள், ஒன்று ஃபாங்காவிலும் மற்றொன்று டங்காவிலும் உள்ளன.
நான் திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும் எனக்குக் குழந்தைகள்மீது கொள்ளைப் பிரியம், எப்போதும் அவர்களிடம் பாசமாகப் பழகுவேன். கொஞ்சக் காலத்திற்குக் குழந்தைகளில் சிலர் என்னுடனேயே தங்கியிருந்தார்கள். என் ஆன்மீகப் பிள்ளைகள் யெகோவாவுடன் உள்ள பந்தத்தில் பலப்பட்டு அவர் பக்கம் உறுதியாக நிற்பதைப் பார்ப்பதற்குப் பெருமையாய் இருக்கிறது.
இப்போது எனக்கு வயதாகிவிட்டது, முன்புபோல் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொள்ள முடிவதில்லை. வீட்டிலேயே பைபிள் படிப்புகளை நடத்துகிறேன், ஆஸ்பத்திரியில் சந்திக்கும் ஆட்களிடம் சாட்சி கொடுக்கிறேன். என்றாலும், என்னால் அதிகம் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கமாக இருக்கிறது. எனவே, இன்னும் அதிகமாக ஊழியம் செய்ய உதவும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொண்டேன். அதன்பின், என் சபையிலுள்ள மிஷனரிகள் தொலைபேசி மூலம் சாட்சிகொடுக்க எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். நான் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது யெகோவா உண்மையிலேயே என் ஜெபங்களுக்குப் பதில் அளித்திருக்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
[பக்கம் 118-ன் பெட்டி/ படம்]
நேற்று, இன்று, நாளை
சமோவாவிலும் டோங்காவிலும் வசிப்பவர்களின் கடிகாரங்கள் ஒரே நேரத்தைத்தான் காட்டுகின்றன, ஆனால், டோங்கா காலண்டர் ஒரு நாளை முன்னதாகக் காட்டுகிறது! அது ஏன்? சர்வதேசத் தேதிக் கோட்டின் இந்தப் பக்கத்தில் சமோவாவும் அந்தப் பக்கத்தில் டோங்காவும் அமைந்துள்ளன; இந்தக் கோட்டிற்கு மேற்கில் டோங்காவும் கிழக்கில் சமோவாவும் அமைந்துள்ளன. இதனால், இந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள தூரம் மிகக் குறைவாக இருந்தாலும் கிறிஸ்துவின் மரண நினைவுநாளை உலகில் முதன்முதலாக அனுசரிக்கிற நாடுகளின் வரிசையில் டோங்காவும் அதைக் கடைசியாக அனுசரிக்கிற நாடுகளின் வரிசையில் சமோவாவும் இருக்கின்றன.
[படம்]
(For fully formatted text, see publication)
\
\
\
\
\ சமோவா
| மாலை 7:00 மணி
| புதன்
|
|
|
|
|
டோங்கா |
மாலை 7:00 மணி. | தென் பசிபிக் பெருங்கடல்
வியாழன் |
|
|
சர்வதேசத் | தேதிக் கோடு
|
| நியூ
|
|
|
|
|
|
|
|
[பக்கம் 123, 124-ன் பெட்டி/ படங்கள்]
கடவுளின் பெயருக்குப் புகழ் சேர்க்கும் பைபிள் மொழிபெயர்ப்பு
1884-ஆம் வருடத்தில் கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் சமோவா மொழியில் பைபிளை மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். அதில், எபிரெய வேதாகமம் முழுவதிலும் யெகோவாவின் பெயர் காணப்பட்டது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அல்லேலூயா, அதாவது “யா என்பவரைப் புகழுங்கள்,” என்ற சொற்றொடரும் நான்கு தடவை காணப்பட்டன; இதில் “யா” என்பது கடவுளுடைய பெயரின் சுருக்கமாகும். (வெளி. 19:1–6) ஆனால், 1969-ல் வெளியான அதன் திருத்திய பதிப்பில் ஒரு வசனத்தைத் தவிர மற்ற எல்லா வசனங்களிலிருந்தும் யெகோவாவின் பெயர் நீக்கப்பட்டிருந்தது; மொழிபெயர்ப்பாளர்களின் கண்ணிலிருந்து அந்த ஒரு வசனம் தப்பித்துவிட்டது! (யாத். 33:14) சர்ச் தலைவர்கள் தங்களுடைய பாட்டுப் புத்தகத்திலிருந்தும் கடவுளுடைய பெயரை நீக்கினார்கள்; அதோடு, யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாதென்று சர்ச் அங்கத்தினர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
என்றாலும், சமோவாவைச் சேர்ந்த பைபிள் பிரியர்கள் நவம்பர் 2007-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை சமோவன் மொழியில் பெற்றபோது சந்தோஷத்தில் திளைத்தார்கள். திருத்தமான, எளிதில் புரிந்துகொள்ளத்தக்க இந்த மொழிபெயர்ப்பில் கடவுளுடைய பெயர் மறுபடியும் அதற்குரிய இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தீவுகளுக்கு இடையிலான விசேஷ மாநாடு சமோவா தீவிலுள்ள அபியாவில் நடைபெற்றது; அந்த மாநாட்டில் இப்புதிய பைபிளைத் தற்போது ஆளும் குழுவின் அங்கத்தினராக இருக்கும் ஜெஃப்ரி ஜேக்ஸன் வெளியிட்டார்; இவர் முன்பு சமோவாவில் மிஷனரி ஊழியம் செய்தவர்.
