நீதிமொழிகள் 28:1-28
28 யாரும் துரத்தாமலேயே பொல்லாதவர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.ஆனால், நீதிமான்கள் சிங்கத்தைப் போலத் தைரியமாக நிற்கிறார்கள்.+
2 மக்கள் கலகம் செய்தால்* ராஜாக்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.+ஆனால், பகுத்தறியும் திறனும் அறிவும் உள்ளவரின் உதவி இருந்தால் ராஜா நீண்ட காலம் நிலைத்திருப்பார்.+
3 எளியவனை மோசடி செய்கிற ஏழை,+விளைச்சலையெல்லாம் அடித்துக்கொண்டு போகிற மழைபோல் இருக்கிறான்.
4 சட்டத்தை ஒதுக்கித்தள்ளுகிறவர்கள் பொல்லாதவனைப் புகழ்கிறார்கள்.ஆனால், சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் அவர்களைப் பார்த்துக் கொதிப்படைகிறார்கள்.+
5 அக்கிரமக்காரர்களால் நீதி நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியாது.ஆனால், யெகோவாவைத் தேடுகிறவர்களால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும்.+
6 குறுக்கு வழிகளில் போகிற பணக்காரனைவிட,உத்தமமாக நடக்கிற ஏழையே மேல்.+
7 புத்தியுள்ள* மகன் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறான்,ஆனால், பெருந்தீனிக்காரர்களோடு பழகுகிறவன் தன் அப்பாவுக்கு அவமானத்தைக் கொண்டுவருகிறான்.+
8 வட்டி வாங்கியும்+ அநியாயமாக லாபம் சம்பாதித்தும் சேர்க்கப்படுகிற சொத்து,ஏழைக்கு இரக்கம் காட்டுகிற மனிதனுக்குத்தான் போய்ச் சேரும்.+
9 ஒருவன் சட்டத்தைக் கேட்க விரும்பாவிட்டால்,அவனுடைய ஜெபம் அருவருப்பானதாக இருக்கும்.+
10 நேர்மையானவனைக் கெட்ட வழியில் கொண்டுபோகிறவன், தான் வெட்டிய குழியிலேயே விழுவான்.+ஆனால், குற்றமற்றவன் நல்ல பலனைப் பெறுவான்.+
11 பணக்காரன் தனக்கு ஞானம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறான்.+ஆனால் பகுத்தறிவுள்ள ஏழை, அவனைச் சரியாக எடைபோடுகிறான்.+
12 நீதிமான்கள் வெற்றி பெற்றால் மகா கொண்டாட்டமாக இருக்கும்.ஆனால், பொல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனங்கள் ஓடி ஒளிந்துகொள்வார்கள்.+
13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+
14 எப்போதும் கவனமாக* நடந்துகொள்கிறவன் சந்தோஷமானவன்.ஆனால், தன் இதயத்தை இறுகிப்போகச் செய்பவன் ஆபத்தில் சிக்கிக்கொள்வான்.+
15 ஆதரவற்ற மக்களை ஆட்சி செய்கிற பொல்லாத ராஜா,கர்ஜிக்கிற சிங்கத்தைப் போலவும் தாக்க வருகிற கரடியைப் போலவும் இருக்கிறான்.+
16 பகுத்தறிவு இல்லாத தலைவன் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறான்.+ஆனால், அநியாயமாக லாபம் சம்பாதிப்பதை வெறுக்கிறவன் நீண்ட காலம் வாழ்வான்.+
17 கொலைப்பழியை* சுமக்கிறவன் கல்லறைக்குப் போகும்வரை பயந்து பயந்து ஓடிக்கொண்டிருப்பான்.+
அவனுக்கு யாரும் ஆதரவு தர வேண்டாம்.
18 குற்றமற்ற வழியில் நடக்கிறவன் காப்பாற்றப்படுவான்.+ஆனால், குறுக்கு வழிகளில் நடக்கிறவன் திடீரென்று விழுந்துவிடுவான்.+
19 நிலத்தை உழுகிறவனுக்கு உணவுப் பஞ்சமே வராது.ஆனால், வீணான காரியங்களைச் செய்கிறவனுக்கு வறுமைதான் வரும்.+
20 உண்மையாக நடக்கிறவன் நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுவான்.+ஆனால், சீக்கிரத்தில் பணக்காரனாக நினைக்கிறவன் குறுக்கு வழியில் போய்விடுவான்.+
21 பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல.+ஆனால், ஒரு துண்டு ரொட்டிக்காகக்கூட ஒருவன் தவறு செய்துவிடலாம்.
22 பொறாமைபிடித்தவன்* சொத்து சேர்ப்பதில் வெறியாக இருக்கிறான்.ஆனால், வறுமை அவனைத் துரத்திப் பிடித்துவிடுமென்று தெரியாமல் இருக்கிறான்.
23 போலியாகப் புகழ்கிறவனைவிடவெளிப்படையாகக் கண்டிக்கிறவனைத்தான்+ ஒருவன் பிற்பாடு பாராட்டுவான்.+
24 அப்பாவிடமும் அம்மாவிடமும் திருடிவிட்டு, “இது ஒன்றும் தப்பில்லை” என்று சொல்கிறவன்,
நாசம் உண்டாக்குகிறவனுக்குக் கூட்டாளியாக இருக்கிறான்.+
25 பேராசைபிடித்தவன்* வாக்குவாதங்களை உண்டாக்குகிறான்.ஆனால், யெகோவாவை நம்புகிறவன் செழிப்பாக வாழ்வான்.+
26 தன்னுடைய இதயத்தையே நம்புகிறவன் முட்டாள்.+ஆனால், ஞானமாக நடக்கிறவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.+
27 ஏழைகளுக்குக் கொடுத்து உதவுகிறவனுக்கு ஒரு குறையும் வராது.+ஆனால், அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறவனுக்கு நிறைய சாபங்கள் வரும்.
28 பொல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒருவன் ஒளிந்துகொள்வான்.ஆனால், அவர்கள் அழிந்துபோனால் நீதிமான்கள் பெருகுவார்கள்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “சட்டவிரோதமாக நடந்தால்.”
^ வே.வா., “புரிந்துகொள்ளுதல் உள்ள.”
^ வே.வா., “பயத்தோடு.”
^ வே.வா., “இரத்தப்பழியை.”
^ வே.வா., “பேராசைபிடித்தவன்.”
^ அல்லது, “அகம்பாவம்பிடித்தவன்.”