கேள்வி 14
பணக்கஷ்டத்தைத் தவிர்ப்பது எப்படி?
“உல்லாசப் பிரியன் ஏழையாவான். திராட்சமதுவையும் எண்ணெயையும் விரும்புகிறவன் பணக்காரனாக மாட்டான்.”
“கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.”
“உங்களில் யாராவது ஒரு கோபுரம் கட்ட விரும்பினால், அதைக் கட்டி முடிக்க தனக்குப் போதுமான வசதி இருக்கிறதா என்று முதலில் செலவைக் கணக்கு பார்க்காமல் இருப்பானா? அப்படிச் செய்யாவிட்டால், அஸ்திவாரம் போட்ட பிறகு, அவனால் அதைக் கட்டி முடிக்க முடியாமல் போய்விடும். பார்ப்பவர்கள் எல்லாரும், ‘இந்த மனுஷன் கட்ட ஆரம்பித்தான், ஆனால் முடிக்க முடியவில்லை’ என்று சொல்லி அவனைக் கேலி செய்வார்கள்.”
“எல்லாரும் வயிறார சாப்பிட்டு முடித்த பிறகு அவர் தன்னுடைய சீஷர்களிடம், ‘எதுவும் வீணாகாதபடி, மீதியான ரொட்டித் துண்டுகளைச் சேகரியுங்கள்’ என்று சொன்னார்.”