இந்தப் புதிய பைபிள் வெளியிடப்பட்டதைப் பற்றி டிவி-யில் செய்திகள் வெளிவந்தன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைக் கிளறியது. சிலர் சமோவா கிளை அலுவலகத்திற்கு போன் செய்து இந்த பைபிளைத் தங்களுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டார்கள். மூத்த அரசு அதிகாரி ஒருவர் தன்னுடைய ஆபீஸ் பணியாளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பத்துப் பிரதிகளை
ஆர்டர் செய்தார். பள்ளி முதல்வர் ஒருவர், பள்ளி ஆண்டின் இறுதியில் சிறந்த மாணவர்களுக்குப் பரிசு வழங்க ஐந்து பிரதிகளைக் கேட்டார்.பைபிள் வசனங்களை இந்தப் புதிய மொழிபெயர்ப்பு மிகக் கவனமாக மொழிபெயர்த்திருப்பதால், மூல வார்த்தைகளின் அர்த்தத்தை நன்கு புரிந்துகொள்ள உதவுவதாக அநேகர் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் புரிந்துகொள்ள புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் சமோவா மக்களுக்கு உதவியிருக்கிறது. யூப்போலூவில் உள்ள வைலீலி என்ற இடத்தில் விசேஷ பயனியராகச் சேவை செய்த ஃபினா ஃபினா என்ற சகோதரர் ஒரு பெண்ணிடம் பேசும்போது, இயேசுவின் மாதிரி ஜெபத்தைப் பயன்படுத்தி கடவுளுடைய பெயரின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவினார்.
மத்தேயு 6:9-ஐ வாசித்த பிறகு, “இதில் வாசித்தபடி, யாருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார் ஃபினா.
“கர்த்தருடைய பெயர்” என்று அவள் பதில் சொன்னாள்.
“ஆனால், அநேக ‘கர்த்தாக்களும்’ அநேக ‘தேவர்களும்’ இருப்பதாக 1 கொரிந்தியர் 8:5 சொல்கிறதே, கர்த்தாக்கள் என்று பொய்க் கடவுட்கள் அழைக்கப்படும்போது, உண்மைக் கடவுளை எப்படி அதே பெயரில் அழைக்க முடியும்?” என்று கேட்டார் ஃபினா.
இப்படிக் கேட்ட பின், யெகோவா என்ற பெயரை பைபிளிலிருந்து காட்டினார், பின்பு, கிறிஸ்தவ மண்டலம் அதைத் தங்களுடைய பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து நீக்கிவிட்டதைப் பற்றி விளக்கினார். தான் சொல்ல வந்ததை இன்னும் நன்றாகப் புரியவைப்பதற்கு இவ்வாறு கேட்டார்: “யாராவது ஒருவர், உங்கள் குடும்பத்துப் பெரியவரின் பெயரை மாற்றிவிடவோ நீக்கிவிடவோ முயற்சி செய்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எப்படி இருக்கும்?”
“கோபம் தலைக்கேறும்” என்றாள் அந்தப் பெண்.
“சரியாகச் சொன்னீர்கள், பைபிளிலிருந்து தம்முடைய பெயர் நீக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது யெகோவா தேவனுக்கும்கூட அப்படித்தான் இருக்கும்” என்றார் ஃபினா.
[படம்]
சமோவா மொழியில் “கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு”
[பக்கம் 126, 127-ன் பெட்டி/ படங்கள்]
“யெகோவா என்னை நூறு மடங்கு ஆசீர்வதித்திருக்கிறார்”
லூமேபா யங்
பிறப்பு 1950
ஞானஸ்நானம் 1989
பின்னணிக் குறிப்பு இவர் முன்னாள் பிரதம மந்திரியின் மகள்; தற்போது அபியாவில் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிறார்.
