Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

1 சாமுவேல் புத்தகம்

அதிகாரங்கள்

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • எல்க்கானாவும் அவருடைய மனைவிகளும் (1-8)

    • குழந்தை இல்லாத அன்னாள் ஒரு மகன் வேண்டுமென்று ஜெபம் செய்கிறாள் (9-18)

    • சாமுவேல் பிறக்கிறான்; யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்படுகிறான் (19-28)

  • 2

    • அன்னாளின் ஜெபம் (1-11)

    • ஏலியின் இரண்டு மகன்களும் செய்கிற பாவங்கள் (12-26)

    • ஏலியின் குடும்பத்தாருக்கு யெகோவா தீர்ப்பு கொடுக்கிறார் (27-36)

  • 3

    • சாமுவேல் ஒரு தீர்க்கதரிசி ஆகிறார் (1-21)

  • 4

    • பெலிஸ்தியர்கள் ஒப்பந்தப் பெட்டியைக் கைப்பற்றுகிறார்கள் (1-11)

    • ஏலியும் அவருடைய மகன்களும் செத்துப்போகிறார்கள் (12-22)

  • 5

    • பெலிஸ்தியர்களின் பகுதியில் ஒப்பந்தப் பெட்டி (1-12)

      • தாகோனுக்கு அவமானம் (1-5)

      • பெலிஸ்தியர்கள் மூலநோயால் தாக்கப்படுகிறார்கள் (6-12)

  • 6

    • பெலிஸ்தியர்கள் ஒப்பந்தப் பெட்டியை இஸ்ரவேலர்களிடம் திருப்பி அனுப்புகிறார்கள் (1-21)

  • 7

    • கீரியாத்-யெயாரீமில் ஒப்பந்தப் பெட்டி (1)

    • ‘யெகோவாவை மட்டுமே வணங்குங்கள்’ என்கிறார் சாமுவேல் (2-6)

    • மிஸ்பாவில் இஸ்ரவேலர்களுக்கு வெற்றி (7-14)

    • சாமுவேல் இஸ்ரவேலர்களுக்கு நீதிபதியாக இருக்கிறார் (15-17)

  • 8

    • ஒரு ராஜா வேண்டும் என்று இஸ்ரவேலர்கள் கேட்கிறார்கள் (1-9)

    • சாமுவேல் ஜனங்களை எச்சரிக்கிறார் (10-18)

    • ஒரு ராஜா வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு யெகோவா ஒப்புதல் அளிக்கிறார் (19-22)

  • 9

    • சவுலை சாமுவேல் சந்திக்கிறார் (1-27)

  • 10

    • ராஜாவாக சவுல் அபிஷேகம் செய்யப்படுகிறார் (1-16)

    • ஜனங்களுக்கு முன்னால் சவுல் கொண்டுவரப்படுகிறார் (17-27)

  • 11

    • அம்மோனியர்களை சவுல் தோற்கடிக்கிறார் (1-11)

    • சவுல்தான் ராஜா என்று மறுபடியும் அறிவிக்கப்படுகிறது (12-15)

  • 12

    • சாமுவேல் ஜனங்களிடம் கடைசியாகப் பேசுகிறார் (1-25)

      • “வீணான தெய்வங்களைத் தேடிப்போகாதீர்கள்” (21)

      • யெகோவா தன் ஜனங்களைக் கைவிட மாட்டார் (22)

  • 13

    • சவுல் படைவீரர்களைத் தேர்ந்தெடுக்கிறார் (1-4)

    • சவுல் அகங்காரத்தோடு நடந்துகொள்கிறார் (5-9)

    • சாமுவேல் சவுலைக் கண்டிக்கிறார் (10-14)

    • இஸ்ரவேலர்களிடம் எந்த ஆயுதங்களும் இல்லை (15-23)

  • 14

    • மிக்மாசில் யோனத்தானின் வீரச் செயல் (1-14)

    • இஸ்ரவேலர்களின் எதிரிகளைக் கடவுள் ஒழித்துக்கட்டுகிறார் (15-23)

    • சவுல் யோசிக்காமல் ஒரு கட்டளை கொடுக்கிறார் (24-46)

      • ஜனங்கள் இரத்தத்தோடு இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள் (32-34)

    • சவுலின் போர்கள்; அவருடைய குடும்பம் (47-52)

  • 15

    • சவுல் கீழ்ப்படியாமல் ஆகாகை உயிரோடு விட்டுவைக்கிறார் (1-9)

    • சவுலை சாமுவேல் கண்டிக்கிறார் (10-23)

      • “பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்” (22)

    • சவுல் ராஜாவாக இல்லாதபடி ஒதுக்கித்தள்ளப்படுகிறார் (24-29)

    • சாமுவேல் ஆகாகைக் கொன்றுபோடுகிறார் (30-35)

