கேள்வி 18
கடவுளுடைய நண்பராவது எப்படி?
“ஜெபத்தைக் கேட்கிறவரே, எல்லா விதமான மக்களும் உங்களைத் தேடி வருவார்கள்.”
“யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு. உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே. எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய். அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.”
“ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.”
‘உண்மையில், அவர் [கடவுள்] நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை.’
“அன்பிலும் திருத்தமான அறிவிலும் முழுமையான பகுத்தறிவிலும் நீங்கள் அதிகமதிகமாகப் பெருக வேண்டும் என்று . . . தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்.”
“உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாக இருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களை அவர் திட்ட மாட்டார். எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற கடவுள் அவனுக்கும் கொடுப்பார்.”
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்தமாக்குங்கள்; இரண்டு மனதாக இருக்கிறவர்களே, உங்கள் இதயங்களைத் தூய்மையாக்குங்கள்.”
“நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும். அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.”