வியாபாரத்திலும் அரசியலிலும் கொடிகட்டிப் பறந்த ஒருவரின் மகளாக நான் சவாயி தீவில் வளர்ந்தேன். என் அப்பாவுக்குச் சொந்தமாய் மிகப் பெரிய கோகோ தோட்டம் இருந்தது, சுமார் 200 பேர் அங்கு வேலை செய்தார்கள்; எனவே, கோகோ அதிபர் என அவரை சமோவாவின் செய்தித்தாள்கள் அழைத்தன. அவர் அநேக வருடங்கள் சமோவாவின் பிரதம மந்திரியாய் இருந்தார்.
என்னுடன் பிறந்தவர்கள் 11 பேர். அப்பாவுக்கு அந்தளவு மதப்பற்று கிடையாது; ஆனால், அம்மா எங்களுக்கு பைபிளைப் பற்றி ஓரளவுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவருடைய இறப்பை என்னால் துளியும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, ஜூடி பிரிச்சர்ட் என்ற மிஷனரி சகோதரி உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி என்னிடம் சொன்னபோது, அம்மாவை மீண்டும் பார்க்க முடியும் என்ற எண்ணத்தில் மெய்சிலிர்த்துப்போனேன்!
ஜூடியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டேன். எல்லாக் கேள்விகளுக்கும் பைபிளிலிருந்து அவர் பதில் அளித்தார். சீக்கிரத்திலேயே நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தோம். பின்னர் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில், எங்கள் கிராமத்திலுள்ள சர்ச்சில் தலைமை மதகுருவாக இருந்த என் கணவர் ஸ்டீவ் நான் பைபிள் படிப்பதை விரும்பவில்லை. பல்வேறு மதகுருமார்களிடம் அவர் என்னை அழைத்துச் சென்றார்; அவர்கள் எப்படியாவது என் மனதை மாற்றி, யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு நான் போகாதபடி செய்ய முயன்றார்கள். அவர்கள் பேச்சை நான் கேட்கவில்லை. அடுத்ததாக என் கணவர் என்னை என் அப்பாவிடம் அழைத்துச் சென்றார்; அவரோ, பைபிள் படிப்பை வீட்டில் படிக்காமல் வேறெங்காவது போய்ப் படிக்கும்படி மட்டுமே ஆலோசனை சொன்னார். ஆனால், என் கூடப்பிறந்தவர்கள் ‘மதம் மாறப் போகிறாயா?’
என்று கேட்டு, கிண்டல் செய்தார்கள். நானோ பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதை நிறுத்தவில்லை.கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்க நான் தகுதி பெற்றேன்; ஊழியத்தில் நான் சென்ற முதல் வீடு சட்டசபையில் என் அப்பாவுடன் மந்திரியாகப் பணியாற்றிய ஒருவருடையதாக இருந்தது. அப்பாவின் வீட்டில் நடக்கும் அரசியல் கூட்டங்களுக்கு அவர் அடிக்கடி வருவார்; அதனால் அவருக்கு என்னை நன்றாகத் தெரியும். எனக்கு ஒரே பயமாகிவிட்டது! என்னுடன் இருந்த சகோதரிக்குப் பின்னால் மறைந்துகொண்டேன். நான் நற்செய்தியை அறிவிப்பதைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்; “உன் அப்பா எப்படி ஒத்துக்கொண்டார்?” என்று கேட்டார்கள். அப்பா நியாயமான மனிதர், அவர் என் மத நம்பிக்கையை ஆதரித்தார். மேலும், அந்தச் சமயத்தில் அவர் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசிக்க ஆரம்பித்திருந்தார்.
ஒருவழியாக மனித பயத்தை ஓரங்கட்டிவிட்டு, ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பைபிள் படிப்புகளை நடத்துவதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பைபிளைப் படிக்க ஆர்வமுள்ள சுமார் 50 நபர்களின் பெயரைப் பட்டியலிட்டு எப்போதும் கைவசம் வைத்திருப்பேன். என் பழைய பைபிள் படிப்புகளில் ஒன்றிரண்டு நின்றுவிடும்போது, இவர்களில் சிலருக்கு பைபிள் படிப்பு நடத்தத் தொடங்குவேன். ஆனால் எல்லாவற்றையும்விட என் நான்கு பிள்ளைகளுக்கும் பைபிள் சத்தியத்தைக் கற்பித்ததுதான் எனக்குப் பேரானந்தத்தைத் தந்தது. என் மகள் ஃபோடுவோசாமோவாவும் அவளது கணவன் ஆன்ட்ரூவும், என் மகன் ஸ்டீவனும் அவனது மனைவி ஆனாவும் சமோவா பெத்தேலில் இப்போது சேவை செய்கிறார்கள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ள என் தங்கை மானூவுக்கும் நான் உதவினேன். ஒரு சமயம் என்னை எதிர்த்த என் கணவர் ஸ்டீவும்கூட பைபிளைப் படிக்கவும் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்துவிட்டார். சந்தேகமேயில்லை, யெகோவா என்னை நூறு மடங்கு ஆசீர்வதித்திருக்கிறார்.