  • 16

    • சாமுவேல் தாவீதை அடுத்த ராஜாவாக அபிஷேகம் செய்கிறார் (1-13)

      • ‘யெகோவா இதயத்தைப் பார்க்கிறார்’ (7)

    • கடவுளுடைய சக்தி சவுலைவிட்டு விலகுகிறது (14-17)

    • தாவீது சவுலுக்கு யாழ் வாசிக்கிறவராக ஆகிறார் (18-23)

  • 17

    • தாவீது கோலியாத்தைத் தோற்கடிக்கிறார் (1-58)

      • இஸ்ரவேலர்களிடம் கோலியாத் சவால்விடுகிறான் (8-10)

      • தாவீது சவாலை ஏற்றுக்கொள்கிறார் (32-37)

      • தாவீது யெகோவாவின் பெயரில் போர் செய்கிறார் (45-47)

  • 18

    • தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையிலுள்ள நட்பு (1-4)

    • தாவீதின் வெற்றிகளைப் பார்த்து சவுல் பொறாமைப்படுகிறார் (5-9)

    • தாவீதைக் கொல்ல சவுலின் முயற்சி (10-19)

    • சவுலின் மகளான மீகாளை தாவீது கல்யாணம் செய்கிறார் (20-30)

  • 19

    • தாவீதின் மேல் சவுலின் வெறுப்பு அதிகமாகிறது (1-13)

    • சவுலிடமிருந்து தாவீது ஓடிப் போகிறார் (14-24)

  • 20

    • யோனத்தான் தாவீதுக்கு உண்மையாக இருக்கிறார் (1-42)

  • 21

    • நோபுவில் தாவீது படையல் ரொட்டியைச் சாப்பிடுகிறார் (1-9)

    • காத்தில் பைத்தியக்காரன்போல் தாவீது நடிக்கிறார் (10-15)

  • 22

    • அதுல்லாமிலும் மிஸ்பேவிலும் தாவீது (1-5)

    • நோபுவைச் சேர்ந்த குருமார்களை சவுல் கொன்றுபோடுகிறார் (6-19)

    • அபியத்தார் தப்பித்துவிடுகிறார் (20-23)

  • 23

    • கேகிலா நகரத்தாரை தாவீது காப்பாற்றுகிறார் (1-12)

    • சவுல் தாவீதை விடாமல் தேடி அலைகிறார் (13-15)

    • தாவீதை யோனத்தான் பலப்படுத்துகிறார் (16-18)

    • சவுல் தன்னை நெருங்கிவிட்டபோதும் தாவீது தப்பித்துக்கொள்கிறார் (19-29)

  • 24

    • தாவீது சவுலைக் கொல்லாமல் விடுகிறார் (1-22)

      • யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு தாவீது மதிப்புக் கொடுக்கிறார் (6)

  • 25

    • சாமுவேல் இறந்துபோகிறார் (1)

    • நாபால் தாவீதின் ஆட்களை அலட்சியப்படுத்துகிறான் (2-13)

    • அபிகாயில் ஞானமாகச் செயல்படுகிறாள் (14-35)

      • ‘யெகோவா உங்களுடைய உயிரைத் தன் பொக்கிஷப் பையில் வைத்துப் பாதுகாப்பார்’ (29)

    • புத்தியில்லாத நாபாலை யெகோவா தண்டிக்கிறார் (36-38)

    • அபிகாயில் தாவீதின் மனைவி ஆகிறாள் (39-44)

  • 26

    • தாவீது மறுபடியும் சவுலைக் கொல்லாமல் விடுகிறார் (1-25)

      • யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு தாவீது மதிப்புக் கொடுக்கிறார் (11)

  • 27

    • பெலிஸ்தியர்கள் தாவீதுக்கு சிக்லாகு ஊரைக் கொடுக்கிறார்கள் (1-12)

  • 28

    • ஆவிகளோடு பேசுகிற ஒரு பெண்ணை சவுல் எந்தோரில் சந்திக்கிறார் (1-25)

  • 29

    • பெலிஸ்தியர்கள் தாவீதை நம்ப மறுக்கிறார்கள் (1-11)

  • 30

    • அமலேக்கியர்கள் சிக்லாகுவைச் சூறையாடி அதைத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள் (1-6)

      • கடவுளுடைய உதவியால் தாவீது பலம் பெறுகிறார் (6)

    • தாவீது அமலேக்கியர்களை வீழ்த்துகிறார் (7-31)

      • பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களை தாவீது மீட்டுக்கொண்டு வருகிறார் (18, 19)

      • கைப்பற்றிய பொருள்களைப் பங்கிடுவது பற்றி தாவீது கொடுத்த விதிமுறை (23, 24)

  • 31

    • சவுலும் அவருடைய மகன்களில் மூன்று பேரும் இறந்துபோகிறார்கள் (1-13)