[படங்கள்]
இடது: ஃபோடுவோசாமோவா கோ மற்றும் ஆன்ட்ரூ கோ; வலது: ஆனா யங் மற்றும் ஸ்டீவன் யங்
[பக்கம் 129, 130-ன் பெட்டி/ படம்]
யெகோவாவா? கோல்ஃப் ஆட்டமா?
லூஸி லாஃபைடீலே
பிறப்பு 1938
ஞானஸ்நானம் 1960
பின்னணிக் குறிப்பு கோல்ஃப் ஆட்டக்காரர் ஆவதற்குப் பதிலாக பயனியர் ஊழியம் செய்ய இவர் தீர்மானித்தார்.
அப்போது எனக்கு 18 வயது; எங்கள் வீட்டுக்கு எதிரே வசித்துவந்த குடும்பத்தார் யெகோவாவின் சாட்சிகள் என்றழைக்கப்பட்ட மதத்தில் சேர்ந்துவிட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், அவர்களுடைய வீட்டுக்குப் போய் அவர்களது அப்பா சீயெம்மூ டாஸேயைச் சந்தித்தேன். யெகோவா என்ற கடவுளுடைய பெயரை நீங்கள் ஏன் பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டேன். அவர் கனிவோடு பைபிளிலிருந்து எடுத்துக்காட்டி விளக்கியது என்னைக் கவர்ந்தது. அவர் எனக்கு பைபிள் படிப்பு நடத்தினார்; பின்பு, நான் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். இது என் அப்பாவுக்குத் தெரிந்தபோது அவர் என்னைத் தடுத்தார். கூட்டங்களுக்குச் செல்ல அனுமதிக்கும்படி அவரிடம் கெஞ்சினேன்; அவரோ, யெகோவாவின் சாட்சிகளுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாதெனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஆனால், மறுநாளே அவர் மனம் மாறியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். “யெகோவாவே, தயவுசெய்து எனக்கு உதவுங்கள்!” என்று சொல்லி அன்று தூக்கத்தில் நான் அழுததாக என் அத்தை பின்னர் என்னிடம் சொன்னார். ஆம், தூக்கத்தில் நான் ஏதோ பேசியிருக்கிறேன். அப்பா அதைக் கேட்டிருக்கிறார். எப்படியோ, என் அழுகை அப்பாவின் இருதயத்தை நெகிழ வைத்ததில் எனக்குச் சந்தோஷம்.
என் வீட்டின் எதிர்ப்புறம் கோல்ஃப் மைதானமும் இருந்தது. சமோவாவிலுள்ள ஒரே கோல்ஃப் மைதானம் இதுதான். இங்கே காணாமல் போகும் பந்துகளைக் கண்டெடுத்து, விற்று, அந்தக் காசைக் கைச்செலவுக்குப் பயன்படுத்திக்கொண்டேன். சமோவாவின் தலைவராக இருந்த மலீடோவா ராஜாவின் கோல்ஃப் மட்டையையும் பிற சாதனங்களையும் தூக்கி வருபவனாக அவரிடம் வேலை செய்தேன். கோல்ஃப் ஆட்டக்காரன் ஆவதற்கான திறமை எனக்கு இருப்பதாக ராஜா நினைத்தார்; எனவே, அவருடைய பழைய கோல்ஃப் மட்டைகளை எனக்குக் கொடுத்தார். கோல்ஃப் ஆட்டக்காரனாக எனக்காகும் செலவைப் பார்த்துக்கொள்ள
உள்ளூர் வியாபாரிகள் இருவரை அவர் ஏற்பாடு செய்தார். கோல்ஃப் விளையாட்டில் எனக்குள்ள திறமை “சமோவாவுக்குப் புகழ் சேர்க்கும்” என அவர் நினைத்தார். எனக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! ஆனால் சீக்கிரத்தில் இந்த விளையாட்டு யெகோவாவுக்குச் சேவை செய்வதிலிருந்து என்னைத் திசைதிருப்புவதுபோல் உணர்ந்தேன். இதனால் என் மனசாட்சி உறுத்த ஆரம்பித்தது.நான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டம் வந்தது; சர்வதேச கோல்ஃப் ஆட்டக்காரர்களுடன் மோதி சமோவன் ஓப்பன் கோல்ஃப் சாம்பியன்ஷிப்பை வென்றிருந்த சமயம் அது. ராஜாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை; பரிசளிப்பதற்கு அவர் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோல்ஃப் ஆட்டக்காரர் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்க விரும்பினார். எனக்குத் தர்மசங்கடமாகிவிட்டது; ‘இப்போது நீ தீர்மானம் எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. கோல்ஃப் ஆட்டக்காரனாகப் போகிறாயா? யெகோவாவுக்குச் சேவை செய்யப் போகிறாயா?’ என என்னையே கேட்டுக்கொண்டேன். அந்த இரவு விருந்தில் கலந்துகொள்வதற்குப் பதிலாக வட்டார மாநாட்டின் ஒத்திகைக்குச் சென்றேன்.
ராஜா எந்தளவு கோபத்தில் கொதித்துப்போயிருப்பார் என்பதைச் சொல்லவே வேண்டாம். விருந்தில் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை அப்பா கேட்டபோது அவரிடம் நீண்ட நேரம் பேசினேன்; யெகோவாவுக்குச் சேவை செய்வதை நான் ஏன் அதிக முக்கியமானதாகக் கருதுகிறேன் என்பதை விவரமாய் விளக்கினேன். அதைக் கேட்டு அவர் அழ ஆரம்பித்தார்; எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. பின்பு அவர், “ஐந்து வயதில் நீ படுத்த படுக்கையாகக் கிடந்தாய்; நீ இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். கல்லறைக் குழியில் உன்னை இறக்கும்போது ஒரு தேனீ உன் முகத்தில் கொட்டியது. அப்போது நீ வீலெனக் கத்தி அழ ஆரம்பித்தாய். யெகோவா தேவனுக்குச் சாட்சியாக ஆவதற்கே நீ அன்று பிழைத்தாய் என நினைக்கிறேன்” என்றார். அதன் பிறகு அவர் என்னை எதிர்க்கவே இல்லை.
நியுஜிலாந்துக்குக் குடிமாறிப் போன பிறகு பத்து வருடங்களுக்கு ஒழுங்கான பயனியராகவும், பின்னர் விசேஷ பயனியராகவும் சேவை செய்தேன்; விசேஷ பயனியராக இருந்த ராபன் என்ற பெண்ணைக் கரம்பிடித்தேன். காலப்போக்கில், எங்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள், நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குக் குடிமாறிச் சென்றோம். குடும்பத்தைப் பராமரிப்பதற்காக அடுத்த 30 வருடங்கள் வேலைக்குச் சென்றேன். இதற்கிடையில், சத்தியத்தை ஏற்றுக்கொள்ள எங்கள் உறவினர் பலருக்கு நாங்கள் உதவினோம். மீண்டும் பயனியர் ஊழியம் செய்ய ஏங்கியதால் எனக்கு உதவும்படி அடிக்கடி யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். 2004-ல் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு ஒருவழியாக என் ஆசை நிறைவேறியது. கோல்ஃப் ஆட்டக்காரனாய் ஆகாமல் யெகோவாவுக்குச் சேவை செய்யத் தீர்மானித்ததற்காக அதிக சந்தோஷப்படுகிறேன்.
[பக்கம் 135-ன் பெட்டி/ படம்]
பெற்றோரின் பயிற்சியால் பலன்கள்
பானாபா லூயி
பிறப்பு 1967
ஞானஸ்நானம் 1985
பின்னணிக் குறிப்பு இவரும் இவருடைய மனைவி மரீட்டாவும் சமோவாவில் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள்.
எங்கள் மகன் சோப்பாவை ஆரம்பப் பள்ளியில் சேர்த்தபோது யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் என்ற சிற்றேட்டை, தலைமை ஆசிரியரிடம் கொடுத்தேன்; மதம், நாட்டுப்பற்று ஆகியவை சம்பந்தமாக நம்முடைய நிலைநிற்கையை விளக்கினேன்.
பள்ளியில் மறுநாள் நடந்ததை சோப்பா வந்து எங்களிடம் சொன்னான். மாணவர்கள், ஆசிரியர்கள் என எல்லாரும் ஒன்றுகூடியிருந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அந்தச் சிற்றேட்டைக் கிழித்துப் போட்டிருக்கிறார்; அதோடு, யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பிள்ளைகளை மதப் பாடல் ஒன்றைப் பாடும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். அவர்கள் பாட மறுத்தபோது, அந்தக் கூட்டத்திற்கு முன்பு இவர்களை நிற்க வைத்து, இவர்களுடைய மதப் பாடல் ஒன்றைப் பாடச் சொல்லியிருக்கிறார். இப்படிச் சொன்னால் பயந்துபோய் தான் சொன்னபடி கேட்டு நடப்பார்கள் என அவர் நினைத்திருக்கிறார். சோப்பாவோ, யெகோவாவின் சாட்சிகளாயிருந்த பிள்ளைகளிடம், “‘யெகோவாவே, உமக்கு நன்றி’ என்ற பாடலைப் பாடுவோம், வாருங்கள்” என்று அவர்களை ஊக்கப்படுத்தி, பாட ஆரம்பித்திருக்கிறான், பின்பு அவர்களும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.
தலைமை ஆசிரியர் அசந்துவிட்டார், சோப்பாவின் தைரியத்தைப் பார்த்து “சபாஷ்” சொல்லியிருக்கிறார். அவரும் ஆசிரியர்களில் சிலரும் பின்னர் சத்தியத்திடம் ஆர்வம் காட்டினார்கள். இந்தத் தலைமை ஆசிரியர் எங்களைப் பார்க்கும்போதெல்லாம், சோப்பாவைப் பற்றி விசாரிப்பார், கேட்டதாகச் சொல்லச் சொல்வார். சத்தியத்தில் சோப்பா நல்ல முன்னேற்றம் செய்தான், 2005-ல் ஞானஸ்நானம் பெற்றான்.
[பக்கம் 138-ன் பெட்டி/ படம்]
“கூட்டங்களுக்குப் போவது கஷ்டமாகவே இல்லை”
வாலூ லாடோனூ
பிறப்பு 1949
ஞானஸ்நானம் 1995
பின்னணிக் குறிப்பு இவரும் இவருடைய ஆறு பிள்ளைகளும் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக மலைமீது 22 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார்கள்.
வருடம் 1993-ல் லிஃபங்காவிலுள்ள எங்கள் வீட்டிற்கு யெகோவாவின் சாட்சிகள் வந்தார்கள். நான் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டேன். சீக்கிரத்திலேயே நானும் பிள்ளைகளும், தீவின் மறுகரையில் 22 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஃபலேசியு என்ற இடத்தில் நடைபெற்ற கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தோம்.
வாரநாட்களில் நடந்த கூட்டங்களுக்காகப் பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து சீக்கிரத்திலேயே அழைத்துச் செல்வேன். சில ஆசிரியர்கள் பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து நீக்கிவிடப் போவதாகப் பயமுறுத்தினார்கள்; சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டது, முக்கியமானது என்பதை விளக்கிய பிறகு அவர்கள் சமாதானம் அடைந்துவிட்டார்கள். பிள்ளைகள் தனித்தனியாகத் தங்கள் உடைகளையும் பைபிள், பாட்டுப் புத்தகம், படிக்கும் பிரசுரம் ஆகியவற்றையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்துவருவார்கள். சில சமயங்களில் எங்களைக் கடந்து சென்ற பஸ்ஸில் ஏறிச் சென்றோம்; ஆனால், பெரும்பாலும் நாங்கள் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்றோம்.
ஒருவழியாக நாங்கள் ஃபலேசியு ராஜ்ய மன்றத்தை அடைந்தபோது அங்கிருந்த சாட்சிகள் எங்களை இருகரம் நீட்டி வரவேற்றார்கள், உணவு தந்து உபசரித்தார்கள். குளித்து உடைமாற்றிச் செல்லவும் அனுமதித்தார்கள். கூட்டத்திற்குப் பிறகு, மீண்டும் அந்த நீண்ட தூர நடைப் பயணத்தைத் துவங்கினோம். தீவின் நடுவில் அமைந்திருந்த மலை முகட்டில்,
பிள்ளைகள் சற்றுத் தூங்கி ஓய்வெடுப்பதற்காகப் பயணத்தை நிறுத்தினோம். வீடுவரை எங்களைக் கொண்டுபோய் இறக்கிவிட ஏதாவது வண்டி அந்தப் பக்கம் வருகிறதாவென நான் பார்த்துக்கொண்டே இருப்பேன். பொதுவாக, நள்ளிரவுக்குப் பிறகுதான் நாங்கள் வீடுபோய்ச் சேருவோம். மறுநாள், ஃபலேசியுவுக்குச் செல்லும் முதல் பஸ்ஸைப் பிடித்து, அங்கு சென்று ஊழியம் செய்வதற்காகக் காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பேன்.ஒருசமயம், கிராமத் தலைவர் தலைமை தாங்கிய கூட்டத்திற்கு வரும்படி எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அங்கே, ஊர்ப்பெரியவர்கள் எல்லாரும் கூடியிருந்தார்கள். கிராமத்தில் என் தாத்தா நிறுவிய சர்ச் இருக்கும்போது அதற்குச் செல்லாமல் இங்கிருந்து வெகு தூரத்திலுள்ள ஃபலேசியுவுக்குச் செல்வதற்கான காரணத்தை அவர்கள் கேட்டார்கள். கடைசியில், ஃபலேசியுவில் நடக்கும் சபைக் கூட்டங்களுக்குப் போகக் கூடாதெனக் கட்டளையிட்டார்கள். யார் தடுத்தாலும்சரி கூட்டங்களுக்குப் போவதை நிறுத்தக் கூடாது என நான் உறுதியாய் இருந்தேன். மனிதனுக்கு அல்ல, கடவுளுக்குக் கீழ்ப்படியவே தீர்மானமாய் இருந்தேன்.—அப். 5:29.
சீக்கிரத்தில் பிரச்சினை முற்றிப்போனது. சர்ச்சின் தலைமைக் குருவும், உதவி குருமார்களும், ஊர்ப்பெரியவரும் கலந்துகொள்ளும் டோவோன்னயி என்ற ஞாயிறு விருந்து ஒன்று நடைபெற்றது. அதில் நான் கலந்துகொள்ளாததால், ஐந்து பெரிய பன்றிகளைச் செலுத்தும்படி பஞ்சாயத்தில் எனக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆறு பிள்ளைகளுடன் நான் தனிமரமாய் நின்றதால், அது எனக்குப் பெரிய சுமையாய் இருந்தது. எனினும், என் மந்தையிலிருந்து ஐந்து பன்றிகளை நான் அபராதம் செலுத்தினேன். நாங்கள் உறுதியாக நின்றதைக் கண்ட கிராமவாசிகள், காலப்போக்கில் சத்தியத்தை மதிக்க ஆரம்பித்தார்கள், அதன்பின் அவர்கள் எங்களை எதிர்க்கவில்லை.
இத்தனை வருடங்களாகக் கூட்டங்களுக்குப் போகப் பெருமுயற்சி எடுக்க வேண்டியிருந்தது. என்றாலும், அதற்கு நல்ல பலன்கள் கிடைத்தன. என் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவுக்கு ஊக்கமாய்ச் சேவை செய்து வருகிறார்கள். ஒரு மகன் உதவி ஊழியராகச் சேவை செய்கிறான். என் உறவினர்களில் இருவர் கூட்டங்களுக்கு வருகிறார்கள், ஒருவர் உதவி ஊழியராக இருக்கிறார்.
நானும் என் பிள்ளைகளும் இன்றுவரையாகக் கூட்டங்களுக்கு நடந்துதான் செல்கிறோம். ஆனால் 22 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஃபலேசியுவுக்கு அல்ல, எங்கள் கிராமத்திலேயே, அதுவும் எங்கள் தெருவிலேயே உள்ள அழகிய ராஜ்ய மன்றத்திற்கு! 2001-ல் அது புதிதாகக் கட்டப்பட்டது. செழித்தோங்குகிற சபை ஒன்று இங்கே கூடிவருகிறது. எனவே, இப்போதெல்லாம் கூட்டங்களுக்குப் போவது கஷ்டமாகவே இல்லை.
[பக்கம் 132, 133-ன் அட்டவணை/ வரைபடம்]
கால வரலாறு சமோவா
1930
1931 சமோவா மக்கள் நற்செய்தியை முதன்முதலாகக் கேட்கிறார்கள்.
1940
1940 சமோவா மொழியில் முதன்முதல் வெளியான மரித்தோர் எங்கே இருக்கின்றனர்? என்ற சிறுபுத்தகத்தை ஹெரல்ட் கில் விநியோகிக்கிறார்.
1950
1953 அபியாவில் முதல் சபை உருவாகிறது.
1955 அமெரிக்கன் சமோவாவில் ஊழியம் செய்ய கிலியட் மிஷனரிகள் வருகிறார்கள்.
1955 புதிய உலக சமுதாயம் செயலில் படக்காட்சி அமெரிக்கன் சமோவா எங்கும் காட்டப்படுகிறது.
1957 அமெரிக்கன் சமோவாவில் முதல் வட்டார மாநாடு நடைபெறுகிறது.
1958 சமோவன் மொழியில் காவற்கோபுர பத்திரிகையின் மொழிபெயர்ப்பு ஆரம்பமாகிறது.
1959 மேற்கு சமோவாவில் முதல் வட்டார மாநாடு நடைபெறுகிறது.
1960
1974 சமோவாவில் ஊழியம் செய்ய மிஷனரிகள் வருகிறார்கள். டோகிலாவ் என்ற இடத்தில் ஊழியம் ஆரம்பிக்கப்படுகிறது.
1980
1984 அபியாவிலுள்ள சினமோகா என்ற இடத்தில் கிளை அலுவலகம் அமைக்கப்படுகிறது.
1990
1991 வேல் சூறாவளி தீவுகளைச் சூறையாடுகிறது.
1993 ஆங்கில காவற்கோபுரம் வெளியாகும் அதே நேரத்தில் சமோவன் மொழி காவற்கோபுரம் வெளியாகிறது. புதிய பெத்தேல் இல்லமும் மாநாட்டு மன்றமும் யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகின்றன.
1996 “உங்கள் பைபிள் கேள்விகளுக்குப் பதில்” என்ற நிகழ்ச்சி எஃப்எம் ரேடியோ நிலையத்திலிருந்து வாரா வாரம் ஒலிபரப்பப்படுகிறது.
1999 ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
2000
2007 சமோவன் மொழியில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது.
2010
[வரைபடம்]
(பிரசுரத்தைக் காண்க)
மொத்த பிரஸ்தாபிகள்
மொத்த பயனியர்கள்
700
400
100
1930 1940 1950 1960 1970 1980 1990 2000 2010
[படம்]
ஃபிரான்சஸ் ஈவான்ஸ், பால் ஈவான்ஸ் தம்பதியர்
[பக்கம் 73-ன் தேசப்படங்கள்
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஹவாய்
ஆஸ்திரேலியா
நியுஜிலாந்து
டோகிலாவ்
ஸ்வென்ஸ் தீவு
சமோவா
அமெரிக்கன் சமோவா
மனுவா தீவுகள்
ரோஸ் பவழத் தீவு
தென் பசிபிக் பெருங்கடல்
நியூ
சர்வதேசத் தேதிக் கோடு புதன்
.......................................
வியாழன்
டங்கா
அமெரிக்கன் சமோவா
டூடுயீலா
பாகோ பாகோ
பெடேஸா
டாஃபூனா
பகடோகோ
லௌலி
அவ்னுவு
சமோவா
சவாயி
ஆவோபோ
லட்டா
டோங்கா
ஃபங்கா
சலிமு
ஃபங்காபா
யூப்போலூ
அபியா
ஃபலேசியு
சியூசெங்கா
வைலெலெ
லெஃபங்கா
வவ்வௌ
அபியா
வையாலா
ஃபாட்டோயியா
சினமொங்கா
[பக்கம் 66-ன் முழுபக்க படம்]
[பக்கம் 74-ன் படம்]
பெலே ஃபியுயாயூபோலுவும் அவருடைய மனைவி ஐலுவாவும்தான் சமோவாவில் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்த முதல் நபர்கள்
[பக்கம் 81-ன் படம்]
ரோனல்ட் மற்றும் டாலி செல்லர்ஸ் 1953-ல் தேவை அதிகமாயிருந்த சமோவாவுக்கு மாறிச்சென்றார்கள்
[பக்கம் 84-ன் படம்]
ஜனவரி 1955-ல் ரிச்சர்ட் ஜென்கென்ஸ், குளோரியா ஜென்கென்ஸ் தங்கள் மணநாள் அன்று
[பக்கம் 85-ன் படம்]
கேர்லி மாஸ், பில் மாஸ் சமோவாவுக்குப் போகும் வழியில்
[பக்கம் 95-ன் படம்]
சமோவாவில் உள்ள ஒரு வீடு
[பக்கம் 100-ன் படம்]
அபியாவிலுள்ள இந்த ராஜ்ய மன்றம்தான் சமோவாவிலேயே முதன்முதலாகக் கட்டப்பட்டது
[பக்கம் 107-ன் படம்]
அமெரிக்கன் சமோவாவில், ஆரம்பத்திலிருந்த டாஃபூனா ராஜ்ய மன்றம்
[பக்கம் 115-ன் படம்]
மெட்டுசேலா நேரூ
[பக்கம் 116-ன் படம்]
சௌமாலூ டௌவாயனை
[பக்கம் 131-ன் படம்]
இளம் வயதிலேயே சத்தியத்திற்காக நிலைநிற்கை எடுத்த ஆனி ரோபாடி (இப்போது ஆனி கால்ட்)
[பக்கம் 141-ன் படங்கள்]
சமோவா அலுவலகமும் பெத்தேலும்
சமோவா நாட்டு ஆலோசனைக் குழு: ஹிடாயூகி மொடோயி, ஃபிரெட் வெகனர், சீவோ டௌவா, லீவா ஃபாஐயூ